மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பாக மக்களவையில் அமளி...

மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் மக்களவையில் அமளியில் ஈடுப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Written by - Mukesh M | Last Updated : Nov 25, 2019, 12:39 PM IST
மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பாக மக்களவையில் அமளி... title=

காராஷ்டிரா விவகாரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் மக்களவையில் அமளியில் ஈடுப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பாஜக-அஜித் பவார் கூட்டணியில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ், சிவசேன மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கின் விசாரணைகளை முடித்துள்ள உச்சநீதிமன்றம் நாளை இந்த வழக்கு தொடர்பான தனது உத்தரவினை பிறப்பிக்கவுள்ளது.

இதனிடையே, மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க தங்களுக்கே பெரும்பான்மை உள்ளது என சிவசேனா கட்சியினர் ஆளுநர் மாளிகையில் கடிதம் அளித்துள்ளனர்.

-------------------------------------

சிவசேனா கடிதத்தின் படி., அவர்கள் ஆதரவு 162 MLA-க்களின் வலிமை வாரியாக விநியோகம்...

சிவசேனா: 56
காங்கிரஸ்: 44
NCP: 51 (NCP 54 MLA-க்களில் 51-ஐ கொண்டுள்ளது)
மற்றவை (சிறிய கட்சிகள் + சுயேட்சை): 11

-------------------------------------

இந்நிலையில் மகாராஷ்டிராவில் நடக்கும் சர்ச்சைகள் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டன. மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் நடந்திருப்பது ஜனநாயகப் படுகொலை எனவும், ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் முழக்கமிட்டனர். தொடர்ந்து மக்களவையினை அடுத்து மாநிலங்களவையிலும் மகாராஷ்டிரா விவகாரம் எதிரொலிக்க, நாடாளுமன்ற இரு அவைகளு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, இதனிடையே மகாராஷ்டிராவின் அவசர பிரச்சினை குறித்து விவாதிக்க சபையின் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) தலைவர் பினாய் விஸ்வம் விதி 267-ன் கீழ், சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மகாராஷ்டிராவின் முன்னேற்றங்கள் நாட்டின் ஜனநாயக முறைக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும், மூத்த இடதுசாரி தலைவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

---மகாராஷ்டிரா குழப்பம்---

சனிக்கிழமை(23.11.2019) அதிகாலை ஏற்பட்ட திடீர் வளர்ச்சியில், தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா முதல்வராகவும், NCP தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். பாஜக-அஜித் பவார் கூட்டணியில் மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ், சிவசேன மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 

நீதிபதி NV ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. வழக்கின் விசாரணையின் போது 170 MLA-க்கள் பாஜக அரசுக்கு ஆதரவு அளித்திருப்பதாகவும், ஆவணங்கள் அடிப்படையிலேயே ஆளுநர் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தாகவும் ஆளுநர் தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிட்டார். இதனிடையே முதல்வர் தரப்பில் ஆதரவு கடிதங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு தொடர்பாக நாளை காலை உத்தரவு பிறப்பிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Trending News