மார்ச் 31 தான் கடைசி தேதி! இவர்களுடைய பான் கார்ட் செல்லாது!

பான் கார்டு செயலிழந்துவிட்டால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் அந்த கார்டுதாரரே பொறுப்பு என்று சிபிடிடி கூறியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Dec 25, 2022, 11:18 AM IST
  • பான் கார்ட்டை மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.
  • ஆதாருடன் இணைக்காதவர்களின் பான் கார்ட் செல்லாது.
  • வருமானவரித்துறை மீண்டும் எச்சரிக்கை.
மார்ச் 31 தான் கடைசி தேதி! இவர்களுடைய பான் கார்ட் செல்லாது!  title=

பான் கார்டு வைத்திருப்பவர்கள் 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  கார்டுதாரர்கள் தாமதிக்காமல் உடனே இணைக்கும்படி வருமான வரித்துறை அறிவித்துள்ளது.  வருமான வரிச் சட்டம், 1961ன் படி, விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் கார்டுதாரர்களும் 31.3.2023 தேதிக்கு முன்னர் தங்களது பான் கார்டை ஆதாருடன் கட்டாயம் இணைக்கவேண்டும் மற்றும் 01.04.2023 முதல் இணைக்கப்படாத பான் கார்டுகள் செயல்படாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | குடும்ப தலைவிகளுக்கு மகிழ்ச்சியான அப்டேட்!..எல்பிஜி விலை விரைவில் குறையும்

கடந்த 2017 மே மாதத்தில் மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, அசாம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் வசிக்கும் நபர்கள், வருமான வரிச் சட்டம், 1961-ன் கீழ் இல்லாதவர்கள், 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர் மற்றும் இந்தியக் குடிமகன் அல்லாதவர்கள் போன்ற நபர்கள் விலக்கு வகையின் கீழ் வருவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.  சிபிடிடி வெளியிட்ட அறிக்கையில் பான் கார்டு செயலிழந்துவிட்டால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் அந்த கார்டுதாரரே பொறுப்பு என்றும் அவர் பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செயலிழந்த பான் கார்டை வைத்து ஐடி ரிட்டனைத் தாக்கல் செய்ய முடியாது, நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப் பெற முடியாது, வரி விலக்கில் சிக்கல் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும்.  இதுதவிர வங்கிகள் மற்றும் பிற நிதி சேவைகளில் வரி செலுத்துவோர் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் படிக்க | 7th Pay Commission: அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அப்டேட், எப்போது அறிவிப்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News