வீட்டுக் கடனை சீக்கிரம் அடைத்து நிம்மதியாய் இருக்க.... சில டிப்ஸ்!

வீட்டுக் கடன் வட்டிக்கு வரி விலக்கின் பலன் கிடைக்கும் என்றாலும், வீட்டுக் கடன் உங்கள் இன்றைய மற்றும் உங்கள் எதிர்காலம் இரண்டிலும் நிதி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 22, 2023, 07:01 AM IST
  • மற்றும் நிதி அழுத்தத்தைத் தவிர்க்க பெரும்பாலும் குறுகிய கடன் காலத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  • EMI அதிகமாக இருந்தாலும், குறுகிய கடன் காலம் காரணமாக வட்டி விகிதமும் குறைகிறது.
  • குறிப்பிட்ட அளவு பணத்தை முன் கூட்டியே திருப்பிச் செலுத்துவது அசல் மற்றும் வட்டி ஆகிய இரண்டையும் குறைக்க உதவும்
வீட்டுக் கடனை சீக்கிரம் அடைத்து நிம்மதியாய் இருக்க.... சில டிப்ஸ்! title=

வீட்டுக் கடன் வரி செலுத்துவோருக்கு இரண்டு வழிகளில் பலன்கள். முதலில், வீட்டுக் கடன் வாங்குவதன் மூலம் நீங்கள் வீட்டின் உரிமையாளராகிவிடுவீர்கள். இரண்டாவதாக, வீட்டுக் கடனின் வட்டிக்கு வரி விலக்கின் பலன் கிடைக்கும். இருப்பினும், வீட்டுக் கடன் உங்கள் இன்றைய மற்றும் உங்கள் எதிர்காலம் இரண்டிலும் நிதி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால்தான் வீட்டுக் கடனை முன்கூட்டியே மற்றும் சீக்கிரம் செலுத்தி முடிப்பது சிறந்தது நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வீட்டுக் கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவதற்கான 6 வழிகளைத் தெரிந்து கொள்வோம்.

வேறு வங்கிக்கு கடன் இருப்பை பரிமாற்றம் செய்தல்

உங்கள் வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை விரைவுபடுத்த உங்கள் கடன் இருப்புத் தொகையை வேறு வங்கிக்கு மாற்றுவது உங்கள் நிதி ரீதியாக பலன் (Money Tips) கொடுக்கும். இதில், வீட்டுக் கடனுக்கான குறைந்த வட்டி விகிதத்தில்  வழங்கும் பிற வங்கிக்கு, மீதி கடன் தொகையை மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது. குறைந்த வட்டி உங்கள் EMI குறைக்கிறது. இது கடனை விரைவாக திருப்பிச் செலுத்த உதவுகிறது. உங்கள் EMI தொகை குறையும் நிலையில், பழைய வங்கியில் செலுத்திய அதிக அளவையே, புதிய வங்கியிலும் செலுத்தி வந்தால்,  கடன் காலம் கணிசமாக குறையும்

சரியான நேரத்தில் EMI செலுத்துங்கள்

வீட்டுக் கடனுக்கான தாமதமான EMI செலுத்துதல் வங்கி அபராதம் மற்றும் அதிக கடனுக்கு வழிவகுக்கும். கடனைத் திருப்பிச் செலுத்துவதை விரைவுபடுத்த ஆட்டோ டெபிட்டைத் தேர்வு செய்யவும். உங்கள் சம்பள நாளில் EMI செலுத்துவதால், தாமதமாக செலுத்தும் அபராதங்களைத் தவிர்க்கவும்.

கூடுதல் கடன் வாங்குவதை தவிர்க்கவும்

 வீட்டுக் கடன் அடைபடாத நிலையில். வேறு புதிய அவசரக் கடனை எடுக்க வேண்டாம். கூடுதல் கடன்களைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம்.

முதலில் பணத்தைச் சேமித்து கடனை அடைக்கவும்

தேவையற்ற செலவுகளுக்குச் செலவு செய்வதற்குப் பதிலாக, உங்கள் வீட்டுக் கடனில் கூடுதல் பணம் செலுத்துவதில் கவனம் செலுத்துங்கள். கூடுதல்லான தேவையற்ற பெரிய செலவுகளைத் தவிர்க்கவும். உங்கள் நிதிநிலையை மேம்படுத்த இதுவே சிறந்த வழியாகும். முன்கூட்டியே பணத்தை செலுத்துவதன் மூலம், உங்கள் கடன் இருப்பைக் குறைப்பதோடு செலவுகளையும் குறைக்கிறீர்கள்.

மேலும் படிக்க | போஸ்ட் ஆபிஸின் ஜாக்பாட் திட்டம், ஒவ்வொரு மாதமும் 9,250 ரூபாய் வருமானம் கிடைக்கும்

முன்கூட்டியே கடனை செலுத்துதல்

கூடுதல் மொத்தத் தொகையைச் செலுத்துவதன் மூலம் கடனைத் திருப்பிச் செலுத்தும் செயல்முறையை விரைவுபடுத்தலாம். எதிர்பாராத வகையில் பணம் வரும் போது, ஒரே குறிப்பிட்ட அளவு பணத்தை முன் கூட்டியே திருப்பிச் செலுத்துவது அசல் மற்றும் வட்டி ஆகிய இரண்டையும் குறைக்க உதவும்

குறுகிய காலம்

மன மற்றும் நிதி அழுத்தத்தைத் தவிர்க்க பெரும்பாலும் குறுகிய கடன் காலத்தைத் தேர்ந்தெடுக்கவும். EMI அதிகமாக இருந்தாலும், குறுகிய கடன் காலம் காரணமாக வட்டி விகிதமும் குறைகிறது.

மனதில்  கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

வீட்டு உரிமையாளராகும் கனவை விரைவில் நிறைவேற்ற அனைவரலாலும் முடியும். வழக்கமான மற்றும் சரியான நேரத்தில் பணம் செலுத்துதல், அதிக இஎம்ஐ செலுத்துதல் மற்றும் வரிச் சலுகைகளைப் பெறுதல் ஆகியவை உங்கள் வீட்டுக் கடனை முன்கூட்டியே செலுத்துதல் ஆகியவற்றில் மூலம் வீட்டுக் கடனில் இருந்து எளிதில் விடுபடலாம்.

மேலும் படிக்க | பென்ஷன் இல்லை என்ற கவலை வேண்டாம்... LIC வழங்கும் அச்சதலான ஜீவன் சாந்தி திட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News