TNEA: பொறியியல் படிப்பு வேண்டாம் என முடிவெடுத்து பின்வாங்கினர் 45,000-கும் மேற்பட்ட மாணவர்கள்

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பித்திருந்த சுமார் 45,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கௌன்சிலிங் தொடங்கும் முன்னரே இதிலிருந்து விலகியுள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 26, 2020, 12:59 PM IST
  • இரண்டாவது ஆண்டாக, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையை, DoTE நடத்தி வருகிறது.
  • பதிவு செய்தவர்களில் 1,31,436 மாணவர்கள் மட்டுமே பதிவுக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
  • தரவரிசை பட்டியல் செப்டம்பர் 7 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
TNEA: பொறியியல் படிப்பு வேண்டாம் என முடிவெடுத்து பின்வாங்கினர் 45,000-கும் மேற்பட்ட மாணவர்கள்  title=

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பித்திருந்த சுமார் 45,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கௌன்சிலிங் தொடங்கும் முன்னரே இதிலிருந்து விலகியுள்ளனர்.

TNEA கமிட்டியை மீண்டும் மாற்றுவது தொடர்பாக உயர்கல்வித் துறையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அண்ணா பல்கலைக்கழகம் கௌன்சிலிங்கை நடத்த மறுத்ததால், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையை (TNEA) தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் (DoTE) நடத்தி வருகிறது.

மொத்தம் 1,60,834 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக DoTE-ன் ஒரு மூத்த அதிகாரி தெரிவித்தார். ஆன்லைன் விண்ணப்பங்களை (Online Applications) பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 16 ஆக இருந்தது.

"பதிவு செய்தவர்களில் 1,31,436 மாணவர்கள் மட்டுமே பதிவுக் கட்டணம் செலுத்தியுள்ளனர்," என்று அவர் கூறினார். "பதிவு கட்டணத்தை செலுத்திய மொத்த மாணவர்களில், 1,14,206 பேர் தங்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றியுள்ளனர்."

அவரைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டின் 1.33 லட்சம் ஆன்லைன் விண்ணப்பங்களில், 90 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் கௌன்சிலிங் செயல்முறை தொடங்கும் வரை காத்திருந்தனர்.

ALSO READ: TNEA: சான்றிதழ்களை பதிவேற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு!!

எனினும், இந்த ஆண்டு 45,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கை முறையிலிருந்து விலகியுள்ள நிலையில், தற்போதைய விண்ணப்பங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும் என்றார் அவர். தரவரிசை பட்டியல் செப்டம்பர் 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும், பொது கௌன்சிலிங் செப்டம்பர் 17 முதல் தொடங்கி அக்டோபர் 15 ஆம் தேதி முடிவடையும் என்றும் அந்த அதிகாரி கூறினார், “தரவரிசை பட்டியலில் இருந்து குறைந்தபட்சம் ஒரு லட்சம் மாணவர்களுக்கு பல சுற்று கௌன்சிலிங்கிற்கு அழைப்பு விடுக்கப்படும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

சான்றிதழ் சரிபார்ப்பு, மாணவர்களின் வசதி மையங்களில் (Facilitation Centres) செய்யப்படலாம் என்று கூறிய அதிகாரி, அத்தகைய 50 க்கும் மேற்பட்ட மையங்களை அமைக்க DoTE திட்டமிட்டுள்ளது, இது பொறியியல் சேர்க்கை தொடர்பாக மாணவரின் சந்தேகங்களை தீர்க்க வழிகாட்டும் என்றார்.

மாநிலத்தில் 500 க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு மொத்தம் சுமார் 1.50 லட்சம் பொறியியல் இடங்கள் உள்ளன என்று DoTE அதிகாரி கூறினார்.

ALSO READ: NEET 2020: அட்மிட் கார்டுகள் இன்று வழங்கப்படலாம்: ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

Trending News