இந்த நபர்கள் மட்டும் பான் எண்ணுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டாம்!

PAN-Aadhaar link: 2017 ஆம் ஆண்டில் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, பான்-ஆதார் இணைக்கும் ஆணையிலிருந்து நான்கு பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Mar 6, 2023, 12:13 PM IST
  • பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், ஏப்ரல் 1 முதல் பான் கார்டு செயல்படாது.
  • இந்திய குடிமகன் அல்லாதவர்கள் பான்-ஆதார் இணைக்க வேண்டியதில்லை.
  • 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் பான்-ஆதார் இணைக்க வேண்டியதில்லை.
இந்த நபர்கள் மட்டும் பான் எண்ணுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டாம்! title=

PAN-Aadhaar link: பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைப்பதற்கான காலக்கெடு மார்ச் 31, 2023 தேதியோடு முடிவடைகிறது. இந்த குறிப்பிட்ட தேதிக்குள் பான்-ஆதார் இணைப்பு செயல்முறையை செய்யவில்லை என்றால், நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டு செயலிழந்து விடும் என்று அரசு கூறியுள்ளது.  பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது.  பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க அரசு வலியுறுத்துவது இது முதல் தடவையல்ல, இதற்கு முன்னரே பல முறை அரசு மக்களை வலியுறுத்தி வருகிறது.  அரசு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், ஏப்ரல் 1 முதல் பான் கார்டு செயல்படாது.

இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப துறை கூறுகையில். "பான்-ஆதார் இணைப்பு கட்டாயம், தாமதிக்க வேண்டாம், இன்றே இணைத்திடுங்கள்.  தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்படி, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும், மார்ச் 31, 2023க்கு முன், தங்களது நிரந்தரக் கணக்கு எண்களை (பான்) ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும்.  ஏப்ரல் 1, 2023 முதல், இணைக்கப்படாத பான் எண் செயலிழந்துவிடும்,” என்று கூறியுள்ளது.  2017 ஆம் ஆண்டில் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, பான்-ஆதார் இணைக்கும் ஆணையிலிருந்து நான்கு பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  அந்த நான்கு பிரிவுகளில் யார் வருகிறார்கள் என்பதை பின்வருமாறு காண்போம். 

மேலும் படிக்க | Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு ஜாக்பாட், பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறலாம்!!

1) வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் வசிப்பவர்கள்

2) 1961-ன் வருமான வரிச் சட்டத்தின்படி வசிக்காதவர்.

3) 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள.

4. இந்திய குடிமகன் அல்லாதவர்.

பான் கார்டை, ஆதார் கார்டுடன் இணைக்கும் செயல்முறை:

- incometaxindiaefiling.gov.in என்கிற இந்திய வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

- 'லிங்க் ஆதார்' என்பதைக் கிளிக் செய்யவும்.

- பான் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிடவும்.

- e-Pay Tax மூலம் பணம் செலுத்த தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

- பான் மற்றும் மொபைல் எண்ணை உறுதிப்படுத்துவதன் மூலம் ஓடிபி-ஐ பெறலாம்.

- ஓடிபி சரிபார்ப்புக்குப் பிறகு, e-Pay Tax பக்கம் திறக்கும்.

- இப்போது வருமான வரி டைலில் தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

- AY (2023-24) மற்றும் பணம் செலுத்தும் வகையை மற்ற ரசீதுகளாக (500) தேர்ந்தெடுத்து தொடரவும்.

- அப்ளிகபில் தொகை (ரூ. 1,000) நிரப்பப்பட்டு, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

- இ-ஃபைலிங் போர்ட்டலில் ஆதார் இணைக்கும் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

பணம் செலுத்திய 4-5 வேலை நாட்களுக்குப் பிறகு, இ-ஃபைலிங் போர்டல் > உள்நுழைவு > டாஷ்போர்டில், 'லிங்க் ஆதார் டு பான்; என்கிற ஆப்ஷனின் கீழ், 'லிங்க் ஆதார்' என்பதைக் கிளிக் செய்யவும்.  பான் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட்டு "சரிபார்" என்பதைக் கிளிக் செய்யவும்.  பிறகு "உங்கள் கட்டண விவரங்கள் சரிபார்க்கப்பட்டன" என்ற பாப்-அப் செய்தி வந்ததும், ஆதார் இணைப்புக் கோரிக்கையைச் சமர்ப்பிக்க, பாப்-அப் செய்தியில் "தொடரவும்" என்பதைக் கிளிக் செய்யவும்.  இப்போது தேவையான விவரங்களைப் பூர்த்தி செய்து, "லிங்க் ஆதார்" என்கிற பட்டனை கிளிக் செய்யவும்.  இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் 6 இலக்க ஓடிபி-ஐ உள்ளிட வேண்டும்.  அதன் பிறகு, ஆதார்-பான் இணைப்பிற்கான உங்கள் கோரிக்கை வெற்றியடையும்.

மேலும் படிக்க | Jackpot! உங்கள் தலை எழுத்தை மாற்றும் ‘இந்த’ பிங்க் நிற 20 ரூபாய் நோட்டு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News