‘அவர்களால் தாஜ்மஹால் கூட விற்க முடியும்’: BJP-யை தாக்கும் ராகுல்..

BJP, AAP இருவருமே சமூகத்தில் வெறுப்பை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர் என டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி தாக்கு!!

Last Updated : Feb 4, 2020, 06:43 PM IST
‘அவர்களால் தாஜ்மஹால் கூட விற்க முடியும்’: BJP-யை தாக்கும் ராகுல்.. title=

BJP, AAP இருவருமே சமூகத்தில் வெறுப்பை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர் என டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி தாக்கு!!

டெல்லி: 70 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு வரும் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், களத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின்  தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மியின் சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க-ன் வேட்பாளராக இளைஞர் அணி தலைவர் சுனில் யாதவ், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாணவர் அமைப்பின் டெல்லி தலைவரான ரொமேஷ் சபர்வால் ஆகியோர் போட்டியிடுவதால், அங்கு தலைவர்களின் பிரச்சாரம் களைகட்டி வரும் நிலையில், அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியீட்டு வருகிறது. 

இந்நிலையில், BJP, AAP இருவருமே சமூகத்தில் வெறுப்பை பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர் என டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கடுமையாக தாக்கியுள்ளார். தெற்கு டெல்லியில் ஜங்புராவில் நடந்த பேரணியில் உரையாற்றிய ராகுல் காந்தி...  பிரதமரும் டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இருவரும் இந்தியாவில் முதலீடு செய்யத் தயாராக இருந்தாலும் நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையை தீர்க்க முடியாது. வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்களை நிதியமைச்சரிடம் கேட்டால், அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். நான் புள்ளி விவரங்களை தெரிவித்தால், ராகுல் கேள்வி கேட்பார். இதற்கு, எத்தனை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறித்து பதிலளிக்க நிதி அமைச்சர் மறுத்துவிட்டார் என்பதே அர்த்தம்.

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் 3 மணி நேரம் வாசித்தார். ஆனால், வேலைவாய்ப்பின்மையை சரி செய்ய எந்த தீர்வையும் அவர் சொல்லவில்லை. விவசாயிகளுக்கு எந்த திட்டமும் இல்லை. வெற்று அறிக்கையாக மட்டுமே இருந்தது. மேக் இன் இந்தியா என பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், ஒரு தொழிற்சாலை கூட அமைக்கப்படவில்லை. இந்தியன் ஆயில், ஏர் இந்தியா, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், ரயில்வேயும் விற்கின்றனர். செங்கோட்டையையும் ஏன் தாஜ்மஹாலையும் கூட அவர்கள் விற்பார்கள்" என அவர் கடுமையாக தாக்கியுள்ளார். 

 

Trending News