அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது உள்ளத் தூய்மையை குறிக்கும் முதுமொழி. எனவே, அகத்தை சுருக்காமல் வைத்தால் முக மற்றும் நெற்றி சுருக்கம் இல்லாமல் இருக்கும்.
ஆனால், அகத்தை பராமரிப்பது போலவே, முகத்தையும் கொஞ்சம் பராமரிப்பதும் அவசியம் தான். ஏனென்றால், வெளிப்புற சூழலில் இருந்து சருமத்திற்கு ஏற்படும் மாசுக்களை நீக்கினால் தானே, அகத்தில் அழகு முகத்தில் ஜொலிக்கும்? எனவே, முகக்கண்ணாடியை சுத்தம் செய்யவும். அது, மன அழகு, வெளியில் அப்படியே வெளிப்பட உதவும்.
உங்கள் மனம் போலவே முகமும் ஜொலிக்க சுலபமான இயற்கை மருத்துவ குறிப்புகள். முக சுருக்கம் ஏற்படாமல் தவிர்க்கவும், இருக்கும் சுருக்கங்களை நீக்கவும், பல வழிகள் உள்ளன. அவற்றில் சில உங்களுக்காக. எது உகந்ததாக தோன்றுகிறதோ அதை பின்பற்றலாம்.
Also Read | இளமையிலேயே பக்கவாதம் வரக் காரணம் இதுதான்!
இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ், ஒரு தேக்கரண்டி பாதாம் விழுது, ஒரு தேக்கரண்டி ஆரஞ்சு சாறு, அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொண்டு, நன்றாக கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் உலரவிட்ட பிறகு நீரில் கழுவிவிடவும்.
மற்றுமொரு முறையில், வாழைப் பழத்தை நன்றாக மசித்துக் கொண்டு, அதனுடன் ஒரு தேக்கரண்டி முல்தானி மிட்டி அல்லது கடலை மாவு சேர்க்கவும். இந்தக் கலவையுடன் இரண்டு தேக்கரண்டி பால், சில துளிகள் தேன் கலந்து, குழைத்து, அதனை நெற்றியில் தடவி கால் மணி நேரம் கழித்து கழுவிவிடலாம்.
நெற்றியில் உள்ள சுருக்கங்களை போக்க எண்ணெய் மசாஜ் நல்லது. ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெய், அரை தேக்கரண்டி விளக்கெண்ணெய், அரை தேக்கரண்டி தேங்காய் எண்ணெயைக் கலந்து, இதை முகத்தில் தடவி மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். எண்ணெய் நன்றாக உறிஞ்சப்படும் வரை மசாஜ் செய்யலாம்.
Also Read | நோய் எதிர்ப்பு சக்தியை தவிடு பொடியாக்கும் ஆபத்தான பழக்கங்கள்..
ஒரு தேக்கரண்டி முட்டை வெள்ளைக் கருவுடன் அரை தேக்கரண்டி தேங்கெண்ணெய் மற்றும் கால் தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலவையாக்கிக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் அரை மணி நேரம் போட்டு உலரவிடவும். பின்னர் முகத்தைக் கழுவவும். வாரம் ஒருமுறை இப்படிச் செய்துவந்தால், சருமச் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கும்.
தயிருடன் சிறிதளவு காபித்தூள் மற்றும் தேன் கலந்து, அதை முகத்தில் போட்டு சுமார் அரை மணி நேரம் உலரவிடவும். பிறகு, முகத்தை நன்கு கழுவிய பிறகு, ஒரு துணிஆல் பன்னீரால் முகத்தை துடைக்கவும். இதை வாரம் ஒரு முறை செய்வதால் முகம் பொலிவு பெறும்.
உடலில் நீர்ச்சத்தை தக்கவைப்பதும் சுருக்கத்தை தடுக்க உதவும். தினமும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். ஆரோக்கியமான உணவு பழக்கங்களையும் பின்பற்ற வேண்டும். பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உண்பது சருமப் பொலிவுக்கு நல்லது.
Also Read | மூங்கிலின் மருத்துவ பண்புகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR