NPS கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகளில் முக்கிய மாற்றம்..!!

NPS Withdrawal Rules: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தேசிய ஓய்வூதிய அமைப்பு (என்பிஎஸ்) மூலம் கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான புதிய விதிகளை பிப்ரவரி 1ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 29, 2024, 02:01 PM IST
  • ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கீழ் மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டமான தேசிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • சந்தாதாரர்கள் தங்கள் சந்தாவின் முழு காலத்திலும் மூன்று முறை மட்டுமே பகுதியளவு திரும்பப் பெற முடியும்.
  • சந்தாதாரர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், குடும்ப உறுப்பினரும் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்.
NPS கணக்கில் இருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகளில் முக்கிய மாற்றம்..!! title=

NPS Withdrawal Rules: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கீழ் மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டமான தேசிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பொது, தனியாா், அமைப்புசாராத் துறை தொழிலாளா்களும் இணைந்து பயன்பெற முடியும். இந்நிலையில், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) கீழ் ஓய்வூதியத்தை திரும்பப் பெறுவதற்கான புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1, 2024 முதல் அமலுக்கு வரும். ஓய்வூதிய கட்டுப்பாட்டு அமைப்பான PFRDA ஜனவரி 12, 2024 அன்று ஒரு முதன்மை சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில் பகுதியளவு திரும்பப் பெறுவதற்கான புதிய விதிகள் கூறப்பட்டுள்ளன. விதிகளின்படி, NPS சந்தாதாரர்கள் தங்கள் தனிப்பட்ட ஓய்வூதியக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பங்களிப்பில் 25% க்கு மேல் எடுக்க முடியாது.

மேலும், சந்தாதாரர்கள் தங்கள் சந்தாவின் முழு காலத்திலும் மூன்று முறை மட்டுமே பகுதியளவு திரும்பப் பெற முடியும். அத்துடன் சந்தாதாரர் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் திட்டத்தில் உறுப்பினராக இருந்தால், மட்டுமே குறிப்பிட்ட அளவு பணத்தை திரும்பப் பெற தகுதியுடையவர் ஆவார். குழந்தைகளின் கல்வி, திருமணம், வீடு கட்டுதல் அல்லது மருத்துவ அவசரம் போன்ற சூழ்நிலைகளில் NPS கணக்கில் இருந்து பகுதியளவு திரும்பப் பெறுதல் அனுமதிக்கப்படுகிறது.

புதிய விதிகளின்படி, வாடிக்கையாளர்கள் பின்வரும் சூழ்நிலைகளில் ஒரு குறிப்பிட்ட அளவை திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்:

1. சந்தாதாரரின் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளைச் சமாளிக்க, திருமணச் செலவுகளைச் சமாளிக்க பணத்தை எடுக்கலாம். இது சட்டப்படி தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கும் பொருந்தும்.

2. சந்தாதாரரின் பெயரில் அல்லது கூட்டாகச் சொந்தமான ஒரு வீடு அல்லது பிளாட் வாங்குவது அல்லது கட்ட NPS கணக்கில் இருந்து பணத்தை எடுகக்லாம் .

3. புற்று நோய், சிறுநீரக செயலிழப்பு, முக்கிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, கரோனரி ஆர்டரி பைபாஸ்  போன்ற தீவிர சிகிச்சை மற்றும் பிற நோய்களுக்கான சிகிச்சை செலவுகளை சமாளிக்க பணத்தை எடுக்கலாம்.
 
4. உடல் ஊனம் அல்லது இயலாமை காரணமாக ஏற்படும் மருத்துவ மற்றும் தற்செயலான செலவுகள்.

5. திறன் மேம்பாடு அல்லது பயிற்சிக்கான செலவுகளை சமாளிக்க பணத்தை எடுக்கலாம்..

6. வாடிக்கையாளர் தனது சொந்த  பிஸினஸ் முயற்சியை அல்லது ஏதேனும் ஒரு ஸ்டார்ட்அப் திட்டத்தை தொடக்க பணத்தை எடுக்கலாம்.

மேலும் படிக்க | பிப்ரவரி 1 முதல் முக்கிய விதிகளில் மாற்றம்... நோட் பண்ணிக்கோங்க மக்களே..!!

என்பிஎஸ் கணக்கில் இருந்து பணத்தை திரும்பப் பெறுவதற்கான பிற விதிகள்:

1. சந்தாதாரர் NPS இல் சேர்ந்த நாளிலிருந்து குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் உறுப்பினராக முடித்திருக்க வேண்டும்.

2. பகுதியளவு திரும்பப் பெறும் தொகை வாடிக்கையாளரின் மொத்த பங்களிப்பில் நான்கில் ஒரு பங்கிற்கு (25%) அதிகமாக இருக்கக்கூடாது.

3. அடுத்தடுத்த பகுதியளவு திரும்பப் பெறுதல்களுக்கு, முந்தைய பகுதி திரும்பப் பெற்ற தேதியிலிருந்து சந்தாதாரர் செய்த கூடுதல் பங்களிப்புகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

NPS கணக்கில் இருந்து பணத்தை திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முறை

சந்தாதாரர்கள் தங்கள் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளை அந்தந்த அரசாங்க நோடல் அலுவலகம் அல்லது இருப்பு மையம் மூலம் மத்திய பதிவுசெய்தல் முகமைக்கு (CRA) சமர்ப்பிக்க வேண்டும். கோரிக்கையில் திரும்பப் பெறப்பட்டதன் நோக்கத்தை விளக்கும் சுய அறிவிப்பு இருக்க வேண்டும். சந்தாதாரர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், குடும்ப உறுப்பினரும் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க | பல நிதியமைச்சர்களின் சாதனைகளை பின்தள்ளி முன்னேறும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News