Jackpot! இந்த ₹1 நாணயம் உங்க கிட்டே இருக்கா... 10 கோடி ரூபாயை அள்ளலாம்!

பணம் சம்பாதிப்பது மிகவும் கடினமானது தான் என்றாலும், சிலரிடம் புதையல் போல மதிப்பான பொருட்கள் இருப்பதே தெரியாமல், கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல்  பணத்தை தேடி ஓடிக் கொண்டிருப்பார்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 5, 2022, 06:15 PM IST
  • பழைய பொருட்களை வாங்க பல லட்சம் ரூபாய் செலவழிக்கிறார்கள்.
  • பழங்கால பொருட்களை சேகரிப்பதில் பலருக்கு விருப்பம் இருக்கும்.
  • இந்த அரிய 1 ரூபாய் நாணயம் மூலம் கோடி கணக்கில் சம்பாதிக்கலாம்.
Jackpot! இந்த ₹1 நாணயம் உங்க கிட்டே இருக்கா... 10 கோடி ரூபாயை அள்ளலாம்! title=

பணம் சம்பாதிப்பது மிகவும் கடினமானது தான் என்றாலும், சிலரிடம் புதையல் போல மதிப்பான பொருட்கள் இருப்பதே தெரியாமல், கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல்  பணத்தை தேடி ஓடிக் கொண்டிருப்பார்கள். பழங்கால பொருட்களை, பழைய ரூபாய் நோட்டுகள் காசுகள்  சேகரிப்பதில் சிலருக்கு ஆர்வம் இருக்கும். பழைய ரூபாய் நோட்டு, காசுகளுக்கு ஈடாக பல லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பது போன்ற செய்திகளை நீங்கள் அடிக்கடி படித்திருப்பீர்கள்.  உங்களிடமும் பழைய நாணயங்கள் இருந்தால், அதற்கு ஈடாக லட்சக்கணக்கான ரூபாயையும் பெறலாம். அந்த வகையில் உங்களிடம் இந்த அரிய ஒரு ரூபாய்  நாணயம் இருந்தால் நீங்கள் நாணயமான வழியில் பத்து கோடி ரூபாய் சம்பாதித்து கோடீஸ்வரர் ஆகலாம்.

அரிய ஒரு ரூபாய் நோட்டு இருந்தால் வீட்டில் அமர்ந்து கொண்டே கோடீஸ்வரன் ஆகலாம். இந்த நேரத்தில் கூடுதல் பணம் சம்பாதிக்க உங்களுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. இதற்காக நீங்கள் பெரிதாக எந்த வேலையும் செய்ய வேண்டியதில்லை. உங்கள் நாணயத்தின் புகைப்படத்தை பதிவேற்றினால் போதும். உங்கள் உண்டியலில் அல்லது பணப்பையில் தூசி படிந்து இருக்கும் பழைய 1 ரூபாய் நாணயம், உங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதிக்கும் வழிக்கான கதவைத் திறக்கும்.

மேற்கூறிய நாணயம்  குறிப்பிட்ட சில தேவைகளையும் நிபந்தனைகளையும் பூர்த்திசெய்கிறதா என்பதை மட்டும் உறுதி செய்ய வேண்டும். இது வெறும் நாணயம் அல்ல. மேலே பட்டியலிடப்பட்டுள்ள பழைய 1 ரூபாய் நாணயம் ஏலத்தில் 10 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது 1885 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆங்கிலேயர் காலத்து நாணயம். எனவே, உங்களிடம் இதே போன்ற நாணயம் இருந்தால், ஆன்லைனில் ஏலத்தில் பட்டியலிடுவதன் மூலம் அதை விற்று ரூ. 10 கோடி சம்பாதிக்க உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்யலாம். 

மேலும் படிக்க | ஜில்லென்று ஒரு பிஸினஸ்... முதலீடோ ₹10,000... வருமானமோ லட்சங்களில்!

பழைய ரூபாய் அல்லது நாணயங்களை ஏலத்தில் விற்பதற்கான வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது: 

1. முதலில் இந்தியா மார்ட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.indiamart.com இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும்.

2. நீங்கள் விற்க விரும்பும் நோட்டின் தெளிவான படத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

3. அதனை இணையதளத்தில் பதிவேற்றவும்.

4. நிறுவனம் உங்கள் நாணயத்தை விற்பதற்கான விளம்பரத்தை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்கும்.

5. விளம்பரத்தை பார்க்கும் ஆர்வமுள்ளவர்கள் விளம்பரம் வெளியானதும் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.

6.  நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தி விற்பனைக்காக ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம்.

பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைனில் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எச்சரிக்கை விடுத்தது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிலர் இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர்/லோகோவை மோசடியாகப் பயன்படுத்துகின்றன. மேலும் பல்வேறு ஆன்லைன் மற்றும் பிற நிறுவனங்கள் மூலம் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குதல் மற்றும் விற்பது தொடர்பான பரிவர்த்தனைகளில் பொதுமக்களிடம் கட்டணம்/கமிஷன்/வரி கோருகின்றன" என குறிப்பிட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி மேலும்  கூறுகையில், விற்பனை தொடர்பாக, ரிசர்வ் வங்கி ஒருபோதும் கட்டணம் அல்லது கமிஷன்களை கோருவதில்லை என்றும், இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவதில்லை என்றும் கூறியுள்ளது. அத்தகைய பரிவர்த்தனைகளில் அதன் சார்பாக கட்டணம் அல்லது கமிஷன்களை சேகரிக்க எந்தவொரு அமைப்பு, வணிகம், தனிநபர் போன்றவற்றுக்கு ரிசர்வ் வங்கி அங்கீகாரம் அளிக்கவில்லை என்றும் தெளிபடுத்தியுள்ளது.

மேலும் படிக்க | குறைந்த சம்பளத்திலும் பணத்தை திட்டமிட்டு சேமிப்பது எப்படி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News