'மக்களை மிரட்டும் மற்றொரு அபாயகரமான வைரஸ்' - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Virus பல்வேறு உருமாற்றங்களை எடுத்து உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், அடுத்ததாக மியு (MU) B.1.621 என்ற உருமாற்றம் அடைந்துள்ளதாகவும், தடுப்பூசிகளால் இதனை கட்டுப்படுத்த முடியாது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 3, 2021, 01:57 PM IST
'மக்களை மிரட்டும் மற்றொரு அபாயகரமான வைரஸ்' - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை! title=

Virus பல்வேறு உருமாற்றங்களை எடுத்து உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ், அடுத்ததாக மியு (MU) B.1.621 என்ற உருமாற்றம் அடைந்துள்ளதாகவும், தடுப்பூசிகளால் இதனை கட்டுப்படுத்த முடியாது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலகமே இன்னும் கொரோனாவில் பிடியிலிருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது. மேலும் கொரோனா தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசிகளைக் கண்டுபிடித்து மக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதும் கொரோனா தொற்று ஆல்ஃபா, டெல்டா என உருமாறிக் கொண்டே வருகிறது.

கடந்த மே மாதம் கூட தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய சி.1.2 வகை வைரஸ் அதிவேகமாகப் பரவ வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் தேசிய தொற்றுநோய் நிறுவனம் (என்ஐசிடி) மற்றும் குவாசூலு-நடால் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கூறினார். இத்தனைடையே கடந்த ஜனவரி மாதம் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் முதன்முதலாக உருமாறிய ஒரு வடிவம் பி.1.621 கண்டறியப்பட்டது. இது தற்போதும் ‘மு’ என அழைக்கப்படுகிறது. அதன்பின்னர் ஆங்காங்கே இந்த வைரஸ் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

கொலம்பியா மட்டுமல்லாது தென் அமெரிக்காவிலும், அமெரிக்கா, ஐரோப்பியாவிலும் குறிப்பாக இங்கிலாந்து,  சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கிலும் ‘மு’ வைரஸ், பாதித்துள்ளது.

Virus
அதேசமயம், இது உலகளாவிய பாதிப்பைக் கொண்டிருந்தாலும்கூட தற்போது இதன் பரவல் விகிதம் 0.1 சதவீதத்துக்கு குறைவாகவே இருப்பதாக தெரிய வந்துள்ளது. எனினும், கொலம்பியாவில் 39 சதவீதமும், ஈக்குவடாரில் 13 சதவீதமும் உள்ளது. தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது. இந்த வைரசை உன்னிப்பாக கவனித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது. இது உலக சுகாதார அமைப்பின் கண்காணிப்பு பட்டியலிலும்  ‘மு’ வைரஸ் இடம் பெற்றுள்ளது. தற்போது 39 நாடுகளில் காணப்படுகிறது. இது நோய் எதிர்ப்புக்கு தப்பிக்கும் சாத்தியமான பண்புகளைக் கொண்டிருப்பதை, தடுப்பூசிக்கு தப்பி விடும் அறிகுறிகளாக உலக சுகாதார அமைப்பு கண்டு எச்சரித்துள்ளது. இந்த வைரஸ், உலக சுகாதார அமைப்பினால் கண்காணிக்கப்படுகிற 5-வது உருமாறிய வைரஸ் ஆகும்.

இந்த புதிய உருமாறிய வைரஸானது, தடுப்பூசிக்கு தப்பிவிடும் அறிகுறிகளை கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறினாலும், இதை உறுதி செய்ய மேலும் ஆராய்ச்சிகள் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளது.  ஒருபுறம் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு, செலுத்தப்பட்டு வரும் வேலையில், புதிது புதிதாக கொரோனா உருமாற்றம் அடைவது மொத்த உலகையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News