எஸ்பிஐ வங்கியை பின்னுக்கு தள்ளிய ஐசிஐசிஐ!

இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டிசிஎஸ் ஆகியவை சந்தை மதிப்பு அடிப்படையில் இரண்டு பெரிய நிறுவனங்களாக உள்ளன.

Written by - RK Spark | Last Updated : May 12, 2022, 10:22 PM IST
  • ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ.4,96,364.87 கோடியாக இருந்தது.
  • எஸ்பிஐ வங்கியானது சந்தை மதிப்பில் ரூ.4,25,168.49 கோடியாக இருந்தது.
  • 7,47,999.29 கோடி ரூபாய் மதிப்பில் மிக பெரியளவு வித்தியாசத்தில் முன்னணி வகித்து வருகிறது.
எஸ்பிஐ வங்கியை பின்னுக்கு தள்ளிய ஐசிஐசிஐ! title=

ஹெச்டிஎஃப்சி வங்கிக்கு அடுத்தபடியாக ஐசிஐசிஐ வங்கியானது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியை  (எஸ்பிஐ) பின்னுக்கு தள்ளி இரண்டாவது மிகப்பெரிய மதிப்புமிக்க வங்கியாக உருவெடுத்துள்ளது.  வெளியான சில அறிக்கைகளின்படி, கடந்த புதன்கிழமையன்று ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ.4,96,364.87 கோடியாக இருந்தது, அதேசமயம் எஸ்பிஐ வங்கியானது சந்தை மதிப்பில் ரூ.4,25,168.49 கோடியாக இருந்தது.  இந்த இரண்டு வங்கிகளின் சந்தை மதிப்பு எப்படி இருந்தாலும், ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பானது, 7,47,999.29 கோடி ரூபாய் மதிப்பில் மிக பெரியளவு வித்தியாசத்தில் முன்னணி வகித்து வருகிறது.

மேலும் படிக்க | உங்கள் கணக்கில் இபிஎஃப் வட்டி வந்துவிட்டதா? எப்படி கண்டறிவது?

இந்தியாவில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டிசிஎஸ் ஆகியவை சந்தை மதிப்பு அடிப்படையில் இரண்டு மிகப்பெரிய நிறுவனங்களாக திகழ்கின்றன.  இந்த இரண்டு பெரிய நிறுவனங்களை தொடர்ந்து மூன்றாவது இடத்தை ஹெச்டிஎஃப்சி வங்கி பிடித்துள்ளது.  அதானி கிரீன் மற்றும் எஸ்பிஐ ஆகிய இரண்டும் ஏழாவது இடத்தை பிடிக்க ஒன்றுக்கொன்று போட்டுகொண்டு வந்தது, அதானி குழும பங்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் எஸ்பிஐ வங்கியின் பங்குகளை முந்திக்கொண்டு ந்தியாவில் சந்தை மதிப்பில் ஏழாவது பெரிய நிறுவனமாக உருவெடுத்தது.  ஆனால் திடீரென்று அதானி கிரீன் பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்த காரணத்தினால் தற்போது எஸ்பிஐ வங்கியானது ஏழாவது இடத்தைப் பிடித்து இருக்கிறது.

எம்-கேப் அடிப்படையில் 2013ம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியானது எஸ்பிஐயை புறம்தள்ளி முன்னணி வகித்து வந்தது.  பின்னர் சில காரணங்களினால் ஐசிஐசிஐ வங்கியின் பங்குகளில் தொய்வு ஏற்பட்டதையடுத்து ஐசிஐசிஐ வங்கியை எஸ்பிஐ வங்கி பின்னுக்கு தள்ளியது.  இதுபோன்ற மாற்றமானது  2016 ஆம் ஆண்டில் நடைபெற்றது, தற்போது இந்த மாற்றம் மீண்டும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அரங்கேறியது.  மேலும் சில தகவல்களின்படி, முன்னர் இருந்ததைவிட இந்த தடவை இரண்டு வங்கிகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளி சற்று அதிகமாக இருப்பதாக தெரிகிறது.   மேலும் கூடிய விரைவில் ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு விரைவில் ரூ.5 லட்சம் கோடி அல்லது ரூ.5 டிரில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதேசமயம் எஸ்பிஐயின் சந்தை மதிப்பு ரூ.4 லட்சம் கோடி அல்லது ரூ.4 டிரில்லியன் அளவில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஓய்வூதியம் வாங்குபவர்களுக்கு அடித்த புதிய ஜாக்பாட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News