நீங்கள் குடிக்கும் பால் தூயமானதா?- இதை படிங்க!!

நீங்கள் உபயோகம் படுத்தும் பாலினை தூய்மையானதா அல்லது கலப்படமானதா என்று சரிபார்க்க வேண்டும்.

Last Updated : Jan 27, 2018, 04:39 PM IST
நீங்கள் குடிக்கும் பால் தூயமானதா?- இதை படிங்க!!  title=

>பாலினை தாய்ப்பால், பசும்பால், எருமைப்பால், கொழுப்பு நீக்கிய ஸ்கிம்டு மில்க் என பாலை 4 வகைகளாகப் பிரிக்கலாம்.

>பாலில் கால்சியம் சத்து மற்றும் வைட்டமின் டி அதிகம் கிடைக்கும். இதனால், எலும்புகள், பற்கள் வலுவடையும். 67% கால்சியம், 35% மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், செலினீயம் போன்ற தாதுச்சத்துகள் நிறைந்தது பால்.

>‘கேசின்’எனப்படுகிற புரதச்சத்து பசும்பாலில் அதிகம். ஆனால் தாய்ப்பாலில் அது குறைவாகும். பாலிலுள்ள சத்துகள், இதயத்தின் செயல்பாடுகளைச் சீராக்கி, இதயத்தைப் பாதுகாக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

>பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளை தினமும் உட்கொண்டால், மூளையின் செயல்பாடு சுறுசுறுப்பாக இருக்கும்.

>ஆனால், கலப்பட்ட பால் தரத்தை குறைப்பது மட்டும் இல்லாமல் அது அபாயகரமானதாக இருக்கக்கூடும்.

>தண்ணீர் தவிர, ஸ்டார்ச், சோப்பு, யூரியா, செயற்கை பால், மற்றும் சோடியம் கார்பனேட், ஃபார்மால்டின் மற்றும் அம்மோனியம் சல்பேட் போன்ற ரசாயன வகைகள் பால் சேர்க்கப்படலாம்.

>பாலில் சேர்க்கப்படும் இரசாயனகள் நீண்டகால அபாயகரமான விளைவுகளைக் கொண்டிருக்கும்.

>இந்நிலையில், பால் மிகச்சிறந்த ஒரு சத்துணவுதான் ஆனால், நீங்கள் உபயோகம் படுத்தும் பால் தூய்மையானதா அல்லது கலப்படமானதா என்று சரிபார்ப்பது நல்லது. 

Trending News