ரூ. 50,100,200,500 நோட்டுகள் பற்றி ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய தகவல்: உடனே தெரிந்துகொள்ளுங்கள்

RBI Guidelines: பொருட்களை வாங்கும்போதும், ஏதாவது சேவைக்கு பணம் செலுத்தும் போதும் நாம் சிதைந்த, சேதம் அடைந்த நோட்டுகளை அளித்தால் சில சமயம் கடைக்காரர்கள் அவற்றை ஏற்க மறுக்கின்றனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 5, 2023, 01:12 PM IST
  • சிதைந்த, அழுக்கு நோட்டுகளை எப்படி மாற்றுவது?
  • வங்கிகளில் நோட்டுகளை மாற்றும் முறை என்ன?
  • ரூபாய் நோட்டு பரிமாற்ற வரம்பு எவ்வளவு?
ரூ. 50,100,200,500 நோட்டுகள் பற்றி ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய தகவல்: உடனே தெரிந்துகொள்ளுங்கள் title=

RBI Guidelines: பலமுறை ஏடிஎம் -இல் இருந்து பணம் எடுக்கும்போது சிதைந்த நோட்டுகள் வந்தால், நாம் குழப்பத்திற்கு ஆளாவதுண்டு. இது மட்டுமின்றி சந்தையில் பலமுறை, கடைகளிலும் பிற இடங்களிலும் நாம் இப்படிப்பட்ட நோட்டுகளை பெறுவதுண்டு. ஆனால், பொருட்களை வாங்கும்போதும், ஏதாவது சேவைக்கு பணம் செலுத்தும் போதும் நாம் சிதைந்த, சேதம் அடைந்த நோட்டுகளை அளித்தால் சில சமயம் கடைக்காரர்கள் அவற்றை ஏற்க மறுக்கின்றனர். இப்படிப்பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லுமா செல்லாதா? இந்த குழப்பம் அனைவருக்கும் உள்ளது. உண்மை என்னவென்றால், ஏடிஎம் அல்லது பிற வழிகளில் உங்களுக்கு இப்படிப்பட்ட்ட நோட்டுகள் கிடைத்தால், நீங்கள் கவலைப்பட தேவையில்லை. ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, அத்தகைய நோட்டுகளை வங்கியில் எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.

சிதைந்த, அழுக்கு நோட்டுகளை எப்படி மாற்றுவது

அழுக்கான, லேசாக கிழிந்த நோட்டுகள் சிதைந்த நோட்டுகளாக கருதப்படுகின்றன. இரு முனைகளிலும் எண்களைக் கொண்ட நோட்டுகள், அதாவது 10 ரூபாய் நோட்டு மற்றும் அதற்கு மேலான மதிப்பு கொண்ட இரண்டு துண்டுகளாக கிழிந்த நோட்டுகளும் சிதைந்த நோட்டுகளாக கருதப்படுகின்றன. இந்த நோட்டுகளை அனைத்து பொதுத்துறை வங்கி கிளைகளிலும், அனைத்து தனியார் துறை வங்கிகளின் கரன்சி செஸ்ட் கிளைகளிலும், இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து வெளியீட்டு அலுவலகங்களிலும் மாற்றிக்கொள்ளலாம். இதைச் செய்ய, எந்தப் படிவத்தையும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை.

சிதைந்த நோட்டுகளை மாற்றும் முறை

துண்டுகளாக உள்ள நோட்டுகள் / மற்றும்/அல்லது அத்தியாவசியப் பகுதிகள் விடுபட்ட நோட்டுகளையும் மாற்றலாம். இருப்பினும், இந்த நோட்டுகளின் ரீபண்ட் மதிப்பு ரிசர்வ் வங்கி (நோட் ரீஃபண்ட்) விதிகளின்படி செலுத்தப்படுகிறது. அனைத்து பொதுத் துறை வங்கிக் கிளைகளிலும், அனைத்து தனியார் துறை வங்கிகளின் நாணயச் செஸ்ட் கிளைகளிலும், ரிசர்வ் வங்கியின் (Reserve Bank Of India) அனைத்து வெளியீட்டு அலுவலகங்கலிலும் எந்தப் படிவத்தையும் பூர்த்தி செய்யாமல்,  இவற்றை மாற்றலாம்.

மேலும் படிக்க | EPFO அட்டகாசமான அப்டேட்: 75 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. விரைவில் ஊதிய வரம்பில் ஏற்றம்!!

அதிக அழுக்கான, கிழிந்த, எரிந்த நோட்டுகள் 

சாதாரண பராமரிப்பைத் தாங்க முடியாத நிலையில் இருக்கும் அதிகப்படியாக அழுக்கடைந்த, கிழிந்த அல்லது எரிந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகத்தில் மட்டுமே மாற்ற முடியும். அத்தகைய நோட்டுகளை வைத்திருக்கும் நபர்கள் ரிசர்வ் வங்கியின் (RBI) உரிமைகோரல்கள் பிரிவின் பொறுப்பு அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

வங்கிகளில் நோட்டுகளை மாற்றும் முறை

ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கும்போது சிதைந்த நோட்டுகள் (Mutilated Notes) கிடைத்தால், நீங்கள் எந்த வங்கியின் ஏடிஎம் -இல் பணத்தை எடுத்தீர்களோ அந்த வங்கிக்கு செல்ல வேண்டும். அங்கு சென்று ஒரு விண்ணப்பம் எழுதி ஏடிஎம் சீட்டுடன் பரிவர்த்தனை தொடர்பான தகவல்களை கொடுக்க வேண்டும். ஏடிஎம்மில் இருந்து சீட்டு வரவில்லை என்றால், மொபைலில் வந்த எஸ்எம்எஸ் விவரங்களையும் கொடுக்கலாம். அதன் பிறகு சிதைந்த ரூபாய் நோட்டு எளிதாக மாற்றப்படும்.

ரூபாய் நோட்டு பரிமாற்ற வரம்பு

ரூபாய் நோட்டுகளை (Currency Notes) மாற்றுவதற்கு ஒரு நிலையான வரம்பு உள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, ஒரு நபர் ஒரே நேரத்தில் 20 நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும். மேலும், இந்த நோட்டுகளின் மதிப்பு ரூ.5000க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பினும், மோசமாக எரிந்த மற்றும் சிதைந்த நோட்டுகளை மாற்ற முடியாது.

மேலும் படிக்க | 8th Pay Commission: அதிரடி 44% ஊதிய உயர்வுடன் வரும் அடுத்த ஊதியக்கமிஷன்.. எப்போது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News