அதிக வருமானத்துடன் வரி சேமிப்பு பலன்களும் கிடைக்க... சில சிறந்த முதலீட்டு திட்டங்கள்..!

மத்திய அரசால் நடத்தப்படும் பல அரசு திட்டங்கள், சிறந்த வகையில் வரி விலக்கு அளிக்கின்றன. அத்தகைய மூன்று திட்டங்களைப் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு, ஆயிரக்கணக்கான ரூபாய் வரியைச் சேமிக்கலாம்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 26, 2023, 10:00 PM IST
அதிக வருமானத்துடன் வரி சேமிப்பு பலன்களும் கிடைக்க... சில சிறந்த முதலீட்டு திட்டங்கள்..! title=

மத்திய அரசின் மூலம் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்கள் லாபத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல் நடுத்தர வர்க்கத்தினருக்கு வரி சேமிப்பு பலன்களையும் வழங்குகிறது. நீங்கள் வரி செலுத்துபவராக இருந்து, வருமானத்துடன் வரியைச் சேமிக்க விரும்பினால், இங்கே குறிப்பிட்டுள்ள திட்டங்கள் உங்களுக்கானவை. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வரியைச் சேமிக்கலாம்.

இன்று, நாம் சிறு சேமிப்பு திட்டங்களைப் பற்றி பேசுகிறோம். அதை நீங்கள் தபால் அலுவலகம் மூலம் திறக்கலாம். சிறு சேமிப்புத் திட்டங்களின் கீழ், குறுகிய காலத்திலிருந்து நீண்ட கால வரையிலான முதலீடுகள் உள்ளன. பொது வருங்கால வைப்பு நிதி (PPF), கால வைப்பு, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மற்றும் சுகன்யா சம்ரித்தி (SSY) போன்ற பல திட்டங்கள் சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. வரிச் சேமிப்பிற்காக EPF போன்ற திட்டமும் உள்ளது.

PPF முதலீட்டில் கிடைக்கும் வரி சேமிப்பு பலன்கள்

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது சிறு சேமிப்புத் திட்டத்தின் கீழ் உள்ள திட்டமாகும். இதில் வருமான வரியின் 80C பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் சேமிக்க முடியும். இதில் அதிகபட்ச முதலீடு ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் ஆகும். இதன் காரணமாக இந்த திட்டத்திற்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. PPF என்பது ஒரு நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். இதில் குறைந்தது 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் கீழ் வட்டி 7.1 சதவீதம். இதில் குறைந்தபட்சம் ரூ.500 முதலீடு செய்யலாம்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு அடிச்சது ஜாக்பாட்.... வட்டியை அள்ளித் தரும் ‘சில’ வங்கிகள்!

சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY)

மத்திய அரசின் 'பேட்டி பச்சாவ், பேட்டி பதாவ்' திட்டத்தின் கீழ் சுகன்யா சம்ரித்தி திட்டம் என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டது. பெண் குழந்தைகள் பெயரில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கினால், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான ரூபாய் வரியைச் சேமிக்கலாம். இத்திட்டத்தின் கீழ், மகளுக்கு 18 வயதாகும் போது முதலீடு செய்த தொகையில் பாதியையும், 21 வயதாகும் போது முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் வட்டி 8 சதவீதம் ஆகும்.

EPF திட்டத்தின் கீழ் வரி விலக்கு

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அல்லது பிஎஃப் கணக்கின் கீழ், ஒரு ஊழியர் ஒவ்வொரு மாதமும் தனது சம்பளத்தில் 12 சதவீதத்தை பங்களிக்க வேண்டும். அதே நேரத்தில், உங்கள் PF கணக்கில் உங்களை பணியமர்த்தியுள்ள நிறுவனம் அல்லது அமைப்பு அதே அளவில் கணக்கில் பங்களிப்பு செய்யும். இந்தத் திட்டமும் வரிச் சேமிப்பின் கீழ் வருகிறது, இதில் வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு 8.1 சதவீத வட்டியை அரசு வழங்குகிறது. இந்தத் திட்டம் குறிப்பாக ஓய்வூதியத்திற்கான நிதியை சேமிக்கவும், எதிர்கால நிதி தேவைகளை பூர்த்டி செய்யவும் உதவுகிறது. ஆனால் தேவைப்பட்டால், நீங்கள் பணத்தை அவசர நிதியாக எடுக்கலாம்.

மேலும் படிக்க | இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு... ஆதார் அட்டை அப்டேட் பண்ணலைன்னா சிக்கல் தான்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News