PPF முதலீடு: தினம் ரூ.100 சேமித்தால் போதும்... எளிதில் லட்சாதிபதி ஆகலாம்!

Public Provident Fund Investment Tips: பணத்தை பன்மடங்காக்கு உதவும் சேமிப்பு திட்டங்களில் ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி PPF. இந்த முதலீட்டு திட்டத்தில், தினம் 100 ரூபாய் என்ற அளவில், சேமித்தால் போதும். நீங்கள் எளிதில் லட்சாதிபதி ஆகலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 15, 2024, 01:25 PM IST
  • பொது வருங்கால வைப்பு நிதி திட்ட முதலீட்டில் 7.10 சதவீத வட்டி கிடைக்கிறது.
  • முதிர்வுக்கான வட்டி வருமானத்திற்கும் முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படும்.
  • ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றி அமைக்கப்படும் வட்டி விகிதங்கள்.
PPF முதலீடு: தினம் ரூ.100 சேமித்தால் போதும்... எளிதில் லட்சாதிபதி ஆகலாம்! title=

Public Provident Fund Investment Tips: இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலானோர் பணத்தை பன்மடங்காக்க பரஸ்பர நிதிகள் அல்லது பங்குகளில் முதலீடு செய்கிறார்கள். இருப்பினும், ஊரக, கிராமப்புற இந்தியாவில் பலர் தபால் நிலைய திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள். தபால் நிலைய திட்டத்தில் பணம் பாதுக்காப்பாக இருக்கும் என்பதே இதற்குக் காரணம். இது தவிர, அஞ்சலகத்தின் முதலீட்டுத் திட்டத்தில் வருமானமும் நன்றாகவே கிடைக்கிறது. பரஸ்பர நிதிகள் மற்றும் பங்குகள் போன்ற முதலீட்டு விருப்பங்கள் இருந்தபோதிலும், பொது மக்கள் தபால் அலுவலக திட்டங்களை அதிகம் நம்புவதற்கு இதுவே காரணம். போஸ்ட் ஆபிஸ் PPF திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் எப்படி லட்சாதிபதி ஆகலாம் என்பதை விபரமாக அறிந்து கொள்ளலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்

தற்போது, ​​தபால் அலுவலக பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அதாவது PPF திட்ட முதலீட்டில் 7.10 சதவீத வட்டி கிடைக்கிறது. ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.500 என்ற அளவில் பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு (Investment Tips) செய்யத் தொடங்கலாம். இதில் அதிகபட்சமாக எவ்வளவு தொகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ஆனால் வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை மட்டுமே உங்களுக்கு வரி விலக்கு கிடைக்கும். முதிர்வுக்கான வட்டி வருமானத்திற்கும் முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்படும். அதன் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் மற்றும் அதன் பிறகு அதை 5 ஆண்டுகள் என்ற அளவில் நீட்டிக்க முடியும். இந்தத் திட்டத்தின் கீழ், தனிநபர் ஒருவர் ஒரு கணக்கை மட்டுமே திறக்க முடியும்.

ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றி அமைக்கப்படும் வட்டி விகிதங்கள்

ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் வட்டி விகிதத்தை நிதி அமைச்சகம் மாற்றியமைக்கிறது. ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் வட்டி வருமானம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போதைய விகிதத்தின்படி, தினமும் ரூ.100 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு, முதிர்ச்சியடையும் போது, ​​மொத்தமாக ரூ. 9,76,370 உங்களுக்கு கிடைக்கும். வருமானத்திற்கு முற்றிலும் வரி விலக்கு உண்டு. 15 ஆண்டுகளில் உங்கள் மொத்த வைப்புத்தொகை ரூ.5,40,000 ஆக இருக்கும். இதன் மூலம் நீங்கள் எளிதாக லட்சாதிபதி ஆகலாம்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான சிறந்த FD திட்டங்களை வழங்கும் சில ‘டாப்’ வங்கிகள்..!!

கடன் வசதி

பிபிஎஃப் மீதான கடன் வசதியும் பெறலாம். நீங்கள் முதலீடு செய்யத் தொடங்கும் அடுத்த நிதியாண்டிலிருந்து உங்களுக்கு கடன் வசதி கிடைக்கும். இந்த வசதி ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும். உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 25 சதவீதம் வரை கடன் பெறலாம். ஒரு நிதியாண்டில் ஒருமுறை மட்டுமே கடன் பெற முடியும். முதல் கடனை அடைக்கும் வரை இரண்டாவது கடன் கிடைக்காது. மூன்று ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்தினால், வட்டி விகிதம் ஆண்டுக்கு 1 சதவீதம் மட்டுமே.

முதிர்வு காலத்திற்கு முன் பணத்தை முன்கூட்டியே பெறுவதற்கான விதிகள்

முதிர்வு காலத்திற்கு முன் பணத்தை திரும்பப் பெறுவது பற்றிய விதியில், ஐந்து வருட லாக்-இன் காலத்திற்குப் பிறகு ஒரு நிதியாண்டில் ஒருமுறை திரும்பப் பெறலாம். இது உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50 சதவீதம் வரை இருக்கலாம். முன்கூட்டியே மூடுவது பற்றி பேசுகையில், கணக்கு வைத்திருப்பவர் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது அவர் அல்லது அவரது குழந்தைகளின் உயர் கல்விக்காகவோ இது அனுமதிக்கப்படுகிறது. இதற்கு சில கட்டணங்கள் கழிக்கப்படுகின்றன.

மேலும் படிக்க | அசத்தலான 5 முதலீடு திட்டங்கள்! வயதான காலத்தில் பண கஷ்டம் இருக்காது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News