2024-இல் புதிய விதிகள் மற்றும் காலக்கெடுக்கள்: ஜனவரி 1 முதல் முக்கிய மாற்றங்கள்.. அலர்ட் மக்களே

New Rules and Deadlines in 2024: 2024 ஆம் ஆண்டில் நம் வாழ்வின் பல்வேறு அம்சங்களைக் கணிசமான அளவில் பாதிக்கும் வகையில், பல்வேறு விதிகள் மற்றும் காலக்கெடுக்களில் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி அறிந்து வைத்திருப்பது மிக முக்கியம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 30, 2023, 10:33 AM IST
  • மியூச்சுவல் ஃபண்டுகள், டீமேட் கணக்குகளுக்கான காலக்கெடு.
  • மார்ச் 14 -க்குள் ஆதார் இலவச அப்டேட்.
  • 2023-24 நிதியாண்டுக்கான ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு.
2024-இல் புதிய விதிகள் மற்றும் காலக்கெடுக்கள்: ஜனவரி 1 முதல் முக்கிய மாற்றங்கள்.. அலர்ட் மக்களே title=

New Rules and Deadlines in 2024: இன்னும் இரண்டு நாட்களில் 2024 புத்தாண்டு தொடங்கவுள்ளது. இந்த ஆண்டில் நம் வாழ்வின் பல்வேறு அம்சங்களைக் கணிசமான அளவில் பாதிக்கும் வகையில், பல்வேறு விதிகள் மற்றும் காலக்கெடுக்களில் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி அறிந்து வைத்திருப்பது மிக முக்கியம். இவற்றை பற்றிய சரியான புரிதல் சரியான நேரத்தில் தேவையான செயல்முறைகளை செய்து முடிக்க உதவியாக இருக்கும். 

2024 -க்கான முக்கியமான மாற்றங்கள் மற்றும் காலக்கெடுவைப் பற்றி இங்கே காணலாம்:

மியூச்சுவல் ஃபண்டுகள், டீமேட் கணக்குகளுக்கான காலக்கெடு

நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் (Mutual Funds) தொடர்ந்து முதலீடு செய்து, டிமேட் கணக்கு (Demat Account) வைத்திருக்கும் முதலீட்டாளராக இருந்தால், நாமினேஷனுக்கான காலக்கெடுவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். SEBI விதிகளின்படி, ஜூன் 30, 2024 -க்குள் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஒரு நாமினியை பரிந்துரைக்க வேண்டும் அல்லது நாமினேஷன் செயல்முறையிலிருந்து விலக வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அந்த நபரின் கணக்கு முடக்கப்படலாம். மேலும், மியூசுவல் ஃபண்டுகளிலிருந்து பணத்தை எடுகக் முடியாமலோ அல்லது பங்குச்சந்தை வர்த்தகத்திற்காக டீமேட் கணக்கைப் பயன்படுத்த முடியாமலோ போகக்கூடும். 

மார்ச் 14 -க்குள் ஆதார் இலவச அப்டேட்

ஆதார் உச்ச அமைப்பான, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை (Aadhaar Card) வைத்திருப்பவர்களுக்கு அவர்களின் பெயர், முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்கள் அல்லது வேறு புதுப்பிப்புகளை எந்தச் செலவும் இல்லாமல் மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ வசதியை வழங்குகிறது. இந்த சேவை myAadhaar போர்ட்டலில் மட்டுமே கிடைக்கும். ஆதார் வைத்திருப்பவர்கள் மார்ச் 14, 2024 வரை இந்த வசதியைப் பெறலாம்.

2023-24 நிதியாண்டுக்கான ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு

2023-24 நிதியாண்டு (Fiscal Year 2023-24), அதாவது மதிப்பீட்டு ஆண்டு 2024-25 -க்கான (Assessment Year 2024-25) வருமான வரி தாக்கல் ஜூலை 31, 2024 வரை இருக்கும். ஐடிஆர்தாக்கல் (ITR Filing) என்பது ஒரு நிதியாண்டிற்கான வரி செலுத்துபவரின் வருமானம், முதலீடு மற்றும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளைக் கணக்கிடும் வருடாந்திரச் செயலாகும். வரி செலுத்துவோர் (Taxpayers) வரியாக செலுத்த வேண்டிய தொகைக்கும் செலுத்திய தொகைக்கும் வித்தியாசம் இருந்தால் பணத்தைத் திரும்பப் பெறலாம்.

அட்வான்ஸ் டேக்ஸ் கட்டணத்தின் கடைசி தவணை

வருமானம் ஈட்டப்படும் அதே நிதியாண்டில் வரிப் பொறுப்பு முடிவடையும் போது அது முன்கூட்டிய வரி செலுத்துதல் (Advance tax payments) எனப்படும். இதை பல தவணைகளில் செலுத்தலாம், உதாரணமாக நான்கு தவணைகள்.

- வருமான வரிச் சட்டத்தின்படி, மொத்த வரிப் பொறுப்பில் 15% ஜூன் 15க்குள் செலுத்தப்பட வேண்டும்.

- செப்டம்பர் 14க்குள் மொத்த வரிப் பொறுப்பில் 45% செலுத்த வேண்டும்.

- டிசம்பர் 14க்குள் மொத்த வரிப் பொறுப்பில் 75% செலுத்த வேண்டும்.

- வரி செலுத்துவோர் மார்ச் 15 ஆம் தேதிக்குள் 100% வரிப் பொறுப்பை முடிக்க வேண்டும்.

மேலும் படிக்க | இனி வங்கிகள் கண்டபடி அபராத கட்டணம் விதிக்க முடியாது... RBI-யின் புதிய விதிகள்!

புதிய சிம் கார்டு விற்பனை விதிகள் (New SIM card sale rules) 

சிம் கார்டுகளின் தவறான பயன்பாடு, மோசடிகள் மற்றும் ஆன்லைன் மோசடிகளைத் தடுக்கும் வகையில், ஜனவரி 1, 2024 முதல் புதிய சிம் கார்டு விற்பனை விதிகளை அமல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. இந்த விதிகள் மொத்த சிம் கார்டுகளை விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்தும் மற்றும் e-kYC ஐ கட்டாயமாக்கும்.

வங்கி லாக்கர் ஒப்பந்தம் (Bank Locker Agreement)

வங்கிகளில் லாக்கர்களை வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31, 2023க்குள் திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். வாடிக்கையாளர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அவர்களது லாக்கர்கள் முடக்கப்படும்.

ஆன்லைன் மோசடிகளில் இருந்து பயனர்களை காப்பாற்ற புதிய விதி

இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளன. இந்தப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் தீர்க்கமான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது.

மேலும் படிக்க | Budget 2024: தேர்தலுக்கு முன் இவர்களுக்கு குட் நியூஸ் கொடுக்க தயாராகிறதா அரசு? பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News