ரயில் பெர்த் விதிகளில் புதிய மாற்றம் : இந்த பயணிகளுக்கு லோயர் பெர்த் கன்பார்ம்

ரயில்வே லோயர் பெர்த் தொடர்பான புதிய விதியை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி வரும் காலங்களில் குறிப்பிட்ட பயணிகளுக்காக இந்த பெர்த் முன்னுரிமை கொடுக்கப்படும்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 3, 2024, 05:56 PM IST
  • லோயர் பெர்த் உங்களுக்கு கிடைக்க வேண்டுமா?
  • இந்தியன் ரயில்வே விதிமுறைகள் சொல்வது இதுதான்
  • இப்படி புக் செய்தால் லோயர் பெர்த் கிடைக்கும்
ரயில் பெர்த் விதிகளில் புதிய மாற்றம் : இந்த பயணிகளுக்கு லோயர் பெர்த் கன்பார்ம் title=

இந்திய இரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். ஒவ்வொரு பயணிகளின் தேவைகளையும் கவனித்துக்கொள்ள ரயில்வே தன்னால் இயன்றவரை முயற்சிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரயிலில் பயணிக்கின்றனர். ரயில்வே மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. பெரும்பாலானோர் லோயர் பெர்த்கள் வேண்டும் என்ற ஆப்சனை தேர்வு செய்வதால், அந்த விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் குறித்த ரயில்வே தெளிவான விளக்கத்தை கொடுத்திருக்கிறது.

மேலும் படிக்க | நுழைவுத்தேர்வுகளுக்கான வடிவத்தை மாற்றிய NTA! புதிய தேர்வு தேதிகள் அறிவிப்பு!

ரயில்வே பயணி ஒருவர் புகார்

மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் வழங்க ரயில்வே பல விதிகளை உருவாக்கியுள்ளது. இது அவர்களின் பயணத்தை எளிதாக்குகிறது. மூத்த குடிமக்களுக்கு கீழ் பெர்த்களை முன்பதிவு செய்யலாம். மூத்த குடிமக்களுக்கு லோயர் பெர்த் எளிதாக ஒதுக்குவது பற்றி IRCTC தெரிவித்துள்ளது. பயணி ஒருவர் ரயில் டிக்கெட் புக் செய்ததாகவும், கால்களில் பிரச்னை இருந்ததால் கீழ் பெர்த்துக்கு முன்னுரிமை கொடுத்ததாகவும், ஆனால் அப்போதும் ரயில்வே அவருக்கு மேல் பெர்த் கொடுத்ததாகவும் புகார் தெரிவித்திருந்தார். 

இந்திய ரயில்வே விளக்கம்

பயணியின் ட்வீட்டுக்கு பதிலளித்த ரயில்வே, பொது ஒதுக்கீட்டின் கீழ் டிக்கெட் முன்பதிவு செய்தால், இருக்கை இருந்தால் மட்டுமே இருக்கை ஒதுக்கீடு கிடைக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. இருக்கை இல்லை என்றால் கிடைக்காது. கீழ் பெர்த் ஒதுக்கப்பட்டால் மட்டுமே முன்பதிவு என்ற ஆப்சனின் கீழ் முன்பதிவு செய்தால், உங்களுக்கு லோயர் பெர்த் கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.

லோயர் பெர்த்கள் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை

பொது ஒதுக்கீட்டின் கீழ் முன்பதிவு செய்பவர்களுக்கு இருக்கைகள் இருக்கும்போது மட்டுமே இருக்கைகள் ஒதுக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த இருக்கைகள் முதலில் வருபவருக்கு முதல் சேவை அடிப்படையில் கிடைக்கும். பொது ஒதுக்கீட்டில் இடம் பெறுவதில் எந்த தலையீடும் இருக்காது, இருப்பினும், நீங்கள் TTE-யை லோயர் பெர்த்துக்கு அணுகலாம். மேலும், பயணிக்கும் சக பயணிகளிடம் கேட்டு நீங்களே பெற்றுக் கொள்ளலாம். 

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் டபுள் ஜாக்பாட்? தயாராகும் மத்திய அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News