இந்தியாவில் கார் ஆலையை துவங்க... $2 பில்லியன் முதலீடு செய்ய தயாராகும் டெஸ்லா..!

அமெரிக்க மின்சார வாகன உற்பத்தியாளரான டெஸ்லா, இந்தியாவில் உள்ளூர் தொழிற்சாலையை அமைக்க $2 பில்லியன் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 25, 2023, 04:17 PM IST
  • டெஸ்லா இந்தியாவில் $2 பில்லியன் முதலீடு செய்யலாம்.
  • டெஸ்லா நிர்வாகிகளுடன் பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் சமீபத்தில் நடந்தன.
  • 2023 நிதியாண்டில், சுமார் 50,000 மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன.
இந்தியாவில் கார் ஆலையை துவங்க... $2 பில்லியன் முதலீடு செய்ய தயாராகும் டெஸ்லா..! title=

அமெரிக்க மின்சார வாகன உற்பத்தியாளரான டெஸ்லா, இந்தியாவில் உள்ளூர் தொழிற்சாலையை அமைக்க $2 பில்லியன் முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்தியாவில்,  முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு 15 சதவீத சலுகை வரியை அரசாங்கம் வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. குறைந்த வரியில் இறக்குமதி செய்யக்கூடிய கார்களின் எண்ணிக்கையை பொருத்து, முதலீடு செய்ய இருப்பதாக கூறும் டெஸ்லா நிறுவனம், விரிவான திட்டத்துடன் அரசாங்கத்தை அணுகியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் 12,000 வாகனங்களை குறைவான் வரியில் இறக்குதி செய்ய குறைந்த  அரசாங்கம் ஒப்புக் கொண்டால்,  500 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்யத் தயாராக இருப்பதாகவும்,  30,000 வாகனங்களுக்கு இந்த சலுகை நீட்டிக்கப்பட்டால், முதலீட்டின் அளவை 2 பில்லியன் டாலராக அதிகரிக்கக்கூடும் என்றும்,  வாகனத் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா தெரிவித்துள்ளது.

டெஸ்லாவின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான சாத்தியகூறுகள் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், சலுகைக் வரிக் கட்டணத்தில் இறக்குமதி செய்யக்கூடிய வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் விற்கப்படும் (10,000 யூனிட்கள்) மொத்த EVகளில் 10 சதவீத வாகனங்களுக்கு சலுகை கட்டணங்கள் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட வேண்டுமா என்பதை அரசாங்கம் மதிப்பீடு செய்து வருகிறது. மேலும்  இரண்டாம் வருடம் இந்த அளவு 20 சதவீதம் அதிகரிக்கப்படலாம்.

இந்தியாவில், 2023 நிதியாண்டில், சுமார் 50,000 மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் இந்த எண்ணிக்கை 2024 நிதியாண்டில் 100,000 ஆக இரட்டிப்பாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

2 ஆண்டுகளில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கார்களின் எண்ணிக்கையில் 20 சதவீதத்தை உள்ளூரில் தயாரிக்க டெஸ்லா உறுதியளிக்கும். மேலும் 4 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கையை 40 சதவீதமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

டெஸ்லாவின் கோரிக்கையின் மதிப்பீடு என்பது தொழில் மற்றும் உள் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை (DPIIT), கனரக தொழில்கள் அமைச்சகம் (MHI), சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு நடவடிக்கையாகும். இந்த செயல்முறை பிரதமர் அலுவலகத்தின் (PMO) மேற்பார்வையின் கீழ் நடத்தப்படுகிறது.

மேலும் படிக்க | NPS Withdrawal Rules: பணத்தை எடுக்க புதிய விதிகள் என்ன? இதற்கு வரம்பு உள்ளதா?

இந்தியா 40,000 டாலருக்கும் அதிகமான விலை, காப்பீடு மற்றும் சரக்கு மதிப்பு கொண்ட வாகனங்களுக்கு 100 சதவீத இறக்குமதி வரி விதிக்கிறது. அதே நேரத்தில் இதை விட குறைவான விலையுள்ள கார்களுக்கு 70 சதவீத வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க கார் உற்பத்தியாளர் உறுதியளித்தபடி நிதியை ஒதுக்கத் தவறினால், இறக்குமதி வரி காரணமாக ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, மூலதன உறுதிப்பாட்டுடன் பிணைக்கப்பட்ட வங்கி உத்தரவாதத்தை அரசாங்கம் கோரலாம். எனினும், டெக்சாஸின் ஆஸ்டினில் உள்ள நிறுவனம், வங்கி உத்தரவாதத்தின் தேவையை கைவிடுமாறு அரசாங்கத்திடம் முறையிடுகிறது.

டெஸ்லாவின், மாடல் 3, மாடல் Y மற்றும் புதிய ஹேட்ச்பேக் ஆகிய மூன்று மாடல்களுடன் இந்தியாவில் அதன் உற்பத்தியை தொடங்க டெஸ்லா திட்டமிட்டுள்ளது. இந்த வாகனங்களுக்கான அமெரிக்க விலைகள் $39,000 (ரூ. 32.37 லட்சம்), $44,000 (ரூ. 36.52 லட்சம்), மற்றும் $25,000 (ரூ. 20.75 லட்சம்) ஆகும். சலுகை இறக்குமதி வரி அங்கீகரிக்கப்பட்டால், மாடல் 3 மற்றும் மாடல் Y இந்தியாவில் முறையே ரூ.38 லட்சம் மற்றும் ரூ.43 லட்சம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளூம்பெர்க் நவம்பர் 21 அன்று டெஸ்லா இந்தியாவில் $2 பில்லியன் முதலீடு செய்யலாம் என்று அறிவித்த நிலையில், முன்னதாக, டெஸ்லா நிர்வாகிகளுடன் பூர்வாங்க பேச்சுவார்த்தைகள் சமீபத்தில் நடந்தன என அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். 

அமெரிக்காவில் உள்ள டெஸ்லா தொழிற்சாலைக்கு சமீபத்தில் சென்ற போது, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு 1.7 முதல் 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான வாகன உதிரிபாகங்களை வாங்க டெஸ்லா திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இது 2023 நிதியாண்டில் பெறப்பட்ட $1 பில்லியன் மதிப்புள்ள உதிரிபாகங்கள் என்ற அளவை விட குறிப்பிடத்தக்க வகையில் அதிக அளவாகும்.

ஒரு தனி அறிக்கையில், மின்சார வாகனங்களின் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க வழங்கப்படும் எந்தவொரு சலுகையும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு சமமாக கிடைக்கும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்க கார் தயாரிப்பாளருக்கான சாத்தியமான இறக்குமதி வரி சலுகைகள் குறித்து இந்திய வாகன உற்பத்தியாளர்கள் வெளிப்படுத்திய கவலைகளுக்கு இது பதிலளிக்கும் வகையில் வருகிறது.

எந்தவொரு நிறுவனத்திற்கும் குறிப்பிட்ட அளவிற்கு விலக்கு அளிப்பது குறித்தும் புது டெல்லி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. "அரசாங்கத்தின் அணுகுமுறை ஒட்டுமொத்த தொழில்துறைக்கானது மற்றும் எந்தவொரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கும் அல்ல, ஏனெனில் இந்தத் துறையில் எங்களிடம் மிகவும் வலுவான உள்நாட்டு நிறுவனங்கள் உள்ளன," என்று ஒரு அதிகாரி கூறினார். வழங்கப்படும் எந்த சலுகைகளும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சமமாக இருக்கும் என்று அரசு அதிகாரி  ஒருவர் தெளிவுபடுத்தினார்.

மேலும் படிக்க | அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 இல்லை, இனி 62 வயதில் பணிஓய்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News