எவ்வாறு வாக்குகள் எண்ணப்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளுவோம்!!

மக்களை செலுத்திய வாக்குகள் எவ்வாறு எண்ணப்படுகிறது என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளுவோம்!!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 23, 2019, 07:23 AM IST
எவ்வாறு வாக்குகள் எண்ணப்படுகிறது என்பதை தெரிந்துக்கொள்ளுவோம்!! title=

டெல்லி: நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தலும், தமிழகம், புதுச்சேரி உட்பட சில மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 23) எண்ணப்பட்ட உள்ளது. 

தமிழகத்தை பொருத்த வரை வேலூர் தொகுயை தவிர மற்ற 38 மக்களவை தொகுதிக்கும், 22 சட்டசபை தொகுதிக்கும் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ளது. 

இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால், மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார்? மீண்டும் மோடி பிரதமராக பதவி ஏற்ப்பாரா? இல்லை காங்கிரஸ் தலைமையிலனா ஆட்சி அமைந்து ராகுல் காந்தி பிரதமராக பதவி ஏற்ப்பாரா? என்பது தெரிந்துவிடும். இதேபோல் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதும் தெரிந்துவிடும்.

நாடே அடுத்த பிரதமர் யார் என்று எதிர்நோக்கி உள்ளனர். ஆனால் வாக்கு எண்ணப்பட்டு பிறகு தான் தெரியவரும் அடுத்த பிரதமர் யார் என்று? ஆனால் அதற்கு முன்பு மக்களை செலுத்திய வாக்குகள் எவ்வாறு எண்ணப்படுகிறது என்பதை முதலில் தெரிந்துக்கொள்ளுவோம்!!

> காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஆனால் அதற்கு முன்னரே வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள், முகவர்கள் உள்ளே சென்று விடுவார்கள். ஆனால் இவர்கள் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை வெளிய வர முடியாது.

>  வாக்கு எண்ணப்படும் ஒவ்வொரு மையத்திலும் கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், வாக்கு எண்ணும் அலுவலர்கள் இருப்பார்கள்.

> ஒவ்வொரு சுற்றாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும். சுற்று முடிந்ததும் அதற்கான அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும்.

> வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை சரிபார்ப்பதற்காக ஒப்புகைச் சீட்டுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். அதாவது விவிபாட் இயந்திரங்களில் உள்ள சீட்டுகளும் எண்ண வேண்டும்.

> தமிழகத்தை பொருத்த வரை 11,659 ஊழியர்கள் 4,245 நுண்பார்வையாளர்கள் என மொத்தம் 15,904 பேர் மின்னணு வாக்குகளை எண்ண உள்ளனர்.

> இவை அனைத்தும் காணொளியாக பதிவு செய்யப்படும்.

Trending News