Vehicle Scrapping Policy: பழைய வாகனங்களை மாற்றுவதற்கான ஊக்க திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

பழைய வாகனங்களை மாற்றுவதற்கான ஊக்க திட்டத்தின் கீழ், பழைய வாகனங்களின் உரிமையாளர்கள் பழைய மற்றும் தகுதியற்ற வாகனங்களை அகற்ற  முன்வந்தால், சிறந்த சலுகைகளைப் பெறுவார்கள்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 18, 2021, 09:16 PM IST
  • பழைய வாகனங்களை மாற்றுவதற்கான ஊக்க திட்டத்தின் கீழ், பழைய வாகனங்களின் உரிமையாளர்கள் பழைய மற்றும் தகுதியற்ற வாகனங்களை அகற்ற முன்வந்தால், சிறந்த சலுகைகளைப் பெறுவார்கள்.
  • 15 அண்டு கால பழைய வர்த்தக வாகனங்கள் பிட்னஸ் சான்றிதழ் பெறத் தவறினால் அவற்றின் பதிவு ரத்து செய்யப்படும்
Vehicle Scrapping Policy: பழைய வாகனங்களை மாற்றுவதற்கான ஊக்க திட்டத்தின் முக்கிய அம்சங்கள் title=

Vehicle Scrapping Policy : பழைய வாகனங்களை மாற்றுவதற்கான கொள்கையை விரைவில் செயல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது.  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை மக்களவையில் வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கையை அறிவித்தார். அதன்படி 15 அண்டு கால பழைய வர்த்தக வாகனங்கள் பிட்னஸ் சான்றிதழ் பெறத் தவறினால் அவற்றின் பதிவு ரத்து செய்யப்படும். 20 ஆண்டு கால பழைய தனியார் வாகனங்கள் பிட்னஸ் சான்றிதழ் பெற தவறினாலோ அல்லது பதிவு புதுப்பிக்கப்படவில்லை என்றாலோ பதிவு ரத்து செய்யப்படும். பழைய வாகனங்களை மாற்றுவதற்கான ஊக்க திட்டத்தின் கீழ், பழைய வாகனங்களின் உரிமையாளர்கள் பழைய மற்றும் தகுதியற்ற வாகனங்களை அகற்ற  முன்வந்தால், சிறந்த சலுகைகளைப் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.

"தூய்மையான சூழல் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் 'தன்னார்வ அடிப்படையிலான வாகனங்களை  நவீனமயமாக்கல் திட்டம்' அல்லது 'பழைய வாகனங்களை மாற்றுவதற்கான ஊக்க திட்டத்தை' அறிமுகப்படுத்துகிறது, 

மத்திய அரசு, மாநில அரசு, நகராட்சி நிறுவனங்கள், பஞ்சாயத்துகள், மாநில போக்குவரத்து நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் (பொதுத்துறை நிறுவனங்கள்) மற்றும் யூனியன் மற்றும் மாநில அரசாங்கங்களுடனான தன்னாட்சி அமைப்புகளின் 15 ஆண்டு கால பழைய வாகனங்கள் அனைத்தின் பதிவு  ரத்து செய்யப்படும். 15 ஆண்டு கால பழைய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்கள் 2022 ஏப்ரல் 1ம் தேதிக்குள் அகற்றப்படும் என கூறப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் தனது பட்ஜெட் உரையின் போது பழைய வாகனங்களை மாற்றுவதற்கான ஊக்க திட்டத்தை (Vehicle Scrapping Policy) முன்மொழிந்தார்.

ALSO READ | Airtel வழங்கும் அசத்தலான 4-IN-1 Family Plan, 500GB Data, Data Add on திட்டம்..!!!

பழைய வாகனங்களை மாற்றுவதற்கான ஊக்க திட்டத்தின் முக்கிய நோக்கம்: 

1) பழைய மற்றும் பழுதடைந்த வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்தல்

 2) இந்தியாவின் சுற்று சூழல் பாதுக்காப்பிற்கான பொறுப்பை நிறைவேற்றும் வகையில், வாகனத்தினால் காற்று மாசுபாட்டைக் குறைத்தல் 

3) சாலை மற்றும் வாகன பாதுகாப்பை மேம்படுத்துதல் 
4) சிறந்த எரிபொருள் செயல்திறனை அடைதல் 

5) பழைய வாகனங்களை அப்புறப்படும் துறையை முறைபடுத்தி வேலை வாய்ப்பை அதிகரித்தல்.

6) வாகன, எஃகு மற்றும் மின்னணு தொழில்களுக்கு குறைந்த விலை மூலப்பொருட்களின் கிடைக்கும் நிலையை உருவாக்குதல்.

பழைய வாகனத்திற்கு பதிலாக புதிய வாகனத்தை மாற்றிக் கொள்ளும் போது 5 சதவீத தள்ளுபடி வழங்க அனைத்து வாகன உற்பத்தியாளர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று கட்கரி மக்களவையில் தெரிவித்தார்.

ALSO READ | Petrol price hike: இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News