ஆன்லைன் வங்கி சேவையை பயன்படுத்தும் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) வாடிக்கையாளர்கள், இணைய வங்கி தொடர்பான பரிவர்த்தனைகள்/செயல்பாடுகளுக்கு OTP-ஐ உருவாக்க, பாதுகாப்பான OTP செயலியை பயன்படுத்தலாம். இந்த செயலி Android மற்றும் iOS பயனர்களுக்கு கிடைக்கும்.
எஸ்பிஐ பாதுகாப்பான OTP செயலியில் பதிவு செய்வதற்கு பின்வரும் வழிமுறை பின்பற்றவும்:
- SBI Secure OTP செயலியைப் பதிவிறக்கம் செய்து, அதனை திறக்கவும்.
- SBI Secure OTP செயலியில் பதிவுசெய்ய SIM 1 அல்லது SIM 2-ஐ தேர்ந்தெடுக்கவும் (ஒற்றை சிம் விஷயத்தில் சிம் தேர்வு தேவையில்லை).
- மொபைல் எண்ணைச் சரிபார்க்க மொபைலில் இருந்து எஸ்எம்எஸ் அனுப்புவது தொடர்பான செய்தி திரையில் காண்பிக்கப்படும்.
- 'Continue' பட்டனைக் கிளிக் செய்யவும். மேலும் ஒரு தனிப்பட்ட குறியீட்டைக் கொண்ட எஸ்எம்எஸ், முன் வரையறுக்கப்பட்ட எண்ணுக்கு அனுப்பப்படும்.
- கடவுச்சொல்லை உள்ளிட்டு, 'Continue' என்பதைக் கிளிக் செய்யவும்
- விதிமுறைகள் & நிபந்தனைகளை ஏற்க தேர்வுப்பெட்டியில் டிக் செய்து, 'OK' பட்டனைக் கிளிக் செய்யவும்.
- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்
- பெறப்பட்ட OTP-ஐ உள்ளிடவும், OTP சரிபார்ப்புக்குப் பிறகு, SBI Secure OTP செயலியின் MPIN-ஐ அமைக்க பயனரிடம் கோரிக்கை வைக்கப்படும்.
- அதன் பிறகு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஆக்டிவேஷன் கோட் அனுப்பப்படும். அந்த கோட் 10 நிமிடங்கள் வரை செல்லுபடியாகும்
- Online SBI-இல் உள்நுழைந்து ஆக்டிவேஷனை முடிக்க வேண்டும்.
SBI Secure OTP செயலியை எப்படி பயன்படுத்துவது?
- Online SBI-இல் உள்நுழைக
- சுயவிவரப் பகுதிக்குச் சென்று, பாதுகாப்பான OTP இணைப்பைச் செயல்படுத்தவும்
- பெறப்பட்ட ஆக்டிவேஷன் கோடை உள்ளிடவும்
- வெற்றிகரமாக சரிபார்த்த பிறகு, Secure OTP செயலி பயனர் பதிவு நிறைவு செய்யப்படும்
இன்டர்நெட் பேங்கிங்/YONO LITE ஆப்பிற்கான OTP அங்கீகார முறையானது, SBI Secure OTP செயலிக்கு மாற்றப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். இதன்மூலம், இனி வாடிக்கையாளர் எஸ்எம்எஸ் மூலம் OTP பெறமாட்டார். MPIN-ஐ பயன்படுத்தி SBI Secure OTP செயலியில் உள்நுழைக.
எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களை பதிவு செய்யும்போது பயன்படுத்திய பாதுகாப்பான OTP-ஐ உருவாக்க அதே சிம் இடத்தில் இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. மொபைலில் உள்ள செயலியில் பதிவு செய்தவுடன், OTP-ஐ உருவாக்க அதே மொபைலை பயன்படுத்த வேண்டும். இதற்கிடையில், நீங்கள் வேறொரு மொபைலில் இருந்து பதிவு செய்ய விரும்பினால், அதே சிம்மை புதிய கைபேசியில் இணைக்கவும். மேலே குறிப்பிட்டுள்ள பதிவு செயல்முறையைப் பின்பற்றவும்.
மேலும் படிக்க | ஹோம் லோன் எடுக்க வாட்ஸ்-அப் போதும்... நீங்க அலையவே வேண்டாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ