மோடி அலை சுனாமியாக மாறிவிட்டது - தேவேந்திர பட்னாவீஸ்...

2014-ஆம் ஆண்டில் இருந்த மோடி அலை தற்போதைய தேர்தலில் மோடி சுனாமியாக மாறியுள்ளது என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்துள்ளார்!

Last Updated : May 23, 2019, 08:05 PM IST
மோடி அலை சுனாமியாக மாறிவிட்டது - தேவேந்திர பட்னாவீஸ்... title=

2014-ஆம் ஆண்டில் இருந்த மோடி அலை தற்போதைய தேர்தலில் மோடி சுனாமியாக மாறியுள்ளது என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் தெரிவித்துள்ளார்!

17-வது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி மே 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவானது நடைபெற்றது.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டசபை தேர்தலும் நடைப்பெற்றுள்ளது.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. வாக்கு எண்ணிக்கை துவங்கப்பட்டது முதலே பாஜக-வின் கை ஓங்கி இருந்தது எனலாம். 300 தொகுதிகள் வரை வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றது.

இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவிக்கையில்.,  “முந்தைய தேர்தலில் மோடி அலை வீசியது. அது தற்போது சுனாமியாக மாறியுள்ளது. தற்போது நிலவரங்களை பார்க்கும் போது மகாராஷ்டிராவில் எங்களுடைய எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நினைக்கிறேன். எங்களின் பொறுப்பினை அதிகரித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் செயல்பாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது என தெரிவித்த அவர், பாஜக மற்றும் சிவ சேனா இரண்டு கட்சியும் தேர்தல் பணியினை சிறப்பாக செய்துள்ளன. அதனால்தான் அதிக இடங்களில் வெற்றி பெற முடிந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

Trending News