எச்சரிக்கை! ‘இந்த’ அறிகுறிகள் மூளை நரம்பு பாதிப்பின் எச்சரிக்கை மணிகள்!

மூளையில் இருந்து பெறும் கட்டளையை ஏற்றுக் கொண்டு தான் மற்ற உறுப்புகள் வேலை செய்கின்றன என்பதால், மூளையின் நரம்புகள் பாதிக்கப்பட்டால் உடலின் இயக்கம் ஸ்தம்பித்து விடும் அல்லது கடுமையான பிரச்சனைகளை சந்திக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 30, 2023, 08:23 PM IST
  • மூளை நரம்பு பாதிப்பின் அறிகுறிகள்.
  • நரம்புகளின் பலவீனத்திற்கு பல காரணங்கள் உள்ளன.
  • மூளையின் நரம்புகள் பாதிக்கப்பட்டால் உடலின் இயக்கம் ஸ்தம்பித்து விடும் அல்லது கடுமையான பிரச்சனைகளை சந்திக்கும்.
எச்சரிக்கை! ‘இந்த’ அறிகுறிகள் மூளை நரம்பு பாதிப்பின் எச்சரிக்கை மணிகள்! title=

மனித உடலில் அனைத்து உறுப்புகளும் அவசியம் எனினும் என்றாலும், மூளை என்பது மிக முக்கியமான அங்கம். நமது செயல், நினைவுகள், ஆளுமை, அறிவாற்றல் என எல்லாவற்றையும் முறைப்படுத்துவது மூளை தான். மூளையில் இருந்து பெறும் கட்டளையை ஏற்றுக் கொண்டு தான் மற்ற உறுப்புகள் வேலை செய்கின்றன என்பதால், மூளையின் நரம்புகள் பாதிக்கப்பட்டால் உடலின் இயக்கம் ஸ்தம்பித்து விடும் அல்லது கடுமையான பிரச்சனைகளை சந்திக்கும். 

மூளை நரம்புகள் பலவீனமடைவது உங்கள் மனத் திறனையும் பாதிக்கிறது. அதாவது, உங்கள் சிந்திக்கும் திறனை பாதிக்கிறது. இதனால், சில சமயங்களில் நினைவாற்றலையும் பாதிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட நபருக்கு விஷயங்களை நினைவில் வைத்து பேசுவதை கடினமாகிறது. இது தவிர, பேசுவதில் குழப்பம் ஏற்பட்டாலும், மூளையின் நரம்புகளின் பலவீனம் காரணமாக இருக்கலாம். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உடனடியாக ஒரு மருத்துவரை சந்திக்க வேண்டும்.

உடலின் அனைத்து பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் உள்ள சிறிய பிரச்சனை கூட, உடலின் செயல்பாட்டை முழுமையாக பாதிக்கும். நரம்புகளின் பலவீனத்திற்கு பல காரணங்கள் உள்ளன. மூளையில் ஏற்படும் காயங்கள், உடலில் சில ஊட்டச்சத்துக்கள் இல்லாதது மற்றும் நரம்புகளில் அழுத்தம் ஆகியவை மூளையில் வலியை ஏற்படுத்துகின்றன. இதனுடன் சில சமயங்களில் தொற்று மற்றும் சில மருந்துகளாலும் மூளை நரம்புகளில் பலவீனம் ஏற்படும். இது தவிர, சில சமயங்களில் மற்ற காரணங்களாலும் மூளை நரம்புகளில் பலவீனம் ஏற்படும்.

மேலும் படிக்க | மன அழுத்தத்தை போக்கி மூளையை சுறுசுறுப்பாக்கும் ‘சில’ அற்புத மூலிகைகள்!

மூளை நரம்பு பாதிப்பின் அறிகுறிகள்

மூளையின் நரம்புகளில் பலவீனம் காரணமாக, ஆக்ஸிஜன் அனைத்து செல்களையும் சரியாகச் சென்றடையாது. இதனுடன், சில சமயங்களில் மூளையின் குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் நரம்புகளில் ரத்தம் சேர்வதால், திடீரென கடுமையான தலைவலியும் வரலாம். எனவே அடிக்கடி தலைவலி ஏற்பட்டால், ,மருத்துவரை உடனே கலந்தாலோசிக்கவும். அதேபோல், உங்கள் உடலில் கூச்ச உணர்வு அதிகம் இருந்தால், இவையும் மூளை நரம்புகள் பலவீனமடைவதற்கான அறிகுறிகளாகும். உங்கள் மூளையின் நரம்புகளில் இரத்தம் சரியாகச் செல்லவில்லை என்றால் உடலின் வெவ்வேறு பகுதிகளில் கூச்ச உணர்வு ஏற்படத் தொடங்கும். மேலும், மூளையின் எந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது என்பதைப் பொருத்து பேசும்திறன் இழத்தல் அல்லது பேசுவதில் சிரமம், ஒரு கை பலவீனமடைதல் அல்லது உடலின் ஒரு பகுதி பலவீனமடைதல், நடக்கும்போது சமநிலை இழத்தல், கை நடுக்கம் ஆகியவை இருந்தாலும், உடனெ மருத்துவரை அணுக வேண்டும்.

மேலும் படிக்க | Jaggery Benefits: ‘இந்த’ செய்தியை படித்தால் சர்க்கரையில் இருந்து வெல்லத்திற்கு மாறிடுவீங்க!

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனை பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சேதமடைந்த நுரையீரலுக்கும் புத்துயிர் கொடுக்கும் ‘வஜ்ரதந்தி’ மலர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News