சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம்? வரம்பை மீறினால் வருமான வரி நோட்டீஸ்

Savings Account Deposit Limit: கறுப்புப் பணத்தைத் தடுக்க, வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தபால் நிலையங்கள் மற்றும் NBFCகள், சேமிப்புக் கணக்கில் பணப் பரிவர்த்தனைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால், நிதி அறிக்கையை (SFT) சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 6, 2023, 02:58 PM IST
  • ஒரு நிதியாண்டில் வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் பணம் டெபாசிட் செய்யப்பட்டால் அல்லது எடுக்கப்பட்டால், அது பற்றி வரி அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும்.
  • எனவே இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் கவனமாக இருப்பது நல்லது.
  • நடப்புக் கணக்கில் இந்த வரம்பு ரூ.50 லட்சம் மற்றும் அதற்கு மேலாகும்.
சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம்? வரம்பை மீறினால் வருமான வரி நோட்டீஸ் title=

தங்கள் வங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஊதியம் பெறுபவர்கள் உட்பட அனைத்துத் துறைகளிலும் பணிபுரிபவர்கள் குறைந்தபட்சம் ஒரு சேமிப்புக் கணக்கையாவது வைத்திருக்க வேண்டும். இருப்பினும் பலர் பல்வேறு காரணங்களுக்காக ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை வைத்திருக்கிறார்கள். நிலையான வருமானம் உள்ள அனைவரும் பொதுவாக சேமிப்பு வங்கிக் கணக்கைத் திறப்பதுண்டு. ஏனெனில் இங்கு அவர்களுக்கு இருப்புத் தொகைக்கு வட்டியும் கிடைக்கும். சேமிப்புக் கணக்கில் (Savings Account) டெபாசிட் செய்யக்கூடிய பணத்தின் அளவுக்கு பொதுவாக வரம்பு இல்லை என்றாலும், ஒரு நிதியாண்டில் நீங்கள் எவ்வளவு பணம் போடலாம் அல்லது சேமிப்புக் கணக்கில் இருந்து எடுக்கலாம் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்த தொகையின் காரணமாக வரி வலையின் கீழ் வரக்கூடிய சூழல் ஏற்படுமா? 

கறுப்புப் பணத்தைத் தடுக்க, வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், தபால் நிலையங்கள் மற்றும் NBFCகள், சேமிப்புக் கணக்கில் பணப் பரிவர்த்தனைகள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால், நிதி அறிக்கையை (SFT) சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது என்று வரி நிபுணர்கள் கூறுகின்றனர். பணத்தை டெபாசிட் செய்தல் அல்லது திரும்பப் பெறுதல், பங்குகளில் முதலீடு செய்தல், மியூசுவல் ஃபண்டுகள், கிரெடிட் கார்டு செலவுகள், வெளிநாட்டு கரன்சி வாங்குதல், ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் போன்றவை இதில் அடங்கும்.

இந்த கணக்குகள் மீது கவனம் செலுத்தப்படும்

வரிச் சட்டங்களின்படி, வங்கி நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் ஒரு வருடத்தில் பத்து லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்யப்பட்ட அல்லது திரும்பப் பெறப்பட்ட கணக்குகள் குறித்த தகவல்களை வரித் துறைக்கு வழங்க வேண்டும். வரி செலுத்துபவரின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளில் (நடப்புக் கணக்குகள் மற்றும் நேர வைப்புகளைத் தவிர) ஒரு நிதியாண்டில் ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட ரொக்க டெபாசிட்களுக்கு இந்த வரம்பு கணக்கிடப்படுகிறது. நிதி ஆதாரங்கள், ரசீதுகளின் தன்மை மற்றும் வரி செலுத்துவோர் முறையான வரிகளை செலுத்தியிருக்கிறார்களா இல்லையா என்பதைக் கண்டறிய இது வரி அதிகாரிக்கு உதவுகிறது.

வருமான வரி விதி 114E பற்றி அறிந்திருக்க வேண்டும்

எனவே, ஒரு நிதியாண்டில் வங்கிக் கணக்கில் (Bank Account) ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் பணம் டெபாசிட் செய்யப்பட்டால் அல்லது எடுக்கப்பட்டால், அது பற்றி வரி அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். எனவே இதுபோன்ற சூழ்நிலையில், நீங்கள் கவனமாக இருப்பது நல்லது. நடப்புக் கணக்கில் இந்த வரம்பு ரூ.50 லட்சம் மற்றும் அதற்கு மேலாகும். இருப்பினும், பரிவர்த்தனையைத் தவிர, நீங்கள் அறிந்திருக்க வேண்டிய வேறு சில பரிவர்த்தனைகளும் உள்ளன. வருமான வரி விதி 114இ கணக்குகளில் இருந்து செய்யப்படும் வருமானம் மற்றும் செலவுகள் குறித்து ஒருவர் அறிந்திருக்க வேண்டும். இதன் மூலம் வருமான வரி ரேடாரின் கீழ் வராத நிலையில் அவர் ஒரு நிதியாண்டில் தனது சேமிப்புக் கணக்கிலிருந்து குறிப்பிட்ட அளவு பணத்தை எடுக்கவோ அல்லது டெபாசிட் செய்யவோ முடியும். ஏனெனில், அதற்கும் அதிகமான பரிவர்த்தனைகள் வருமான வரிப் பிரிவு 1962 இன் விதி 114E இன் கீழ் வருமான வரித் துறையின் (Income Tax Notice)  கவனத்தின் கீழ் வருகிறது. 

வங்கிக் கணக்கு வசதியை வழங்கும் ஒவ்வொரு வங்கி நிறுவனத்திற்கும் அல்லது கூட்டுறவு வங்கிக்கும் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949 பொருந்தும். வங்கிக் கணக்குகள் தொடர்பான பின்வரும் பரிவர்த்தனைகளை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்:

- ஒரு நிதியாண்டில் ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகை டெபாசிட் செய்யப்பட்ட ஒன்று அல்லது இரண்டு கணக்குகள் (நடப்பு மற்றும் நேர வைப்புத்தொகை) தவிர்த்து.

- பணம் செலுத்துதல் மற்றும் செட்டில்மென்ட் சிஸ்டம்ஸ் சட்டம் 2007 இன் பிரிவு 18ன் கீழ் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட வங்கி வரைவுகள், பே ஆர்டர்கள், வங்கியாளர்கள் காசோலைகள், ப்ரீபெய்ட் கருவிகள் வாங்குவதற்காக ஒரு நிதியாண்டில் பத்து லட்சம் அல்லது அதற்கு மேல் செலுத்தப்பட்ட ரொக்கம்.

மேலும் படிக்க | TNEB: மழை வெள்ள பாதிப்பினால் மின் கட்டணம் செலுத்தும் காலக்கெடு நீட்டிக்கப்படுமா?

கிரெடிட் கார்டு வழங்கும் வங்கி நிறுவனம் அல்லது வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 பொருந்தும் கூட்டுறவு வங்கி அல்லது வேறு ஏதேனும் நிறுவனம் பின்வரும் பரிவர்த்தனைகளைப் பற்றி தெரிவிக்க வேண்டும்:

- வழங்கப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளின் பில்லுக்கு ஒரு நிதியாண்டில் ஒரு லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ரொக்கமாக செலுத்துதல்

- வழங்கப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளின் பில்லுக்கு பத்து லட்சம் அல்லது அதற்கு மேல் பணம் செலுத்துதல்.

பத்திரங்கள் அல்லது கடனீட்டுப் பத்திரங்களை வழங்கும் ஒரு நிறுவனம், எந்தவொரு நிதியாண்டிலும் நிறுவனம் அல்லது நிறுவனத்தால் வழங்கப்பட்ட பத்திரங்கள் அல்லது கடனீட்டுப் பத்திரங்களைப் பெறுவதற்கு, பத்து இலட்சம் ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான தொகையை  கொடுத்தவர்கள் பற்றிய தகவலை அளிக்க வேண்டும். 

நிறுவனம் பங்குகளை வெளியிடுவதாக இருந்தால், நிறுவனம் வழங்கிய பங்குகளைப் பெறுவதற்கு எந்த ஒரு நிதியாண்டிலும் பத்து லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை அளித்தவர் பற்றி தெரிவிக்க வேண்டும்.

நிறுவனங்கள் சட்டம் 2013 இன் பிரிவு 68ன் கீழ், அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனம், ஒரு நிதியாண்டில் யாரேனும் ஒருவரிடமிருந்து ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பங்குகளை வாங்குவது குறித்துத் தெரிவிக்க வேண்டியது கட்டாயமாகும்.

மியூச்சுவல் ஃபண்டின் அறங்காவலர் அல்லது மியூச்சுவல் ஃபண்டின் விவகாரங்களை நிர்வகிக்கும் பிற நபர்கள், மியூச்சுவல் ஃபண்டின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களின் யூனிட்களைப் பெறுவதற்கு நிதியாண்டில் பத்து லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கான பரிவர்த்தனை செய்த நபர் பற்றி தெரிவிக்க வேண்டும். 

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999 இன் பிரிவு 2 இன் பிரிவு (c) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு அங்கீகரிக்கப்பட்ட நபர், ஒரு நிதியாண்டில், வெளிநாட்டு நாணயத்தை விற்பதற்காக எந்தவொரு நபரிடமிருந்தும் பத்து லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேலான தொகையை பெற்றால் அது குறித்து தெரிவிக்க வேண்டும். 

ஆகையால், வங்கிக் கணக்கில் எந்தத் தொகையையும் டெபாசிட் செய்தாலும், அல்லது கணக்கிலிருந்து பணத்தை எடுத்தாலும், பொருந்தக்கூடிய விதிகளுக்கு இணங்கும்போது, விதி 114E இன் கீழ் நாம் வரி செலுத்த வேண்டியதில்லை என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | வாட்ஸ் அப் குழுவில் தொடங்கிய Dunzo ஆன்லைன் டெலிவரி சேவையின் வெற்றிப் பயணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News