உடல் எடையை குறைக்க நீங்கள் குடிக்கும் வெந்நீரில் இத்தனை நன்மைகளா?

Benefits Of Drinking Hot Water: குடிநீர் நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. எனவே வெந்நீரின் நன்மைகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 9, 2022, 06:20 AM IST
  • வெந்நீர் குடிப்பதால் என்ன நன்மைகள்
  • வெந்நீரைக் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்
  • உடல் எடை இழப்புக்கு உதவும்
உடல் எடையை குறைக்க நீங்கள் குடிக்கும் வெந்நீரில் இத்தனை நன்மைகளா? title=

குடிநீர் நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமானது. தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் உடலுக்கு பல நன்மைகளை ஏற்படுத்தி தருகிறது. ஆனால் நாள் முழுவதும் வெந்நீரைக் குடிக்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், அது சில நன்மைகள் மற்றும் தீமைகளையும் ஏற்படுத்தி தரும். அதன்படி நாள் முழுவதும் வெந்நீர் குடிப்பதால் உங்கள் உடலில் ரத்த ஓட்டம் சீராகும். இது மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. அதே சமயம், வெந்நீர் குடிப்பது உங்கள் செரிமான அமைப்பையும் மேம்படுத்த உதவுகிறது. ஏனெனில் இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை போக்கவும் உதவுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், வெந்நீரின் நன்மைகள் என்ன என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம். மற்றும் அதன் தீமைகள் என்னவென்றும் தெரிந்து கொள்வோம்.

வெந்நீர் குடிப்பதால் என்ன நன்மைகள்-

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம்- நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரை குடிப்பது உங்கள் வயிற்றை சுத்தமாக வைத்திருக்கும். இதன் காரணமாக அஜீரணம், அசிடிட்டி பிரச்னைகளை ஏற்படுத்தாது. இதுமட்டுமின்றி வயிற்றுப் பிடிப்பு, வலி ​​போன்ற பிரச்னைகளையும் வெந்நீர் குடிப்பதால் நீக்கிவிடலாம்.

மேலும் படிக்க | Monkeypox: இவைதான் குரங்கு அம்மையின் முக்கிய அறிகுறிகள்

உடல் எடை இழப்புக்கு உதவும் - சூடான நீரை உட்கொள்வதன் மூலம் உணவை ஜீரணிக்கும் திறன் வளர்கிறது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், காலையிலும் மாலையிலும் சாப்பிட்ட பிறகு வெந்நீரை குடிக்க வேண்டும், இதனால் உங்கள் ஆரோக்கிய நன்மைகள் உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்கும் மற்றும் அதிக பசியை உணர வைக்காது.

சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்- உங்கள் சருமத்தின் பல பிரச்சனைகளை வெந்நீரை உட்கொள்வதன் மூலம் சமாளிக்கலாம். இதனால் வறண்ட சருமம் மற்றும் சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளை குறைக்கலாம். உண்மையில் சூடான நீர் உங்கள் சருமத்தின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். முகப்பருவை நீக்குவதற்கும் வெந்நீர் ஒரு முக்கிய பங்கு வகுக்கின்றது. 

வெந்நீரைக் குடிப்பதால் ஏற்படும் தீமைகள்-

சிறுநீரக கோளாறு- நாள் முழுவதும் அதிக அளவு வெந்நீரைக் குடிப்பது உங்கள் சிறுநீரகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும். உண்மையில், சிறுநீரகம் உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. எனவே அதிக சூடான நீரை குடிப்பதால் உங்கள் சிறுநீரகத்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் உங்களுக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News