2021ஆம் ஆண்டு CBSE பொது தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுமா... தேதிகளின் அறிவிப்பு விரைவில்..!!!

சிபிஎஸ்இ செயலர் அனுராக் திரிபாதி 2021ஆம் ஆண்டின் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புக்கான பொது தேர்வுகள் அட்டவணை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 22, 2020, 11:08 AM IST
  • சிபிஎஸ்இ செயலர் அனுராக் திரிபாதி 2021ஆம் ஆண்டின் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புக்கான பொது தேர்வுகள் அட்டவணை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
  • தேர்வுகள் எந்த வடிவத்தில், எந்த முறையில் நடத்தப்படும் என்பது குறித்த விவரங்களை திரிபாதி எதுவும் வில்லை.
  • வழக்கமாக, பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
2021ஆம் ஆண்டு CBSE பொது தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுமா... தேதிகளின் அறிவிப்பு விரைவில்..!!! title=

சிபிஎஸ்இ செயலர் அனுராக் திரிபாதி 2021ஆம் ஆண்டின் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்புக்கான பொது தேர்வுகள் அட்டவணை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் (Corona Virus)  தொற்று காரணமாக 2021 ஆம் ஆண்டிற்கான CBSE 10, 12ம் வகுப்பு பொது தேர்தல் ஒத்திவைக்கக்கூடும் என்ற ஊகங்களுக்கு மத்தியில், சிபிஎஸ்இ (Central Board of Secondary Education - CBSE) செயலர் அனுராக் திரிபாதி 2021 ஆம் ஆண்டின் சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பிற்கான, தேர்வு தேதிகள் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். தேர்வு அட்டவணை சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ தளத்தில் cbse.nic.in இல் கிடைக்கும் 

"பொது தேர்வுகள் நிச்சயம் நடக்கும், விரைவில் அதற்கான தேர்வு அட்டவணை அறிவிக்கப்படும். சிபிஎஸ்இ (CBSE)  இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மார்ச்-ஏப்ரல் மாதங்களில், நிலைமை மிக மோசமகா இருந்த நேரத்தில், ஒன்றும் கணிக்க முடியாமல் இருந்தது. ஆனால் நமது பள்ளிகளும் ஆசிரியர்களும் இந்த சந்தர்ப்பத்தில் மிகுந்த அளவில் ஆதரவளித்து, அரும் பங்காற்றியுள்ளனர். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க, புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிறப்பாக பணியாற்றியுள்ளனர். சில மாதங்களுக்குள் வெவ்வேறு செயலிகளைபயன்படுத்தி ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது இயல்பான விஷயமாக ஆனது, ” என அசோசம் (ASSOCHAM) ஏற்பாடு செய்த "புதிய கல்வி கொள்கை (NEP): பள்ளி கல்வியின் பிரகாசமான எதிர்காலம்" குறித்த ஒரு வெபினாரின் போது திரிபாதி கூறினார்.

இருப்பினும், தேர்வுகள் எந்த வடிவத்தில், எந்த முறையில் நடத்தப்படும் என்பது குறித்த விவரங்களை திரிபாதி எதுவும் வில்லை. வழக்கமாக, பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பொது தேர்வுகளை 2021 ஐ மே வரை ஒத்திவைக்க மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலம் முடிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | OLA இந்தியாவுக்காக கொண்டு வருகிறது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஜனவரி 2021-ல் அறிமுகமா..!!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News