Indian Railways: ரயில் டிக்கெட்டில் புதிய விதி... கோடிக்கணக்கான பயணிகளுக்கு பயனளிக்கும்!

Indian Railways: நீங்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளீர்கள் அல்லது அதற்கு திட்டமிடுகிறீர்கள் என்றால், அதன் விதிகளை ரயில்வே மாற்றியுள்ளது என்பது கவனத்தில் கொள்ளவேண்டும்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 13, 2023, 06:22 AM IST
  • ரயில்வே தினமும் பல லட்சக்கணக்கானோரால் பயன்படுத்தப்படுகிறது.
  • ஆன்லைன், ஆப்லைன் மூலம் தற்போது டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
  • சமீபத்தில், அனைத்து ரயில்களின் குறிப்பிட்ட வகுப்புக்கான கட்டணத்தை ரயில்வே குறைத்தது.
Indian Railways: ரயில் டிக்கெட்டில் புதிய விதி... கோடிக்கணக்கான பயணிகளுக்கு பயனளிக்கும்! title=

Indian Railways Latest Update: ரயில் டிக்கெட் முன்பதிவு என்பது தற்போது பலராலும் மேற்கொள்ளப்படுகிறது. பயணிகளுக்கு பல்வேறு வசதிகளையும், பாதுகாப்பையும் ரயில்வே வழங்குவதால், தொலைத்தூர பயணம் முழுவதும் முதல் உள்ளூர் போக்குவரத்து வரை சாமானிய, நடுத்தர மக்கள் ரயிலை பயன்படுத்துகின்றனர். மேல் நடுத்தர வர்க்கத்தினரும் பேருந்துகளை விட ரயிலையே விரும்புகின்றனர் என தெரிகிறது. 

அந்த வகையில், நீங்களும் உங்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தால், உங்களுக்கு ஒரு பெரிய செய்தி காத்திருக்கிறது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். எனவே நீங்களும் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளீர்கள் அல்லது அதற்கு திட்டமிடுகிறீர்கள் என்றால், அதன் விதிகளை ரயில்வே மாற்றியுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு தொடர்பான புதிய விதிமுறைகளை ரயில்வே வெளியிட்டுள்ளது, இது பயணிகளுக்கு நன்மை பயக்கும்.

உங்கள் டிக்கெட்டை யாருக்கும் மாற்றக்கூடிய ரயில்வே விதியைப் பற்றி இங்கு தெரிந்துகொள்ளலாம். அதாவது, ஒரு பயணி தன் பெயரில் முன்பதிவு டிக்கெட்டை அவரது தாய், தந்தை, சகோதரர், சகோதரி, மகன், மகள், கணவன், மனைவி போன்ற குடும்ப உறுப்பினருக்கு மாற்றலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | தீபாவளிக்கு ஊருக்கு போக ரயில் டிக்கெட் போட்டாச்சா... அனல் பறக்கும் முன்பதிவு!

உங்கள் டிக்கெட்டை யாருக்கு மாற்றலாம்

ரயில்வே விதிகளின்படி, உங்கள் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், மகன்-மகள் அல்லது மனைவி போன்ற உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் மட்டுமே உங்கள் டிக்கெட்டை மாற்ற முடியும். இதன் பொருள் உங்கள் நெருங்கிய நண்பர்கள் உங்கள் டிக்கெட்டில் பயணிக்க முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். 

பரிமாற்றத்தை எவ்வாறு பெறுவது?

இதேபோல், உங்கள் டிக்கெட்டை குடும்ப உறுப்பினருடன் மாற்றிக்கொள்ள, முதலில் அந்த டிக்கெட்டின் பிரிண்ட் அவுட்டை எடுத்து அதனுடன் உங்கள் அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். டிக்கெட் யாருடைய பெயரில் மாற்றப்படுகிறதோ அந்த நபரின் ஆதார் அட்டை போன்ற அடையாளச் சான்றினை எடுத்துச் செல்லவும். அங்கு டிக்கெட் பரிமாற்றத்திற்கான விண்ணப்பத்தை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.

24 மணிநேரத்திற்கு முன்

ரயில்வே விதிகளின்படி, வேறு ஒருவரின் பெயருக்கு டிக்கெட்டை மாற்றுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். திருமணத்திற்கு செல்ல வேண்டுமானால், 48 மணி நேரத்திற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். அதுவும், உங்கள் டிக்கெட்டை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும், மீண்டும் மீண்டும் வேறு ஒருவரின் பெயருக்கு மாற்ற முடியாது என்று சொல்கிறேன்.

அனைத்து ரயில்களின் ஏசி நாற்காலி வகுப்பு மற்றும் எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் கட்டணத்தில் 25 சதவீதத்தை குறைப்பதாக ரயில்வே வாரியம் சமீபத்தில் அறிவித்தது. ரயில்வே வாரியத்தின் இந்த உத்தரவில், வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களின் குறிப்பிட்ட வகுப்புகளின் கட்டணத்தையும் குறைப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | பயணிகளின் கவனத்திற்கு.. இந்த ரயில்வே எண்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்கா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News