உடற்பயிற்சி செய்யாமலே ஆரோக்கியமாக இருக்கவேண்டுமா?

தினமும் உடற்பயிற்சி செய்வது போரடிக்கிறதா? சோம்பேறித்தனமாக உணர்ந்தால், சில எளிய முறைகளை பின்பற்றி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 1, 2022, 11:05 AM IST
  • ஆரோக்கிய குறிப்புகள்
  • விறுவிறுப்பான நடைபயிற்சி
  • வீட்டை நீங்களே சுத்தம் செய்யுங்கள்
உடற்பயிற்சி செய்யாமலே ஆரோக்கியமாக இருக்கவேண்டுமா? title=

Health Tips: தினமும் உடற்பயிற்சி செய்வது போரடிக்கிறதா? சோம்பேறித்தனமாக உணர்ந்தால், சில எளிய முறைகளை பின்பற்றி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கலாம். 

பிஸியான வாழ்க்கை முறையால், உடற்பயிற்சி செய்ய முடியாத நிலை பெரும்பாலானவர்களுக்கு ஏற்படுகிறது. மறுபுறம், நாள் முழுவதும் அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்காது என்பது கவலையைத் தரும் விஷயம்.

அதுமட்டுமல்லாமல், நாற்காலியில் அமர்ந்தே வேலை செய்தும் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. பிஸியான வாழ்க்கை முறையால் உடற்பயிற்சி செய்ய முடியாமல் போனால் அல்லது உடற்பயிற்சி செய்ய சோம்பலாக இருந்தால், இந்த சுலபமான டிப்ஸ்களைப் (Health Tips) பின்பற்றி சுறுசுறுப்பாக இருக்கவும்.

நடை பயிற்சி
உடல் சுறுசுறுப்பாக இல்லாவிட்டால் பல வகையான நோய்கள் வந்துவிடும். தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் நேரம் கிடைக்கவில்லை என்றால், குறைந்தபட்சம் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். நடைபயிற்சி சிறந்த உடற்பயிற்சி ஆகும். ஒரு நாளைக்கு 5000-10000 எட்டுகளை எடுத்து வைத்தால் போதும். ஜாகிங் செய்ய முடியாவிட்டால், வேகமாக நடக்கவும். இதன் மூலம் 30 நிமிடங்களில் 200 கலோரிகள் வரை குறைக்கலாம்.

READ ALSO | புகை பிடிப்பவர்கள், மது அருந்துபவர்களுக்கு அருமருந்தாகும் பழம்!

ஒரே இடத்தில் இருக்க வேண்டாம்
உங்கள் வழக்கமான வேகத்தை விட சற்று வேகமாக நடக்கத் தொடங்குங்கள். நீங்கள் அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தால், தண்ணீர் பாட்டிலில் நிறைத்து வைத்துக்கொள்வதைவிட, அவ்வப்போது எழுந்து சென்று நீர் அருந்தி வரவும். இது கலோரிகளை எரிக்க உதவும். நாள் முழுவதும் நாற்காலியில் உட்கார வேண்டாம். அவ்வப்போது எழுந்து சிறிது நடக்கவும்.

கைகால்களை நீட்டவும் 
கைகளையும் கால்களையும் அவ்வப்போது நீட்டிக்கொண்டே இருங்கள். இது நரம்புகளின் இயக்கத்தை நீக்கவும். திறக்கிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உங்கள் இடத்தில் இருந்து எழுந்து, நீட்டவும், பிறகு வேலைக்குத் திரும்பவும்.

வீட்டை நீங்களே சுத்தம் செய்யுங்கள்
வீட்டு வேலைகளை நீங்களே செய்வது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். வீட்டை சுத்தம் செய்வது, பெருக்குக்வது, துடைப்பது, தூசு தட்டுவது என துப்புரவு வேலைகளை குனிந்து நிமிர்ந்து செய்வதால் வயிற்றுத் தசைகளுக்குப் பயிற்சி கிடைக்கும்.

விலங்குகளுடன் நேரத்தை செலவிடுங்கள்
உங்கள் வீட்டில் செல்லப்பிராணிகள் இருந்தால், அவர்களுடன் நேரத்தை செலவிடலாம். அவர்களை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லுங்கள் இது உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

(பொறுப்புத்துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது)

ALSO READ | வில்வப் பழத்தில் இத்தனை நன்மைகளா? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News