தவளை தன் வாயால் கெடும் என்பது போல மாட்டிக்கொண்டார் சித்து!

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோற்றால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று பஞ்சாப் காங்கிரஸ் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து சவால் விட்டிருந்தார்.

Last Updated : May 23, 2019, 10:22 PM IST
தவளை தன் வாயால் கெடும் என்பது போல மாட்டிக்கொண்டார் சித்து! title=

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோற்றால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று பஞ்சாப் காங்கிரஸ் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து சவால் விட்டிருந்தார்.

தற்போது அமேதியில் ராகுல் காந்தி தோல்வி அடைவது உறுதி ஆகிவிட்டது. தனது தோல்வியை ஒப்புக்கொண்டு தன்னை எதிர்த்து பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றிமுகத்தில் இருக்கும் ஸ்மிருதி இரானிக்கு வாழ்த்தையும் ஏற்கனவே ராகுல் கூறி விட்டார்.

எனவே, அமேதியில் ராகுல் தோல்வி அடைந்ததால், விடுத்த சவாலை பின்பற்றி சித்து அரசியலைவிட்டு விலகுவாரா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அந்த வகையில் நாடு முழுவதும் ஏராளமானோர், எப்போது அரசியலைவிட்டு விலகுகிறீர்கள் என சித்துவை டுவிட்டரில் கேட்ட வண்ணம் இருக்கின்றனர்.

முன்னதாக பஞ்சாப் முதல்வர் அமரேந்திர சிங்கிற்கு எதிராக செயல்பட்டு வருவதாக சித்து மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தேர்தல் முடிவுக்கு பின்னர் சித்துவின் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கைகள் எடுக்கலாம் என செய்திகள் வெளியானது. மேலும் தனது மனைவிக்கு காங்கிரஸ் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததற்கு பஞ்சாப் முதல்வர் தான் காரணம் எனவும் சித்து குற்றம்சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து காங்கிரஸ் கட்சிக்குள் சித்துவின் மீதான எதிர்ப்பு வளர்ந்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் தற்போது சித்துவின் இந்து சவாலை பயன்படுத்தியே பிரச்சனைகளை வெளிக்காட்டாமல் சித்துவை கட்சியில் இருந்து வெளியேற்ற காங்கிரஸார் முடிவு எடுத்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News