TDS அதிகமாக cut ஆகி விட்டதா? இந்த எளிய வழிகளில் திரும்பப் பெறலாம்!!

வருமான வரித்துறை ITR-ஐ தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை செப்டம்பர் 30 க்கு ஒத்தி வைத்திருந்தாலும், இதற்கான செயல்முறையில் அனைவரும் ஈடுபட்டுள்ளார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 21, 2020, 04:37 PM IST
  • ITR பற்றிய சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும்.
  • வருமானத்தைத் தாக்கல் செய்யும் போது உங்கள் வங்கி பெயர், IFSC code ஆகியவற்றை கண்டிப்பாக எழுத வேண்டும்.
  • மூத்த குடிமக்களின் FD-யின் வட்டித் தொகைக்கு எந்த வரியும் செலுத்தத் தேவையில்லை.
TDS அதிகமாக cut ஆகி விட்டதா? இந்த எளிய வழிகளில் திரும்பப் பெறலாம்!! title=

புதுடில்லி: வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான நேரம் இது. வருமான வரித்துறை ITR-ஐ தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை செப்டம்பர் 30 க்கு ஒத்தி வைத்திருந்தாலும், இதற்கான செயல்முறையில் அனைவரும் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நேரத்தில் நாம் சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். அவற்றில் ஒன்று டேக்ஸ் டிடக்ஷன் அட் சோர்ஸ் (TDS).

பெரும்பாலும் மக்கள் தங்கள் ஊதியம் வரி வரம்பில் இல்லாமலும் TDS குறைக்கப்பட்டதாக, அதாவது, வரி விதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்கள். இல்லையெனில், அவர்களது ஊதியத்தின் வரம்பை விட அதிக அளவிலான TDS குறைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இப்படி குறைக்கப்படும் தொகையை எவ்வாறு திரும்பப் பெறுவது? அதற்கு மிகவும் எளிய வழி உள்ளது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையைப் பின்பற்றினால் போதும்.

ALSO READ: ATM பரிவர்த்தனை தோல்வியா? பணம் வரவில்லையா? வங்கி ஒரு நாளைக்கு ரூ. 100 கொடுக்கும்

1. ஊதியம் மற்றும் TDS பொருந்தவில்லை என்றால், TDS பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி:

உங்கள் நிறுவனம் taxable ஊதியத்தை விட அதிக TDS-ஐக் கழித்திருந்தால், நீங்கள் TDS ரிடர்ண் தாக்கல் செய்யலாம். வருமான வரித் துறை (Income Tax Department) உங்கள் ஊதியத்திற்கு ஏற்ற மொத்த வரியைக் கணக்கிடும். இந்த வரி உங்கள் நிறுவனத்தால் கழிக்கப்படும் வரியை விடக் குறைவாக இருந்தால், மீதமுள்ள வரித் தொகை உங்களுக்கு திருப்பித் தரப்படும்.

நிறுவனத்தால் கழிக்கப்படும் தொகை குறைவாகவும், இன்னும் அதிக வரி விதிக்கப்படக் கூடியதாகவும் இருந்தால், நிலுவையில் உள்ள TDS டெபாசிட் செய்ய ஐ.டி துறை உங்களிடம் கோரும். வருமானத்தைத் தாக்கல் செய்யும் போது உங்கள் வங்கி பெயர், IFSC code ஆகியவற்றை கண்டிப்பாக எழுத வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்போதுதான் refund ஆகும் தொகை உங்கள் கணக்கில் வரும்.

2. FD-யில் TDS குறைக்கப்பட்டால் எப்படி refund பெறுவது

உங்கள் ஊதியத்திற்கு வருமான வரி கட்டவேண்டிய அவசியம் இல்லை என்றாலும், உங்கள் நிலையான வைப்புத்தொகையின் (FD) வட்டிக்கு உங்கள் வங்கி வரியைக் குறைத்தால், அந்த TDS தொகையையும் நீங்கள் திரும்பப் பெறலாம். இதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

முறை எண் 1. ஐ.டி ரிடர்ணில் இதைக் குறிப்பிடுங்கள். வருமான வரித் துறை தானாகவே உங்கள் வரிப் பொறுப்பைக் கணக்கிடும். வரி விதிக்கப்படத் தேவை இல்லை என்றால், இந்த தொகை உங்கள் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.

முறை எண் 2. படிவம் 15 G பூர்த்தி செய்து உங்கள் வங்கியில் சமர்ப்பிக்கவும். எனது சம்பளத்திற்கு வரி விதிக்கப்படக் கூடாது என்றும், குறைக்கப்பட்ட TDS-ஐ திரும்ப அளிக்குமாரும் வங்கியில் கோருங்கள்.

3. மூத்த குடிமக்கள் என்ன செய்வது?

மூத்த குடிமக்களின் (Senior Citizens) FD-யின் வட்டித் தொகைக்கு எந்த வரியும் செலுத்தத் தேவையில்லை. இருப்பினும், இந்த ஆண்டுதான் நீங்கள் 60 வயதை அடைந்திருந்தால், TDS கழிக்கப்படாமல் இருக்க, 15 H படிவத்தை பூர்த்தி செய்து வங்கியில் கொடுங்கள். இதற்குப் பிறகு வங்கி உங்கள் FD வட்டியில் இருந்து TDS –ஐக் கழிக்காது.

4. TDS refund status-ஐ எப்ப்டி பார்ப்பது?

TDS refund விரைவாகக் கிடைக்க, முதலில் நீங்கள் ITR-ஐ சரியான நேரத்தில் தாக்கல் செய்வது முக்கியம். ஏனென்றால் நீங்கள் விரைவில் வருமானத்தைத் தாக்கல் செய்தால், பணத்தைத் திரும்பப்பெறும் செயல்முறையும் விரைவில் தொடங்கும். TDS refund status-ஐ நீங்கள் காண விரும்பினால், அதற்கு நீங்கள்

E-Filing portal-லான https://incometaxindiaefiling.gov.in/ க்குச் சென்று லாக்-இன் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு 'View e-Filed Returns/Forms’ பகுதிக்குச் செல்லவும். மதிப்பீட்டு ஆண்டுக்கு (Assessment year) ஏற்ப ITR-ஐ சரிபார்க்கவும். மற்றொரு தனி பக்கம் திறக்கும். அதில் பணத்தைத் திரும்பப்பெறும் நிலை (Refund Status) காண்பிக்கப்படும். இது தவிர, சிபிசி பெங்களூரின் கட்டணமில்லா 1800-4250-0025 என்ற எண்ணில் அழைத்தும் நீங்கள் ஸ்டேடசை அறிந்து கொள்ளலாம்.

5. எத்தனை நாட்களில் TDS refund கிடைக்கும்

நீங்கள் சரியான நேரத்தில் ITR-ஐ தாக்கல் செய்தால், மூன்று முதல் ஆறு மாதங்களில் பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள்.

ALSO READ: ATM-ல் பணம் எடுக்கப் போகிறீர்களா? சிறு அலட்சியமும் ஆபத்தாகலாம், கவனம் தேவை!!

Trending News