மார்பக புற்றுநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வராமல் இருக்க வேண்டும் என்றால் ஆண்டுக்கு ஒருமுறை பெண்கள், மேமோகிராம் பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 04:43 PM IST
  • மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணிகள்
  • முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?
  • 30 வயது பெண்களுக்கும் மார்பக புற்றுநோய்
மார்பக புற்றுநோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? title=

இந்தியாவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. பெண்களிடையே அதிகம் இருக்கும் இந்த நோய், முன்பெல்லாம் வயதானவர்களிடையே அதிகம் இருந்தது. ஆனால், சமீபகாலமாக இளம் வயது பெண்களும் இத்தகைய பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். 30 வயது பெண்கள் கூட மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவதை காண முடிகிறது. 

டெல்லி, மும்பை, சென்னை மற்றும் புனே உள்ளிட்ட பெருநகரங்களைச் சேர்ந்த பெண்களிடையே மார்பக புற்றுநோய் அதிகளவில் உள்ளது. புற்றுநோய் வருவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. அவற்றில் முதன்மையானது தாய் அல்லது சகோதரிகளுக்கு இருந்தால், உடல் நலக்கோளாறுகளுக்காக அதிக அளவில் ஹார்மோன் மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் மார்பக புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இவை தவிர உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு உணவுகள் சாப்பிடுவதாலும் மார்பக புற்றுநோய் வருவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன.

மேலும் படிக்க | போலி பெருங்காயத்தால் பெரிய பாதிப்பு ஏற்படும்: போலியை கண்டுபிடிப்பது எப்படி?

மாதம் ஒருமுறையாவது பெண்கள், தங்களது மார்புகளை தாங்களாகவே சோதனை செய்து கொள்ளும் ‘சுய மார்பக பரிசோதனை’ குறித்து அறிந்து கொள்ள வேண்டும். மார்பில் வீக்கம், மார்பக தோலில் அதீத சுருக்கம், மார்பகத்தில் ரத்தக்கசிவு போன்ற வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாடவேண்டும். அதன்பிறகு. ‘மேமோகிராம்’ என்ற எக்ஸ்ரே டெஸ்ட், குறைந்த அளவிலான கதிர் வீச்சின் மூலம் மார்பகத்தில் புதிதாகத் தோன்றும் மாற்றங்களைக் கண்டறிந்து விடும்.

மார்பகத்தில் கட்டிகள் இல்லாவிட்டாலும்கூட, கட்டிகள் வருவதற்கான அறிகுறிகள், கால்சியம் அளவில் மாற்றங்கள் போன்றவற்றை இந்த பரிசோதனை காட்டிக்கொடுக்கும். இந்த மூலம் நோய்களை வருமுன் கண்டறிந்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது மேமோகிராம் பரிசோதனையை செய்வது அவசியம்.

மேலும் படிக்க | Anti Aging Facepack: இளமை இதோ இதோ என பாட வைக்கும் சிம்பிள் பேஸ்பேக்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News