பாட்டில் குடிநீர்: ஜனவரி 1 முதல் விதிகளில் மாற்றம்.. சுவையும் மாறுமா..!!

Packaged Drinking Water, அதாவது பாட்டில் குடிநீர் தொடர்பான விதிகள் ஜனவரி 1ம் தேதி முதல் சற்று மாறுகின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 5, 2020, 05:22 PM IST
  • பாட்டில் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள், இனி புதிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
  • பாட்டில் குடிநீரின் சுவை ஜனவரி 1 முதல் சற்று மாறும்.
  • நிறுவனங்கள் இதில் சில முக்கியமான தாதுக்களைச் சேர்ப்பதுதான் இதற்கு காரணம்.
பாட்டில் குடிநீர்:  ஜனவரி 1 முதல் விதிகளில் மாற்றம்.. சுவையும் மாறுமா..!! title=

புதுடெல்லி: பாட்டில் குடிநீர் Packaged Drinking Water தொடர்பான விதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றத்தை அடுத்து, ஜனவரி 1 முதல், அதன் சுவையும் மாறப்போகிறது. இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (Food Safety Standards Authority of India)  பாட்டில் குடிநீருக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 

பாட்டில் குடிநீரை தாயரிக்கும் நிறுவனங்கள் தற்போது தாங்கள் தயாரிக்கும்  ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீரில்,  20 மில்லிகிராம் கால்சியம் மற்றும் 10 மில்லிகிராம் மெக்னீசியம் கட்டாயம் சேர்க்க வேண்டும் என FSSAI இன் புதிய வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

தாதுக்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது, எனவே பாட்டில் குடிநீரில் சில தாதுக்களை கலப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) FSSAI க்கு அறிவுறுத்தியது. தண்ணீரை வடிகட்டுவதற்கான செயல்முறையினால், நீக்கப்பட்ட தாதுக்கள் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும். அப்போது தான் அவை குடிக்க பாதுகாப்பானவை என தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியது.

தேசிய பசுமை தீர்ப்பாயம், 2019, மே 29 அன்று முதலில் இதற்கான உத்தரவை பிறப்பித்தது. இதை செயல்படுத்த நிறுவனங்கள் இரண்டு முறை இவற்றிற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டன. ஆனால் இப்போது இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதற்கு அரசாங்கம் 2020 டிசம்பர் 31 காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.

ALSO READ | விவசாயிகள் போராட்டம் மக்களுக்கு பெரும் இடைஞ்சல்.. உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!!

எனவே, புதிய விதி, புத்தாண்டில், அதாவது 2021, ஜனவரி 1ம் தேதி நடைமுறைக்கு வருகிறது. புதிய செயல்முறையின் படி பாட்டில் குடிநீர்  தயாரிப்பதற்கான ஒரு சூத்திரத்தை FSSAI ஏற்கனவே நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளது. 

தற்போது, ​​Kinley, Bisleri, Bailey, Aquafina, Himalayan, Rail Neer, Oxyrich, Vedica மற்றும் Tata Water Plus ஆகிய நிறுவனங்கள் சந்தையில் பாட்டில் குடிநீரை விற்பனை செய்கின்றன. புதிய விதிப்படி, தண்ணீர் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் கால்சியம் மற்றும் மெக்னீசியத்துடன் தங்கள் தண்ணீர் பாட்டில்களை ஒரு குறிப்பிட்ட தொகையில் விற்பனை செய்யும். இந்தியாவில் பாட்டில் குடிநீரின் மொத்த வணிகம் ரூ .3000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் 500 மில்லி, 250 மில்லி, 1 லிட்டர், 15-20 லிட்டர் பாட்டில்களை விற்பனை செய்கின்றன. இதில் சந்தையில் 42% சதவிகித விற்பனை 1 லிட்டர் பாட்டில்கள் விற்பனையாகும்.

ALSO READ | விண்வெளியில் கழிவறை அமைக்கும் NASA... அதற்கான செலவு வெறும் 8700 கோடி தான்..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News