ஒரே நாளில் ரூ.100000 கோடி நஷ்டம்! HDFC வங்கியின் பங்குகள் 8% சரிவு.. காரணம் தெரியுமா?

HDFC Bank Shares Loss: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC பங்குகள் 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் வீழ்ச்சிக்குப் பிறகு, மோசமான சரிவை கண்டுள்ளது. அதன் பங்குகள் 8.5% சரிந்து சந்தித்தது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 17, 2024, 05:49 PM IST
ஒரே நாளில் ரூ.100000 கோடி நஷ்டம்! HDFC வங்கியின் பங்குகள் 8% சரிவு.. காரணம் தெரியுமா? title=

HDFC Bank Stock Biggest Drop: பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு இன்று (ஜனவரி 17, புதன்கிழமை) மிகவும் மோசமான நாளாக அமைந்தது. ஒருபுறம், சென்செக்ஸ் 1600 புள்ளிகளுக்கு மேல் சரிந்த நிலையில், மறுபுறம் ​​​​நிஃப்டியும் 450 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. சந்தையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்திற்கு மத்தியில், 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டாளர்கள் பெறும்பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎப்சி (HDFC) வங்கி, கடந்த மூன்று மாதங்களில் கிடைத்த வருவாயில் சம்பாதித்ததில் ஐந்து மடங்குக்கும் அதிகமான தொகை இழந்து மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்தது. ஹெச்டிஎப்சி பங்குகள் சரிய காரணம் என்ன? இன்றைய பங்குச் சந்தை நிலவரம் குறித்து பார்ப்போம்.

முதலில், ஷேர் மார்க்கெட்டில் உள்ள குழப்பத்தைப் பற்றி பேசலாம். பாம்பே பங்குச் சந்தையின் 30-பங்குகள் கொண்ட சென்செக்ஸ் காலை 9.15 மணிக்கு 71,988 என்ற அளவில் சரிவுடன் துவங்கியது மற்றும் சந்தை மூடப்பட்டது. இதற்குப் பிறகு, அது 1628.02 புள்ளிகள் அல்லது 2.23 சதவீதம் சரிந்து 71,500.76 என்ற அளவில் முடிவடைந்தது. மறுபுறம், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி இந்த நேரத்தில் 460.35 புள்ளிகள் சரிவுடன் 21,571.95 அளவில் நிறைவடைந்தது. பங்குச் சந்தையில் ஏற்பட்ட இந்த பெரும் வீழ்ச்சியால், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் சரிவைக் கண்டது.

எச்டிஎஃப்சி வங்கியின் முதலீட்டாளர்கள் சந்தையில் நாள் முழுவதும் சரிவுக்கு மத்தியில் அதிக இழப்பை சந்தித்துள்ளனர். எச்டிஎஃப்சி நிறுவனத்தின் பங்குகள் 8 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன. வர்த்தகத்தின் கடைசி மணிநேரத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கிப் பங்குகளில் கடுமையான வீழ்ச்சி அடைந்து, பிஎஸ்இயில் 8.57 சதவிகிதம் பெரும் சரிவுடன் ரூ.1535க்கு சரிந்தது. எச்டிஎஃப்சி பங்குகள் நாள் முழுவதும் சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. காலை 9.15 மணிக்கு ரூ.1570 என்ற அளவில் திறக்கப்பட்டு ரூ.1528 என்ற குறைந்த அளவைத் தொட்டது. வங்கியின் பங்குகளின் இந்த வீழ்ச்சியால், அதன் முதலீட்டாளர்கள் (HDFC Bank Investors) 100,000 கோடி ரூபாய் இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது.

மேலும் படிக்க - RBI-யின் புதிய விதி... தனிநபர் கடன் வட்டி விகிதம் 1.5% வரை உயரும் வாய்ப்பு...!

எச்டிஎஃப்சி வங்கிப் பங்கின் இந்த சரிவு முதலீட்டாளர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் கடந்த வர்த்தக நாளான செவ்வாய்கிழமை, நிறுவனம் அதன் டிசம்பர் காலாண்டு முடிவுகளை அறிவித்தது. அது மிகவும் சிறப்பாக இருந்தது. எச்டிஎஃப்சி வங்கியின் மூன்றாம் காலாண்டு (Q3) முடிவுகளைப் பார்த்தால், டிசம்பர் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்படி ஹெச்டிஎப்சி வங்கி மூன்று மாதங்களில் ரூ.16,372 கோடி லாபம் ஈட்டியுள்ளது. அதேசமயம், நிறுவனத்தின் சந்தை மூலதனம் (HDFC Bank MCap) ஒரே நாள் வர்த்தகத்தில் ரூ.100,000 கோடி குறைந்துள்ளது.

செவ்வாய்கிழமை கடைசி வர்த்தக நாளன்று, எச்டிஎப்சி வங்கியின் சந்தை மூலதனம் சந்தை முடிவில் ரூ.12,74,740.22 கோடியாக பதிவாகியிருந்தது. ஆனால் புதன்கிழமை அது ரூ.11.68 லட்சம் கோடியாக குறைந்தது. அதன்படி பார்த்தால், ஒரே நாளில் நிறுவனத்தின் மதிப்பு ரூ.106740.22 கோடி சரிவைக் கண்டுள்ளது. 

புதன்கிழமை, வங்கி நிஃப்டி 2000 புள்ளிகள் அல்லது 4.22 சதவீதம் சரிந்தது. வீழ்ச்சியடைந்த பங்குகளைப் பற்றி பார்த்தால், எச்டிஎஃப்சி வங்கியைத் தவிர, இந்தியன் எனர்ஜி எக்ஸ்சேஞ்ச் (Indian Energy Exchange) பங்குகள் சுமார் 10 சதவீதம் சரிந்து ஒரு பங்கிற்கு ரூ.147.85 ஆக இருந்தது. ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஜோமோட்டோ (Zomato) பங்குகள் 4.46% சரிந்து ஒரு பங்கிற்கு ரூ 127.60 ஆகவும், பினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Finolex Industries) பங்குகள் 3.82% சரிந்துள்ளது.

மேலும் படிக்க - FD: ஃபிக்ஸட் டெபாசிட்களில் குறுகிய கால எஃப்டி நல்லதா? இல்லை நீண்ட கால வைப்பு பலன் தருமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News