ஓய்வுக்குப் பிறகு டென்ஷன் இல்லாம இருக்கணுமா... ‘இவற்றில்’ முதலீடு செய்யுங்க!

அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வு என்பது ஒரு பெரிய நிகழ்வு. ஓய்வு பெற்ற பின் ஊய்வூதியம் கிடைப்பவர்களுக்கு சிக்கல் இல்லை. ஆனால், ஓய்வூதியம் இல்லாதவர்கள், தனது ஓய்வு காலத்திற்கான நிதியை திரட்ட சரியாக திட்டமிட வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 5, 2023, 05:25 PM IST
  • நிம்மதியாக முதுமை காலத்தை கழிக்க, பணிபுரியும் போது ஓய்வு வாழ்க்கையைத் திட்டமிடுவது மிகவும் முக்கியமானது.
  • ஓய்வுக்குப் பிறகு எந்த விதமான பிரச்சனையும் வராமல் இருக்க, செய்ய வேண்டியவை.
  • முன்பை விட அதிகமான மக்கள் ஓய்வு காலத்திற்கான நிதி தேவையை சமாளிக்க திட்டமிட்டு வருகின்றனர்.
ஓய்வுக்குப் பிறகு டென்ஷன் இல்லாம இருக்கணுமா... ‘இவற்றில்’ முதலீடு செய்யுங்க! title=

அரசு அல்லது தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வு என்பது ஒரு பெரிய நிகழ்வு. ஓய்வு பெற்ற பின் ஊய்வூதியம் கிடைப்பவர்களுக்கு சிக்கல் இல்லை. ஆனால், ஓய்வூதியம் இல்லாதவர்கள், தனது ஓய்வு காலத்திற்கான நிதியை திரட்ட சரியாக திட்டமிட வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில், வழக்கமான வருமானம் இல்லாதபோது, ​​வீட்டுச் செலவுகளைச் சந்திப்பதில் சிக்கல் இருக்காது. அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைத்தாலும் சில நேரங்களில் அது போதாது என்ற நிலையும் உள்ளது. எனவே சரியான திட்டமிடுதல் அவசியம். 
நிம்மதியாக முதுமை காலத்தை கழிக்க, பணிபுரியும் போது ஓய்வு வாழ்க்கையைத் திட்டமிடுவது மிகவும் முக்கியமானது. ஓய்வுக்குப் பிறகு எந்த விதமான பிரச்சனையும் வராமல் இருக்க, எங்கு, எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதை விரிவாக அறிந்து கொள்ளலாம்.

நீல்சன் மற்றும் IQ உடன் இணைந்து PGIM இந்தியா நடத்திய ஒரு கணக்கெடுப்பின்படி, முன்பை விட அதிகமான மக்கள் ஓய்வு காலத்திற்கான நிதி தேவைய சமாளிக்க திட்டமிட்டு வருகின்றர். கோவிட் தொற்றுநோய்க்கு முன், 49 சதவீதம் பேர் தங்கள் ஓய்வூதியத் திட்டங்களைப் பற்றி சிந்தித்தனர். இன்று இந்த எண்ணிக்கை 67 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது தவிர, அவர் தனது ஓய்வு கால வாழ்க்கையை, யாரையும் சாராமல் நிம்மதியாக கழிக்க விரும்புகிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

உங்களுக்கு வேலை கிடைத்தவுடன், நீங்கள் ஓய்வு பெறும் வரை பணம் சம்பாதிப்பீர்கள். ஒவ்வொருவரின் சம்பாத்தியம் வித்தியாசமானது. சிலர் ஆண்டுக்கு லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும், சிலருக்கு கோடிக்கணக்கில் பேக்கேஜ்கள் கிடைக்கும். இங்கே நீங்கள் உங்கள் ஓய்வூதியத் திட்டம் (Pension Plans) அல்லது போர்ட்ஃபோலியோவிற்கு நிபுணர்களின் உதவியைப் பெற வேண்டும். உங்கள் தேவைக்கேற்ப நிபுணர்கள் உங்கள் போர்ட்ஃபோலியோவை உருவாக்குவார்கள். இதில், எதிர்கால பணவீக்கம் மற்றும் உங்கள் வருமான இலக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

மன அழுத்தம் இல்லாத ஓய்வு காலத்தை அனுபவிக்க, எவ்வளவு பணம் சேமிக்கப்பட வேண்டும் என்பது தனிப்பட்ட வருமானம், தேவைகள் மற்றும் இலக்குகளைப் பொறுத்தது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் 10-15 சதவீதத்தை சேமிப்பது நல்லது. உங்கள் இலக்குகள் மற்றும் விருப்பங்களை அடையாளம் காண நிதி ஆலோசகர் உங்களுக்கு உதவ முடியும்.

மேலும் படிக்க | LIC சரல் பென்ஷன் திட்டம்..... இனி பென்ஷன் இல்லை என்ற டென்ஷன் இல்லை..!!

முதலீட்டை எப்போது தொடங்குவது என்பதைப் பற்றி பேசினால், முதலீடு செய்வது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் தொடங்க வேண்டும். படிப்பை முடித்துவிட்டு, சம்பாதிக்கத் தொடங்கியவுடன் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும் என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள். ஏனென்றால், எவ்வளவு சீக்கிரம் சேமிக்கத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு காலம் உங்கள் பணம் பன்மடங்காக வாய்ப்பு அதிகரிக்கும்.

பெரும்பாலான மக்கள் ஓய்வு பெறுவதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விருப்பங்களைத் தேர்வு செய்கிறார்கள். தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS), வருங்கால வைப்பு நிதி (PF) அல்லது பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மியூச்சுவல் ஃபண்டுகள் ஓய்வு காலத்திற்கான நிதியை சேமிப்பதற்கான சிறந்த முதலீட்டு விருப்பங்கள். இவற்றைல், உங்களுக்கு ஏற்ற வகையிலான முதலீட்டை தேர்ந்தெடுத்து, ஒய்வு காலத்தை நிம்மதியாக கழிக்கலாம்.

மேலும் படிக்க |  CIBIL ஸ்கோரை பெரிதும் பாதிக்கும் கிரெடிட் கார்டு செட்டில்மெண்ட்... நீங்கள் செய்ய வேண்டியது என்ன..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News