ஜாக்பாட் ஓய்வூதிய திட்டங்கள்: மாதா மாதம் கிடைக்கும் நிலையான சூப்பர் வருமானம்

Pension Plans: ஓய்வு காலத்தில் நிலையான வருமானத்தை உறுதிசெய்ய துல்லியமான திட்டமிடல் தேவைப்படுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 28, 2023, 02:49 PM IST
  • சந்தையில் பல வகையான ஓய்வூதிய நலத்திட்டங்கள் உள்ளன.
  • ஓய்வு காலத்தில் நிலையான வருமானத்தை உறுதிசெய்ய துல்லியமான திட்டமிடல் தேவைப்படுகிறது.
  • முதலீடுகளின் மூலம் ரூ.10,000 மாதாந்திர ஓய்வூதியம் பெறுவது எப்படி?
ஜாக்பாட் ஓய்வூதிய திட்டங்கள்: மாதா மாதம் கிடைக்கும் நிலையான சூப்பர் வருமானம் title=

ரிடையர்மெண்ட், அதாவது பணி ஓய்வு காலம் என்பது நம் வாழ்வின் தவிர்க்க முடியாத கட்டமாகும். பணிக்கு பிறகான ஒய்வு ஆண்டுகளில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க திட்டமிடுவது மிக அவசியம். ஓய்வூதிய திட்டமிடல் என்பது ஓய்வூதிய வருமானத்தின் நிலையான ஆதாரத்தை வழங்கும் திட்டங்கள் அல்லது முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்வதை உள்ளடக்குகிறது. முதலீட்டு லாபத்தைத் தவிர, மாதாந்திர ஓய்வூதியமாக நிலையான கொடுப்பனவை வைத்திருப்பதும் நன்மை பயக்கும்.

சந்தையில் பல வகையான ஓய்வூதிய நலத்திட்டங்கள் உள்ளன. ஓய்வு காலத்தில் நிலையான வருமானத்தை உறுதிசெய்ய துல்லியமான திட்டமிடல் தேவைப்படுகிறது. PPF, NPS, PMVVY போன்ற பல்வேறு திட்டங்களிலும், பிற வருடாந்திர திட்டங்களிலும் முதலீடு செய்வதன் மூலம் ஓய்வூதியதாரர்கள் ரூ. 10,000 மாதாந்திர ஓய்வூதியத்தை உறுதியாகப் பெறலாம். இதை பற்றி விரிவாக காணலாம். 

முதலீடுகளின் மூலம் ரூ.10,000 மாதாந்திர ஓய்வூதியம் பெறுவது எப்படி?

பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF)

இபிஎஃப் திட்டம் தனியார் துறையில் சம்பளம் வாங்கும் ஊழியர்களின் ஓய்வூதிய நலனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பணிக்காலத்தில், ஊழியர் EPF கணக்கிற்கு அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதத்தை மாதாந்திர பங்களிப்பாகச் செலுத்துகிறார். கூடுதலாக, இதே அளவு பங்களிப்பு முதலாளி / நிறுவனத்தின் மூலமும் செய்யப்படுகின்றது. அதில் 8.33 சதவீதம் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திற்கு (EPS) செலுத்தப்படுகிறது, மீதமுள்ள 3.67 சதவீதம் EPF கணக்கிற்குச் செல்கிறது. மேலும், இந்த பங்களிப்புகளுக்கு மாதந்தோறும் வட்டி செலுத்தப்படுகிறது. ஓய்வுபெறும் போது, நீங்கள் ஒரே நேரத்தில் முழு EPF கார்பஸையும் திரும்பப் பெறலாம் அல்லது தேவைக்கேற்ப மாதாந்திர அல்லது காலமுறை ஓய்வூதியங்களுக்கு பதிவு செய்யலாம்.

தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS)

தேசிய ஓய்வூதிய அமைப்பு என்பது தனியார் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கான தன்னார்வ ஓய்வூதியத் திட்டமாகும். ஒரு குறிப்பிடத்தக்க ஓய்வூதிய கார்பஸை உருவாக்க NPS க்கு வழக்கமான பங்களிப்புகளை ஒருவர் தேர்வு செய்யலாம். தற்போது இதன் வட்டி விகிதம் 9 முதல் 12 சதவீதம் வரை உள்ளது. முதிர்வு காலத்தில் (மெச்யூரிட்டி), NPS கார்பஸில் 60 சதவீதத்தை மொத்தமாக திரும்பப் பெறலாம். மேலும் 40 சதவீதத்தை வருடாந்திர கொடுப்பனவுகளாக மாற்றலாம்.

மேலும் படிக்க | கடன் வாங்கியவர்களுக்கு முக்கிய செய்தி: வட்டி விகிதங்களை மாற்றுமா ரிசர்வ் வங்கி? முக்கிய அப்டேட்

பிரதம மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY)

PMVVY என்பது இந்திய அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் மற்றொரு ஓய்வூதியத் திட்டமாகும். இந்தத் திட்டம் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் ஒரே நேரத்தில் மொத்தத் தொகையை முதலீடு செய்து, 10 ஆண்டுகளுக்கு உறுதிசெய்யப்பட்ட மாதாந்திர வருமானத்தைப் பெறலாம்.

பிற ஓய்வூதியத் திட்டங்கள்

அரசாங்க ஆதரவு ஓய்வூதியத் திட்டங்களைத் தவிர, பல வங்கிகள் மற்றும் NBFC -கள் வழங்கும் பல ஓய்வூதியத் திட்டங்களும் உள்ளன. அந்த திட்டங்களின் மூலம் மாத ஓய்வூதியமாக ரூ. 10,000 பெற முடியும். இந்தத் திட்டங்கள் முதலீடுகளின் நெகிழ்வுத்தன்மை, உறுப்பினர் இறந்தால் கிடைக்கும் பலன்கள் மற்றும் உறுதியான வருமானம் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகின்றன. எல்ஐசி மற்றும் பிற காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் வருடாந்திர காப்பீட்டுத் திட்டங்களை நீங்கள் தேர்வு செய்யலாம். அவை சேமிப்பு விருப்பம் மற்றும் காப்பீட்டுப் பாதுகாப்பின் இரட்டை நன்மைகளுடன் வருகின்றன. 

பல மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நீண்ட கால முதலீட்டில் ஒரு நல்ல தொகையை சேர்க்க உதவுகின்றன. 10,000 ரூபாய் மாத ஓய்வூதியத்தைப் பெற மியூச்சுவல் ஃபண்ட் SIP திட்டங்களை நீங்கள் தேர்வு செய்யலாம். SIP திட்டங்களின் நன்மை என்னவென்றால், நீங்கள் ஓய்வூதிய கார்பஸை உருவாக்க ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை இதில் சேமிக்கலாம்.

மேலும் படிக்க | இல்லத்தரசிகளே... ‘இந்த’ டிப்ஸ்களை ஃபாலோ பண்ணா... நிதி தட்டுபாடே இருக்காது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News