TN Election 2021: காஞ்சீபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசனின் கார் மீது தாக்குதல்

காஞ்சீபுரத்தில் பிரசாரம் செய்துக் கொண்டிருந்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் கமலஹாசனுக்கு காயம் ஏற்படவில்லை. கார் சிறிது சேதமடைந்தது. தாக்குதலை அடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள், தாக்குதல் நடத்தியவரை ரத்தம் வருமளவு அடித்தனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 15, 2021, 09:05 AM IST
  • காஞ்சீபுரத்தில் கமலஹாசன் மீது தாக்குதல்
  • தமிழக தேர்தலில் பரபரப்பு
  • எதைக் கண்டும் அஞ்சமாட்டோம் என மக்கள் நீதி மய்யம் உறுதி
TN Election 2021: காஞ்சீபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசனின் கார் மீது தாக்குதல் title=

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்றுக் கொண்டிருந்த கார் மீது ஞாயிற்றுக்கிழமையன்று தாக்குதல் நடத்தப்பட்டது. நடிகராக மாறிய அரசியல்வாதி காஞ்சீபுரத்தில் பிரச்சாரம் செய்த பிறகு ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. 

குடிபோதையில் இருந்த ஒரு நபர், நடிகர் கமலஹாசனை சந்திக்க விரும்பி, அதற்காக, அவரது காரின் ஜன்னல் கண்ணாடியை தாக்கியுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால், நடிகருடன் உரையாடுவதற்காக அந்த நபர் காரை நிறுத்த முயன்றார் என்ற கூற்றுக்களை காவல்துறையினர் மறுத்தனர்.

Also Read | தபால் வாக்கு அளிப்பது எப்படி? தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம் 

இந்த சம்பவத்தில் கமலஹாசனுக்கு காயம் ஏற்படவில்லை என்றாலும், அவரது காரின் விண்ட்ஸ்கிரீன் சேதமடைந்தது. இதையடுத்து, மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள், தாக்குதல் நடத்தியவரை ரத்தம் வருமளவு அடித்தனர். பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.  

இது தொடர்பாக டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார் எம்.என்.எம் கட்சியின் தலைவரும் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியுமான ஏ.ஜி.மெளரியா.

கமலஹாசனின் விண்ட்ஸ்கிரீன் சேதமடைந்துள்ளதாகவும், தமிழ் நடிகரை ‘தாக்க முயன்ற’ நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறினார். மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலும் மெளரியாவின் டிவிட்டர் செய்தி ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்களால் கட்சி பயப்படாது என்று அந்த டிவிட்டர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரல் 6 ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 2 ம் தேதியும் நடைபெறும்.

Also Read | Honey-Trap: பாகிஸ்தானுக்கு ரகசிய தகவலை கசியவிட்ட ஜவான் கைது 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News