Coronavirus: அண்டார்டிகாவிலும் கொரோனா! விஞ்ஞானிகளுக்கு கோவிட் பாதிப்பு! இது ஒமிக்ரானா?

அண்டார்டிகாவில் இருந்தாலும் சரி, விடாமல் துரத்துவேன் என்று விஞ்ஞானிகளை பாடாய் படுத்துகிறது ஒமிக்ரான் வகை கொரோனா

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 1, 2022, 03:07 PM IST
  • அண்டார்டிகாவிலும் கொரோனா
  • ஆயிரக்கணக்கான மைல் கடந்தும் பாதிக்கிறதா ஒமிக்ரான்
  • உலகையே உலுக்கும் ஒமிக்ரான்
Coronavirus: அண்டார்டிகாவிலும் கொரோனா! விஞ்ஞானிகளுக்கு கோவிட் பாதிப்பு! இது ஒமிக்ரானா? title=

அண்டார்டிகாவில் துருவப்பகுதியில் உள்ள ஆராய்ச்சி நிலையத்தில் பணியாற்றுபவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள செய்தி வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அங்கு  பணியில் உள்ள மொத்தம் 25 துருவ ஆராய்ச்சியாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு கோவிட்-19 நோயின் பாதிப்பு (Covid Disease) ஏற்பட்டுள்ளதாக லு சோயர் செய்தித்தாள் (Le Soir newspaper) தெரிவித்துள்ளது.  

பெல்ஜியம் இளவரசி எலிசபெத் போலார் ஸ்டேஷனைச் (Belgium’s Princess Elisabeth Polar Station) சேர்ந்த இந்த ஆராய்ச்சியாளர்கள் முழுமையாக தடுப்பூசி போடவில்லை என்றும், ஆனால் மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இது, 1982 ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படமான ‘தி திங்’ கதையைப் போன்றே இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இந்தத் திரைப்படம் பிரபல பாலிவுட் திரைப்படமாகும். ஜான் கார்பெண்டர் ( John Carpenter)இன் திரைப்படம் இது.

Also Read | Omicron-ஐத் தொடர்ந்து வருகிறது Florona: இஸ்ரேலில் முதல் நோயாளி 

அண்டார்டிகாவில் உள்ள ஆராய்ச்சி நிலையத்திற்குச் செல்வதற்கு முன், இந்த நிபுணர்கள் பெல்ஜியத்தில் PCR சோதனைகளை செய்துள்ளனர். கேப் டவுனில், அவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மீண்டும் ஒரு PCR பரிசோதனையை மேற்கொண்டனர்.

அண்டார்டிகாவிற்குப் புறப்படுவதற்கு முன், மேலும் ஒரு சோதனை தேவைப்பட்ட நிலையில், ஐந்து நாட்களுக்குப் பிறகு இறுதி சோதனை செய்யப்பட்டது.

இப்படி பலகட்ட பரிசோதனைகளுக்குப் பிறகும், ஆராய்ச்சி நிலையத்திற்கு வந்த ஏழு நாட்களுக்குப் பிறகு ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. 

அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், மேலும் இருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் அங்கிருந்து வெளியேறிய பிறகும் வைரஸ் தொடர்ந்து பரவி வந்தது. இது ஓமிக்ரான் மாறுபாடு (Omicron Variant)போல் தெரிவதாக வெளிவரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. 

அந்த ஆராய்ச்சி நிலையத்தில் தற்போது புதிதாக வருபவர்களுக்கு அனுமதி இல்லை. தற்போது அந்த ஆராய்ச்சி நிலையத்தில் இரண்டு மருத்துவர்கள் உள்ளனர்.

ALSO READ | Corona prevention: வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News