சிவலிங்கத்தை தினமும் பூஜை செய்வதற்கான காரணம் தெரியுமா?

சிவலிங்கத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், பாபங்கள் நாசமாகும். சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், நைவேத்தியம், வேள்விகள் செய்தும் சிவனை பூஜிக்கலாம். ஒன்றுமே இல்லாவிட்டால், வில்வ இலை கொண்டு அர்ச்சித்தாலே, ஆசீர்வாதங்களை அள்ளித் தருவார் எம்பெருமான் சிவன். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 2, 2021, 05:57 AM IST
  • சிவலிங்கத்தை தினமும் பூஜை செய்வதற்கான காரணம் சூட்சமமானது
  • சிவ பூஜை சர்வ பாப நிவாரணம்
  • வெறும் வில்வ இலை கொண்டு பூஜித்தாலே அளப்பரிய ஆசிர்வாதம் நிச்சயம்
சிவலிங்கத்தை தினமும் பூஜை செய்வதற்கான காரணம் தெரியுமா? title=

சிவலிங்கத்தை நினைத்தாலும், தரிசித்தாலும், பூஜை செய்தாலும், பாபங்கள் நாசமாகும். சந்தனம், புஷ்பம், தீபம், தூபம், நைவேத்தியம், வேள்விகள் செய்தும் சிவனை பூஜிக்கலாம். ஒன்றுமே இல்லாவிட்டால், வில்வ இலை கொண்டு அர்ச்சித்தாலே, ஆசீர்வாதங்களை அள்ளித் தருவார் எம்பெருமான் சிவன். 

சிவலிங்கத்தை பூஜை செய்தால் அக்னிஹோத்தரமும் கோதானமும் செய்த பலன். அஸ்வமேத யாகம் ஆயிரம் செய்தாலும், ஒரு நாள் சிவலிங்கத்தை பூஜை செய்த பலனுக்கு ஈடாகுமா?

சிவராத்திரி வேளையில் லிங்கோற்பவ காலத்தில் சிவலிங்கத்தை பூஜை செய்தால் பன்னிரெண்டு கோடி சிவலிங்கங்களை பன்னிரெண்டு பூஜை செய்தபலன் ஒரே நாளில் கிடைக்கும்.

Also Read | இன்றைய பஞ்சாங்கம்: 2021 மார்ச் 02ஆம் நாள், மாசி 18, செவ்வாய்க்கிழமை

தீர்த்த யாத்திரையோ, யாகமோ செய்யாமல் இருந்தாலும் சரி,  சிவலிங்க  பூஜை மட்டும் செய்தால் போதும், முக்தியடையலாம்.   சிவலிங்கத்தைஅபிஷேகம் செய்த தீர்த்தத்தாலே சர்வ புண்ய தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த பலனும், சர்வ யக்ஞம் செய்த பலனும் கிடைத்துவிடும்.

பல புண்ணிய தீர்த்த தேவதைகள் சிவலிங்கத்திற்குள் சூட்சுமாக இருந்து அருள்பாலிக்கின்றனர். ருத்ர பாராயணம் செய்துகொண்டே சிவலிங்க பூஜை செய்பவர்களுக்கு சிவகதி  கிடைக்கும்.

சிவலிங்கம் இருக்குமிடத்தில் சமஸ்த லோகங்களும், சமஸ்த தேவதைகளும் இருப்பதாக நம்பிக்கை. சிவபெருமான் அபிஷேகப் பிரியர். பல ஆலயக் கருவறைகளில் சிவலிங்கத்தின் மீது எப்போதும் ஜலதாரை பொழிந்துக் கொண்டிருக்கும். தீப்பிழம்பான சர்வேஸ்வரனை குளிர்விப்பதற்காக கங்கையையே தலையில் வைத்திருப்பவர் எம்பெருமான் சிவன். சிவனுக்கு அபிஷேகம் செய்து வாழ்வை வசந்தமாக்கிக் கொள்ளுங்கள்.

Also Read | அபிஷேகத்திற்கும், மகா அபிஷேகத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன? 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News