Omicron: பெங்களூரு வந்த 2 தென்னாபிரிக்க பயணிகளுக்கு கொரோனா! அது ஒமிக்ரானா?

ஒமிக்ரான் கொரோனா பிறழ்வு தொடர்பாக சென்னை விமான நிலையமும் அலர்ட் செய்யப்பட்டுள்ளது; தமிழக சுகாதார அமைச்சர் நேரில் ஆய்வு  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 28, 2021, 02:28 PM IST
  • பெங்களூரு வந்த 2 தென்னாபிரிக்க பயணிகளுக்கு கொரோனா!
  • அது ஒமிக்ரானா? என்று ஆய்வு
  • சென்னை விமானநிலையமும் அலர்ட்
Omicron: பெங்களூரு வந்த 2 தென்னாபிரிக்க பயணிகளுக்கு கொரோனா! அது ஒமிக்ரானா?   title=

சென்னை: நவம்பர் 1 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூருக்கு 94 பேர் வருகை தந்துள்ளனர். அவர்களை பரிசோதனை செய்ததில் ஆப்பிரிக்காவை சேர்ந்த இரண்டு பேருக்கு கோரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தென்னாப்பிரிக்காவிலிருந்து பெங்களூர் வந்த 60 வயதுக்கு மேற்பட்ட தென்னாபிரிக்க நாட்டவர் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இருவரில் ஒருவர் நவம்பர் 9 ஆம் தேதியும் மற்றொருவர் நவம்பர் 20ஆம் தேதி பெங்களூருக்கு வந்திருக்கின்றனர் ஆனால் கொரோனாவின் புதிய வகை ஓமிக்ரான் (Omicron Varrient) வைரஸ் நவம்பர் 23 அன்றுதான் உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் தற்போது அவர்கள்  தங்கியிருக்கும் தனியார் ஹோட்டலில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 
இதனிடையே ஆப்பிரிக்காவில் இருந்து 94 பேர் வருகை தந்துள்ளன நிலையில் அவர்களை பரிசோதனை செய்ததில் இரண்டு பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என பெங்களூரு ஊரக துணை ஆணையர் தெரிவித்துள்ளார். 

கொரோனா
அவர்களது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பரிசோதனைகளின் முடிவிலேயே அது புதிய வகை கொரோனாவா இல்லையா என்பது தெரியவரும். இதனிடையே இன்று சென்னை விமான நிலையத்தில் தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் (Tamil Nadu Minister) ஆய்வு மேற்கொண்டார். 

அப்பொழுது அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், செங்கல்பட்டு கலெக்டர் திரு.ராகுல்நாத், பொது சுகாதார இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், விமான நிலைய இயக்குனர், டாக்டர் பரணி மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். 

பின்னர் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்தனர். அதன்பிறகு செய்தியாளர்களிடையே பேசிய அமைச்சர், சென்னை விமான நிலையத்தில் இதுவரை 55,090 பேருக்கு பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஆனால் அது எந்த வகை வைரஸ் என்பது ஆய்வுக்கு பிறகு தெரியும். இதுவரை அச்சம் இல்லை என்றாலும் தீவிர கண்காணிப்பு அவசியம் தேவைப்படுகிறது என்று தெரிவித்தார். 

தடுப்பூசி, முக கவசம் மட்டுமே 100 சதவீதம் கொரோனாவில் இருந்து நம்மை காக்கும் ஆயுதங்கள். தடுப்பூசி போட்டு கொண்டாலும் முக கவசம் அணிவதில் தயக்கம் காட்டக்கூடாது என அவர் தெரிவித்தார்.

ALSO READ | புதிய கோவிட் மாறுபாடு Omicron பரவுகிறது! பயணக் கட்டுப்பாடுகள் அமல்

தென்னாப்பிரிக்காவில் புதிய மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதற்கு ஓமிக்ரான் எனவும் பெயரிடப்பட்டுள்ளது. 

வேகமாக பரவும் தன்மை வாய்ந்த உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சா் ஜோ பாஹ்லா வியாழக்கிழமை தெரிவித்தாா். 

airport
முன்னதாக பி.1.1.529 என வகைப்படுத்தப்பட்ட புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டதாக தென்னாபிரிக்கா தேசிய தொற்றுநோய் நிறுவனம் உறுதிப்படுத்தியிருந்தது.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவலால் சா்வதேச நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகள் பயணத் தடையினை அறிவித்துள்ளன. தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் 5 அண்டை நாடுகளிருந்து வரும் விமானங்களுக்கு பிரிட்டன் வெள்ளிக்கிழமை மதியமே தடை விதித்தது. 

இதனை தொடர்ந்து அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் பயணத் தடையினை அறிவித்துள்ளன. இந்திய அரசும் விழிப்புடன் இருக்குமாறு மாநிலங்களை எச்சரித்துள்ள நிலையில், 'ஆபத்தில் உள்ள' நாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா வருபவர்களை விமான நிலையத்தில் கண்காணிப்பை கடுமையாக்குவது மட்டுமின்றி வருபவர்களுக்கான நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

READ ALSO | Sputnik light கோவிட் தடுப்பூசி டிசம்பரில் இந்தியாவில் அறிமுகம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News