கொரோனா எதிரொலி: 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு...

கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12-ஆம் வகுப்பிற்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது!

Last Updated : Mar 19, 2020, 07:53 AM IST
கொரோனா எதிரொலி: 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு... title=

கொரோனா வைரஸ் பரவியதை அடுத்து, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12-ஆம் வகுப்பிற்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது!

புதன்கிழமை வெளியான அறிவிப்பின் படி மார்ச் 19 முதல் மார்ச் 31 வரை திட்டமிடப்பட்ட 12-ஆம் வகுப்புக்கான அனைத்து வாரியத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகிறது. இந்த முடிவு CBSE துறையின் செயலாளரிடமிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தலுக்கு இணங்க வெளியாகியுள்ளது.

முன்னதாக., கொரோனா வைரஸ் வெடிப்பை கருத்தில் கொண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மற்றும் நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களையும் கல்வி அமைச்சகம் புதன்கிழமை கேட்டுக் கொண்டது.

"கல்வி நாட்காட்டி மற்றும் தேர்வு அட்டவணையை பராமரிப்பது முக்கியமானது என்றாலும், பல்வேறு தேர்வுகளில் தோன்றும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பும் அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஆரோகியமும் முக்கியம்" என்று மனிதவள மேம்பாட்டு செயலாளர் அமித் கரே அதிகாரப்பூர்வ தகவல்தொடர்பு ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது CBSE தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து CBSE தெரிவிக்கையில்., "இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள தேர்வு மையங்களில் 19.03.2020 முதல் 31.03.2020 வரை திட்டமிடப்பட்ட (இரண்டு தேதிகளும் உள்ளடக்கியது) நடத்தப்பட்டு வரும் 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான வாரியத்தின் அனைத்து தேர்வுகளும் 2020 மார்ச் 31-க்குப் பிறகு மாற்றியமைக்கப்படும்,"  என்று CBSE தெரிவித்துள்ளது.

மேற்கூறிய காலகட்டத்தில், முன்னர் வடகிழக்கு டெல்லி தேர்வாளர்களுக்கு நடத்த திட்டமிடப்பட்ட மறு தேர்வுகளும் பின்னர் ஒரு தேதிக்கு மீண்டும் திட்டமிடப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிராந்தியத்தில் வன்முறை காரணமாக பரீட்சைகளில் கலந்து கொள்ள முடியாத வடகிழக்கு டெல்லியில் உள்ள வேட்பாளர்களுக்கான தேர்வு அட்டவணையையும் இந்த முடிவு பாதிக்கும் என தெரிகிறது. இந்த காலகட்டத்தில், மதிப்பீட்டு செயல்முறையும் இடைநிறுத்தப்படும் என்று வாரியம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

"நிலைமையை மறு மதிப்பீடு செய்த பின்னர் மார்ச் 31-க்குள் வாரியம் அதன் அனைத்து பங்குதாரர்களுக்கும் மறு திட்டமிடப்பட்ட தேதிகள் தெரிவிக்கும்" என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

Trending News