Income Tax: ‘இந்த’ பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.. இல்லை என்றால் நோட்டீஸ் வீடு தேடி வரும்!

ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என எந்த விதமான பரிவர்த்தனையாக இருந்தாலும், ஏதேனும் ஒரு பரிவர்த்தனை வரம்பிற்கு மேல் இருந்தால், அதை ஐ-டி துறை கண்டுபிடிப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 8, 2024, 03:55 PM IST
Income Tax: ‘இந்த’ பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.. இல்லை என்றால் நோட்டீஸ் வீடு தேடி வரும்! title=

இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் அதிக மக்கள் தொகை ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு மாறியுள்ளனர். இருப்பினும், கணிசமான மக்கள் தங்கள் பழக்கவழக்கங்களுக்கு மிகவும் பொருத்தமான பாரம்பரிய வழியை வசதியானதாக கருதி, பணப் பரிவர்த்தனைகளைத் தேர்வு செய்கிறார்கள். அதோடு, வருமான வரித்துறையின் கண்களில் இருந்து தப்பி விடலாம் என தவறாக கணக்கு போடுகிறார்கள். ஆன்லைன் பரிவர்த்தனை செய்வதில் சிறிதும் தயங்காத பலர், பெரிய தொகையை கையாளும் சமயத்தில், பணப் பரிவர்த்தனைக்கு மாறினால், வருமான வரித் துறையின் கண்காணிப்பின் கீழ் வராது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு. ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் என எந்த விதமான பரிவர்த்தனையாக இருந்தாலும், ஏதேனும் ஒரு பரிவர்த்தனை வரம்பிற்கு மேல் இருந்தால், அதை ஐ-டி துறை கண்டுபிடிப்பதோடு மட்டுமல்லாமல், அதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பலாம்.

1. வங்கிக் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்தல்

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிபிடிடி) விதிகளின்படி, ஒருவர் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால், அது குறித்த தகவல் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும். இந்தப் பணம் கணக்கு வைத்திருப்பவரின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கலாம். ஒருவர் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக ரொக்க பணம் டெபாசிட் செய்யும் போது, வருமான வரித் துறை உங்களிடம் பணத்தின் ஆதாரம் குறித்து கேட்கலாம்.

2. ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணத்தை டெபாசிட் செய்தல்

ஒரு வங்கிக் கணக்கில் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சம் ரொக்கமாக முதலீடு செய்வது பற்றி வங்கி விசாரிக்க முடியும் என்பதால், நிலையான வைப்புகளில் (FDs) பரிவர்த்தனைகளுக்கும் அதே விதியைப் பயன்படுத்துகிறது. ஒரு நிதியாண்டில் யாராவது ரூ.10 லட்சத்திற்கு மேல் FD-களில் டெபாசிட் செய்தால், அந்த பணத்தின் ஆதாரம் குறித்து வருமான வரித்துறை அவர்களிடம் கேட்கலாம்.

மேலும் படிக்க | Income Tax: முழுமையான வருமான வரி விலக்கு பெற வேண்டுமா... சில டிப்ஸ் இதோ..!!

3. பங்குகள், பரஸ்பர நிதிகள், கடன் பத்திரங்கள் அல்லது பத்திரங்களை வாங்குதல்

பலர் பங்குகள், பரஸ்பர நிதிகள், கடன் பத்திரங்கள் அல்லது பத்திரங்களில் முதலீடு செய்வதை ஒரு நல்ல தேர்வாகக் கருதுகின்றனர். இத்தகைய முதலீடுகள் முதலீட்டாளரிடம் பணத்தைச் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பவை என்பது உண்மை தான். ஆனால் பங்குகள், பரஸ்பர நிதிகள், கடன் பத்திரங்கள் அல்லது பத்திரங்கள் வாங்குவதற்கு ஒருவர் அதிக அளவு ரொக்க பணத்தைப் பயன்படுத்தினால், அது தொடர்பாக வருமான வரித் துறைக்கு  தகவல் அனுப்பப்படுகிறது. அத்தகைய முதலீட்டு விருப்பங்களில் ஒருவர் ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை செய்தால், அதன் தகவல் வருமான வரித் துறைக்கு சென்றடைகிறது. அந்த பணம் எங்கிருந்து வந்தது என மூலத்தைப் பற்றி உங்களிடம் விளக்கம் கேட்கலாம்.

4. கிரெடிட் கார்டு பில் செலுத்துதல்

இந்த நாட்களில் கிரெடிட் கார்டு பயன்படுத்துவது பொதுவானது, மேலும் பல நேரங்களில் பயனர்கள் லட்சங்களில் பில்களை குவிக்கின்றனர். ஆனால் உங்கள் மாதாந்திர கிரெடிட் கார்டு பில் ரூ. 1 லட்சத்தை தாண்டியிருந்தால், அதை நீங்கள் பணமாக செலுத்த விரும்பினால், உங்கள் பணத்தின் ஆதாரம் குறித்து வருமான வரித்துறை உங்களிடம் கேட்கலாம். அதே நேரத்தில், ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் ஏதேனும் ஒரு நிதியாண்டில் நீங்கள் ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேல் பணம் செலுத்தினால், உங்களுக்கு எங்கிருந்து பணம் கிடைத்தது என்று வருமான வரித்துறை உங்களைக் கேள்வி கேட்கலாம்.

5. சொத்து தொடர்பான பரிவர்த்தனை

நகரங்கள் மற்றும் டயர்-2 நகரங்களில் ரியல் எஸ்டேட் விலைகள் அபரிமிதமாக உள்ளன, மேலும் பெரிய அளவிலான பரிவர்த்தனைகள் பொதுவானவை. ஆனால், சொத்து வாங்கும் போது ரூ.30 லட்சம் அல்லது அதற்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்தால், வருமான வரித் துறையிடம் எச்சரிக்கையாக இருங்கள். சொத்துப் பதிவாளர் ஐ-டி துறைக்குத் தெரிவிப்பார், அதற்குப் பதிலாக, பணத்தின் மூலத்தைப் பற்றி உங்களிடம் கேட்கலாம்.

மேலும் படிக்க | UNION BUDGET 2024: சாமானியர்கள் எதிர்பார்க்கும் சில வரிச்சலுகைகள்... நிறைவேறுமா... நிராசையாகுமா...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News