ATM- களின் பணத்தட்டுப்பாடு விரைவில் சரி செய்யப்படும்: அருண் ஜெட்லி!

வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாடு தற்காலிகமானது எனவும், இந்த பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.  

Last Updated : Apr 17, 2018, 02:06 PM IST
ATM- களின் பணத்தட்டுப்பாடு விரைவில் சரி செய்யப்படும்: அருண் ஜெட்லி! title=

வட மாநிலங்களான கர்நாடகா, மஹாராஷ்டிரா, ஆந்திரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் டில்லி உள்ளிட்ட இடங்களில்பணத்தட்டுப்பாடு காரணமாக மக்கள் அவமதிப்பட்டு வருகின்றனர். 

பெரும்பாலான ஏடிஎம்கள் பணம் இல்லாமல் மூடப்பட்டு உள்ளன. இதனால், தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஏராளமான மக்கள், சமூக வலைதளங்களில் புகார் கூறி வருகின்றனர்

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தற்போது ட்வீட்டில் கூறியதாவது.....!

பணத்தட்டுப்பாடு தொடர்பாக தற்போதைய சூழ்நிலை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. போதிய அளவில் பணம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. 

திடீரென மற்றும் வழக்கத்திற்கு மாறான பணதேவை காரணமாக தற்காலிகமான பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

வங்கிகளிடம் கையிருப்பில் உள்ளது. இது விரைவில் சரி செய்யப்படும் என்றார்.

Trending News