Breakfast Health Tips: உடல் ஆரோக்கியத்திற்கு உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் எடுத்துக்கொள்வது அவசியமாகும். உணவில் நீங்கள் சமரசம் செய்தால், உடல்நலன் பாதிக்கப்படும் வாய்ப்பும் அதிகம். அப்படியிருக்க, ஆரோக்கியமான உடல்நலனுக்கு, ஊட்டச்சத்து நிறைந்த காலை உணவு இன்றியமையாதது எனலாம். காலையில் நீங்கள் முட்டையை உணவில் சேர்த்துக்கொள்வது பல வகைகளில் உங்களுக்கு நன்மையை உண்டாக்கும்.
முட்டை சார்ந்த காலை உணவுகளை நீங்கள் எளிமையாக சமைக்க முடியும். முட்டையில் குறைந்த கலோரிகள் உள்ளன. அதிக புரதம் கொண்டதாகும். மேலும், அத்தியாவசியமான வைட்டமிண்கள், கனிமங்கள் முட்டையில் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குவது தொடங்கி உங்களின் சரும ஆரோக்கியம் வரை ஒட்டுமொத்தமாக முட்டை உங்களின் உடல்நலனின் சிறப்பான பங்களிப்பை அளிக்கும்.
அந்த வகையில், காலை உணவில் முட்டையை அவித்து சாப்பிடலாமா அல்லது ஆம்லேட் (Omelette) போட்டு சாப்பிடலாமா, இரண்டில் எதில் அதிக நன்மைகள் இருக்கின்றன உள்ளிட்ட கேள்விகள் பலருக்கும் இருக்கின்றன. நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், வலுவாகவும் உணர காலை உணவு முக்கியமான ஒன்று என்பதால், அவித்த முட்டை அல்லது ஆம்லேட் ஆகியவற்றில் எதில் அதிக நன்மைகள் என்பதை இதில் காணலாம்.
மேலும் படிக்க | வைட்டமின் பி12 குறைபாட்டை போக்க உதவும் சைவ உணவுகள்: கண்டிப்பா சாப்பிடுங்க
காலை உணவில் ஆம்லேட்
ஆம்லேட் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாகும். வெங்காயம், உப்பு, மிளகு பொடி சேர்த்து நீங்கள் எளிமையாக ஆம்லேட்டை சமைத்து சாப்பிடலாம். வேண்டுமென்றால் கூடுதல் காய்கறிகள், சீஸ், வெண்னை போன்றவற்றை சேர்த்தும் சாப்பிடலாம். இவை அனைத்தும் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவை என்பதால் காலையில் ஆம்லேட் சாப்பிடுவது பலவகையில் நன்மையளிக்கும்.
வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும், செரிமானம் சீராக இருக்கும், தசைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதயத்திற்கும் நல்லது. ஆனால், நீங்கள் ஆம்லேட்டில் நிச்சயம் எண்ணெய் சேர்க்க வேண்டியதாக இருக்கும். அதில் கவனம் செலுத்தி குறைவான எண்ணெய்யை பயன்படுத்தி சமைத்தால் அதன் ஆரோக்கிய நன்மைகள் அதிகமாகும். எனவே ஆம்லேட்டில் அதிக எண்ணெய் சேர்க்க வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
காலையில் அவித்த முட்டை
அவித்த முட்டையை (Boiled Eggs) எடுத்துக்கொள்வதும் நல்லதுதான். ஏனென்றால் அதில் துளிக் கூட எண்ணெய் இருக்காது. அதன் வெள்ளைப் பகுதியில் புரதம் நிறைந்திருக்கும். நீங்கள் நிறைய முட்டைகளின் வெள்ளைப் பகுதியை மட்டும் கூட சாப்பிடலாம். புரதம் நிறைந்தது மட்டுமின்றி குறைவான கலோரியும் கொண்டது. முட்டையில் உள்ள வைட்டமிண் ஏ, பி12 மற்றும் செலனியம் போன்றவை உடல் நலனுக்கு ஆரோக்கியத்தை உண்டாகும். அவித்த முட்டையில் இருக்கும் மஞ்சள் கருவும் உங்களுக்கு ஆரோக்கியமான கொழுப்பையே வழங்கும்.
அவித்த முட்டை vs ஆம்லேட் - எது நல்லது?
இந்த இரண்டையும் ஒப்பிட்டால் ஆம்லேட்டில் எப்போதும் அதிக கலோரிகள் இருக்கும் என்பதை மறக்க வேண்டாம். காரணம், அதில் காய்கறிகள், சீஸ், வெண்ணெய், எண்ணெய் உள்ளிட்டவற்றை சேர்ப்பதால்... இருப்பினும் அதில் சமமான ஊட்டச்சத்துக்களை கொண்ட உணவு என்பதால் நிச்சயம் எடுத்துக்கொள்ளலாம்.
இரண்டுமே ஆரோக்கியமான கொழுப்புகள், புரதங்கள், ஊட்டச்சத்துக்களை அலிக்கும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களது டயட்டில் குறைந்த கலோரிகளை எடுக்க வேண்டும் என்றால் அவித்த முட்டையையும், சற்றே அதிகமாக கலோரிகள் தேவைப்பட்டால் ஆம்லேட்டையும் எடுத்துக்கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)
மேலும் படிக்க | தொப்பை கொழுப்பை வேகமாக குறைக்க இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ