Health Alert: முட்டைகளை தண்ணீரில் கழுவக் கூடாது; எச்சரிக்கும் நிபுணர்கள்

காய்கறி பழங்களை போலவே பலர் முட்டைகளை தண்ணீரில் கழுவும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வாறு செய்வது சரியல்ல என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 2, 2022, 06:15 PM IST
Health Alert: முட்டைகளை தண்ணீரில் கழுவக் கூடாது; எச்சரிக்கும் நிபுணர்கள் title=

சமைப்பதற்கு முன் எந்த பொருளையும் கழுவுவது மிகவும் முக்கியம். கொரோனா வைரஸ் பரவியதில் இருந்து, மக்கள் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், காய்கறி பழங்களை போலவே பலர் முட்டைகளை தண்ணீரில் கழுவும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவ்வாறு செய்வது சரியல்ல.

அமெரிக்க வேளாண்மைத் துறை, முட்டைகளை தண்ணீரில் கழுவுவது சரியல்ல என எச்சரித்துள்ளது. அனைத்து முட்டைகளும் தேவையான அளவிற்கு சுத்தம் செய்யப்பட்ட பின்பே விற்பனைக்கு வருகின்றன. அத்தகைய சூழ்நிலையில், அதை மீண்டும் வீட்டில் கழுவும்போது, ​​​​இந்த செயல்முறை முட்டையின் மேற்பரப்பில் இருந்து 'க்யூட்டிகல்' அல்லது 'ப்ளூம்' எனப்படும் அடுக்கை நீக்குகிறது.

மேலும் படிக்க | Heart Health: இதய நோய்களை மருந்து இல்லாமல் குணப்படுத்த செய்ய வேண்டியவை என்ன

கோழிப்பண்ணையில் முட்டைகளை கழுவும் முறை

அமெரிக்க வேளாண்மைத் துறை இது குறித்து மேலும் கூறுகையில், கோழி முட்டைகளை கழுவியவுடன், அதன் மீது உண்ணக்கூடிய கனிம எண்ணெய் பூசப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம், எந்த பாக்டீரியாவும் முட்டையை மாசுபடுத்தாது, முட்டையின் உள்ளே நுழைய முடியாது. முட்டை ஓடு நுண்துளையாக இருப்பதால், முட்டையை தண்ணீரில் கழுவினால், பாக்டீரியா முட்டைக்குள் நுழையும். முட்டைகளை தண்ணீரில் கழுவக்கூடாது என்பதற்கான காரணம் இதுதான்.

முட்டைகளை கழுவ சரியான வழி

நீங்கள் பல்பொருள் அங்காடி போன்ற இடங்களில் முட்டைகளை வாங்கினால், முட்டைகளை கழுவ வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், நீங்கள் முட்டைகளை கழுவாமல் சாப்பிட விரும்பவில்லை என்றால், நீங்கள் அவற்றை வெதுவெதுப்பான நீரில் கழுவலாம். முட்டையைக் கழுவினால் முட்டை கெட்டுப்போவது மட்டுமின்றி ஆரோக்கியமும் கெடும். எனவே, முட்டையை கழுவ வேண்டாம். அப்படி உங்களுக்கு சுத்தம் செய்ய வேண்டும் என தோன்றினல், ஈரமான துணியால் சுத்தம் செய்த பிறகு பயன்படுத்தவும்.

மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News