500 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய தகவல், தெரிந்துகொள்வது அவசியம்

RBI Update: இன்றைய உலகில் ஒரு சாதாரண மனிதனுக்கு உண்மையான மற்றும் போலியான ரூபாய் நோட்டுகளை வேறுபடுத்துவது மிகவும் கடினமாகி விட்டது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 21, 2023, 08:53 PM IST
  • 500 ரூபாய் நோட்டு குறித்து தொடர்ந்து பல வதந்திகள் பரவி வருகின்றன.
  • மக்களின் இந்த பிரச்சனையை மனதில் வைத்து, 500 ரூபாய் நோட்டு தொடர்பான முக்கிய விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
  • இதன் மூலம் மக்கள் உண்மையான மற்றும் போலி நோட்டுகளை எளிதாக வேறுபடுத்தி அறியலாம்.
500 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய தகவல், தெரிந்துகொள்வது அவசியம் title=

RBI Update: சில மாதங்களுக்கு முன்னர் இந்திய ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து நீக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து மற்ற மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் தொடர்பான பல செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. இவற்றில் எது உண்மை எது வதந்தி என்ற குழப்பம் தொடர்ந்து மக்களுக்கு இருந்து வருகிறது. குறிப்பாக, 2000 ரூபாய்க்கு அடுத்த பெரிய மதிப்பிலான ரூபாய் நோட்டான 500 ரூபாய் நோட்டு குறித்து தொடர்ந்து பல வதந்திகள் பரவி வருகின்றன. இவை ஒரு பக்கம் இருக்க, ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மக்கள் அதிகாரப்பூர்வ அமைப்புகளிலிருந்து வரும் அறிவிப்புகள் மற்றும் செய்திகளை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) இந்திய அரசாங்கமும் அவ்வப்போது மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன. 

இன்றைய உலகில் ஒரு சாதாரண மனிதனுக்கு உண்மையான மற்றும் போலியான ரூபாய் நோட்டுகளை வேறுபடுத்துவது மிகவும் கடினமாகி விட்டது. போலி நோட்டுகள் நிஜ நோட்டுகளை போலவே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் மோசடி செய்பவர்களால் அச்சிடப்படுகின்றன. அதுவும் 500 ரூபாய் போன்ற அதிக மதிப்பிலான நோட்டுகளில் பல போலி நோட்டுகள் மோசடிக்காரர்களால் அடிக்கடி அச்சிடப்பட்டு வெளியிடப்படுகின்றன.

மக்களின் இந்த பிரச்சனையை மனதில் வைத்து, 500 ரூபாய் நோட்டு தொடர்பான முக்கிய விவரங்களை ரிசர்வ் வங்கி (Reserve Bank) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் உண்மையான மற்றும் போலி நோட்டுகளை எளிதாக வேறுபடுத்தி அறியலாம்.

மேலும் படிக்க | PPF vs FD: மிகச்சிறந்த வருமானம் அளிக்கும் உங்களுக்கு ஏற்ற திட்டம் எது?

அசல் ரூ. 500 நோட்டு

- அசல் ரூ.500 நோட்டின் அளவு 63 மி.மீ 150 மி.மீ என மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

- இந்த நோட்டு ஸ்டோன் க்ரே நிறத்தில் இருக்கும். 

- நோட்டின் மையத்தில் மகாத்மா காந்தியின் படமும், பின்புறம் செங்கோட்டையும் உள்ளது.

- நோட்டின் பின்புறம் உள்ள செங்கோட்டையில் காணப்படும் மூவர்ணக் கொடியின் நிறம் உண்மையான நிறம் என்பது குறிப்பிடத்தக்கது.

- 500 ரூபாய் நோட்டின் (500 Rupee Note) மதிப்பு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் காட்டப்பட்டுள்ளது. இது நோட்டின் முன்னும் பின்னும் காணப்படும். 500 நோட்டில் வடிவ வடிவில் மிகச் சிறிய எண்ணிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வித்தியாசத்தை இப்படி தெரிந்துகொள்ளலாம்

ரூ.500 நோட்டின் இடது பக்கம் சிறிய எழுத்துக்கள் முதல் பெரிய எழுத்துகளாக பெரிதாகும் எண்களின் பலகை உள்ளது. உண்மையான ரூபாய் நோட்டில் ஆளுநரின் கையொப்பம், ரிசர்வ் வங்கியின் வாக்குறுதி விதி மற்றும் வலது பக்கத்தில் ரூ.500 எலக்ட்ரோடைப் வாட்டர்மார்க் ஆகியவை உள்ளன. பாதுகாப்பு த்ரெட்டில் இருக்கும் ரூபாய் நோட்டின் நிறம் மாறுதல் மூலமாகவும் உண்மையான மற்றும் போலியான நோட்டுகளை வேறுபடுத்தி அறியலாம்.

இரண்டு நோட்டுகளுக்கு ஒரே வரிசை எண் இருந்தால், அவை செல்லுபடியாகுமா?

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வங்கி நோட்டுகள் ஒரே வரிசை எண்ணைக் கொண்டிருக்கலாம் என்றும், ஆனால் அவற்றில் வெவ்வேறு உள்ளீட்டு எழுத்துக்கள் அல்லது வெவ்வேறு அச்சிடும் ஆண்டுகள் அல்லது இந்திய ரிசர்வ் வங்கியின் வெவ்வேறு கவர்னர்களின் கையெழுத்தும் இருக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி இது குறித்து கூறியுள்ளது. இன்செட் லெட்டர் என்பது ரூபாய் நோட்டின் நம்பர் பேனலில் அச்சிடப்பட்ட எழுத்தாகும். ரூபாய் நோட்டுகள் இன்செட் லெட்டர் இல்லாமலும் இருக்கலாம்.

மேலும் படிக்க | சிறுசேமிப்பு திட்டம் அட்டகாசமான செய்தி: SCSS, PPF, NSC...விதிகளை தளர்த்தியது அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News