நீட் தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட்தேர்வு எழுதும் நேரத்தை அதிகரிக்கப்பட்டிருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 7, 2022, 08:36 AM IST
  • நீட் தேர்வு எழுதுவதற்கான நேரம் அதிகரிப்பு
  • 3 மணி நேரம் 20 நிமிடங்கள் தேர்வு எழுதலாம்
  • ஜேஇஇ தேர்வுகளுக்கு புதிய அட்டவணை வெளியீடு
நீட் தேர்வு எழுதும் நேரம் அதிகரிப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு  title=

நீட் தேர்வு எழுதும் நேரம் இதுவரை 3 மணி நேரங்கள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 20 நிமிடங்களை அதிகரிக்கப்பட்டுள்ளது. இளநிலை மருத்துவபடிப்பிற்கான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு இளநிலை மருத்துவ படிப்பிற்கான எழுத்து தேர்வு வரும் ஜூலை மாதம் 17 ம் தேதி நடைபெற உள்ளது. 

மேலும் படிக்க | ஆளுநர் VS தமிழக அரசு: நீட் விவகாரத்தில் நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம்..!

கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் நீட் தேர்வு எழுத 3 மணி நேரம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், ஒரு கேள்விக்கு ஒரு நிமிடம் என்ற வகையில் 200 கேள்விகளுக்கு 200 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இந்த தேர்வு நேரம் அதிகரிப்பு நடைமுறைக்கு வர உள்ளது. 

மேலும் படிக்க | NEET: நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் தமிழக ஆளுநர்

இதேபோல் என்ஜினியரிங் ஜேஇஇ தேர்வுகளின் அட்டவணையையும் மாற்றப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, முதற்கட்ட JEE Main தேர்வு ஜூன் 20 முதல் 29 வரை நடைபெறும். 2-ம் கட்ட JEE Main தேர்வு ஜூலை 21 முதல் 30 வரை நடைபெறும். இந்த தேர்வுகள் ஏப்ரல் இறுதி மற்றும் மே முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், புதிய அட்டவணைனை தேசிய தேர்வு முகமை  வெளியிட்டுள்ளது.  

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News