நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது?

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு செப்டம்பர் மாதம் இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

Last Updated : Aug 4, 2019, 12:08 PM IST
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? title=

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு செப்டம்பர் மாதம் இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி, கன்னியாகுமரி மாவட்டம் நாங்குநேரி தொகுதி ஆகிய இரு சட்டசபை தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் நாளை (ஆகஸ்ட் 5) நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 9 ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் பின்னர், நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. முன்னதாக, விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ ராதாமணி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் காலமானார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்தகுமார் வெற்றி பெற்றதால், அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக இந்த இரு தொகுதிகளும் காலியாக உள்ளது. 

இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில்; இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி கூறுகையில், பாராளுமன்ற இடைத்தேர்தல் 9 ஆம் தேதியுடன் முடிந்துவிடுவதால் அதன் பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் காலியாக உள்ள சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். தமிழகத்தை பொறுத்த வரை மே, ஜூன் மாதத்திலேயே 2 தொகுதி காலியாகி விட்டது. நவம்பர் மாதத்திற்குள் இங்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கி பருவ மழை காலம் என்பதால் அதற்கு முன்கூட்டியே இடைத்தேர்தலை நடத்தி முடிக்க (செப்டம்பர்) திட்டமிட்டுள்ளோம்.இது குறித்து மாநில அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

 

Trending News