Post Covid: அதிகமாக முடி உதிர்கிறதா? கொரோனா சிகிச்சை பெற்றவரா? இது உங்களுக்கான தீர்வு

முடி கொட்டுதல் என்பது பலருக்கும் கவலையளிக்கும் விஷாய்ம். அதிலும் தற்போது கொரோனா தொற்றால் பாதித்து, குணமடைந்தவர்களுக்கு தலைமுடி உதிர்வது அதிகமாக இருக்கிறது. இதற்கான காரணங்கள் என்ன? இதை தடுப்பதற்கான வழிமுறைகளை மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களிடம் கலந்தாலோசித்தோம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 2, 2021, 07:25 PM IST
  • கொரோனா பாதித்து, குணமடைந்தவர்களுக்கு தலைமுடி உதிர்வது அதிகரித்துவிட்டது
  • மன அழுத்தம், அழற்சி எதிர்வினைகள் போன்றவையே முடி உதிர்தலுக்கு முக்கிய காரணம்
  • கோவிடுக்கு பிந்தைய முடி உதிர்தலுக்கு காரணம் டெலோஜென் எஃப்ளூவியம்
Post Covid: அதிகமாக முடி உதிர்கிறதா? கொரோனா சிகிச்சை பெற்றவரா? இது உங்களுக்கான தீர்வு title=

முடி கொட்டுதல் என்பது பலருக்கும் கவலையளிக்கும் விஷாய்ம். அதிலும் தற்போது கொரோனா தொற்றால் பாதித்து, குணமடைந்தவர்களுக்கு தலைமுடி உதிர்வது அதிகமாக இருக்கிறது. இதற்கான காரணங்கள் என்ன? இதை தடுப்பதற்கான வழிமுறைகளை மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களிடம் கலந்தாலோசித்தோம். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.  

மன அழுத்தம், அழற்சி எதிர்வினைகள் போன்றவையே முடி உதிர்தலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. முடி இழப்பு என்பது கோவிட் -19 க்குப் பிந்தைய ஒரு சிக்கலான சிக்கலாகும், இது பலரால் அறிவிக்கப்பட்டது. தொற்றுநோய்களின் இரண்டாவது அலையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

கோவிட் பாதித்து குணமானவர்களுக்கு அதன் பிறகு ஏற்படும் சில பிரச்சனைகள் பொதுவானதாக இருக்கிறது. அதில் முக்கியமானவை, தொடர்ச்சியான தோல் ஒவ்வாமை, தடிப்பு, கண்களில் வறட்சி, உடல் பலவீனம் - சோர்வு மற்றும் முடி உதிர்தல் கோவிட் -19 க்குப் பிந்தைய சிக்கல்களாக உருவெடுத்துள்ளன.  

Also Read | திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் கொடுக்கும் முடி காணிக்கையின் மதிப்பு என்ன? தெரியுமா?

கோவிட் நோயிலிருந்து குணமடைந்த 30 நாட்களுக்குப் பிறகு நோயாளிகளுக்கு இந்த பிரச்சனைகள் தோன்றுகின்றன. ஆனால் சில நோயாளிகளில், இது கோவிட்  பாதித்தபோதும் ஏற்பட்டது.

உணவுப் பழக்கவழக்கங்கள், நோய்த்தொற்றின் போது காய்ச்சல், வைரஸால் பாதிக்கப்படும் மன அழுத்தம், எடை இழப்பு, தொடர்புடைய கவலை, திடீரென ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் தொடர்ச்சியான கோவிட் -19 அழற்சி எதிர்வினைகள் ஆகியவற்றால் ஏற்படும் பல்வேறு குறைபாடுகள் கோவிட் பாதித்தவர்களுக்கு பக்க விளைவாக ஏற்படுகிறது.

முடி உதிர்தல் தொடர்பான பிரச்சனைகள் வழக்கத்தை விட இருமடங்கு அதிகமாக உள்ளது. சரிவிகித ஊட்டச்சத்து எடுத்துக்கொள்ளாதது, உடல் எடையில் திடீர் மாற்றங்கள், ஹார்மோன் தொந்தரவுகள் மற்றும் வைட்டமின் டி மற்றும் பி 12 ஆகியவற்றின் அளவு குறைவது என கோவிட்டிலிருந்து குணமானவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.  

Also Read | Hair Donation: தலைமுடியிலா அழகு இருக்கிறது? கேள்வி எழுப்பும் முடிதானம் செய்த Dancer

ஆனால் கோவிட் பாதிப்புக்கு பிந்தைய முடி உதிர்தல் தற்காலிகமானது தான். அதற்கு டெலோஜென் எஃப்ளூவியம் (Telogen Effluvium) என்ற நிலை காரணமாக உள்ளது. இது கோவிட் பாதிப்பின்போது ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் பிற பாதிப்புகளால் உடலில் நீடிக்கும் அதிர்ச்சியின் விளைவாகும்.

பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 100 முடியை இழக்கலாம், ஆனால் டெலோஜென் எஃப்ளூவியம் காரணமாக, முடி உதிர்தல் நாளொன்றுக்கு 300-400 என்ற விகிதத்தில் அதிகரிக்கலாம். எனவே, கோவிடால் பாதிக்கப்பட்டவர்கள் வைட்டமின்கள் மற்றும் இரும்பு சத்து நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன, ஏனெனில் இரும்புச்சத்து குறைபாடு முடி உதிர்தலை மேலும் துரிதப்படுத்தும், மேலும் புரதம் நிறைந்த மற்றும் சீரான உணவு உட்கொள்வது தற்காலிகமாக முடி உதிர்தலைக் குறைப்பதற்கான ஒரு தீர்வாகும்.

Also Read | Beauty Queen: தலைமுடியைத் துறந்ததால், மகுடம் சூடிய நடன மயில்

ஊட்டச்சத்துள்ள உணவை உட்கொள்ள தொடங்கிய 5-6 வாரங்களுக்கு பிறகும் முடி உதிர்வது குறையவில்லை எனில் பிறகு மருத்துவரிடம் சென்றால் போதுமானது. 

மேலும், அதிகப்படியான முடி உதிர்தலைத் தவிர்க்க பொதுவாக கடைபிடிக்கப்படும் முடி பராமரிப்பு தீர்வுகளை கடைபிடித்தால் போதும். லேசான, பாராபென் மற்றும் சல்பேட் இல்லாத ஷாம்பூக்களைப் (mild, paraben, and sulphate free shampoos) பயன்படுத்த வேண்டும்.

உச்சந்தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வதைத் தவிர்க்கவும், அதிக இடைவெளியில் பற்கள் கொண்ட சீப்பை மட்டுமே தலைமுடிக்கு பயன்படுத்தவும். 

Also Read | எனது தலைமுடியே எனது அடையாளம் எனக் கூறும் 6 அடி கூந்தல் அழகி...!!

இந்த தற்காலிக முடி உதிர்தலை நினைத்து மனதில் கவலையோ அழுத்தமோ ஏற்பட தேவையில்லை.  தியானம் செய்யலாம், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடலாம்.

ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும், சிகை அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் ரசாயனங்களை பயன்படுத்த வேண்டாம். தலையை காய வைக்க மின்சார ஹீட்டரையும் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

தலையில் வழுக்கைத் திட்டுகள் உருவாகினாலும், முடி கொட்டுதலின் அளவு மிக அதிகமாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவும்.  ஊட்டச்சத்துள்ள உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டு மன அழுத்தத்தைக் குறைத்தாலே கோவிடுக்கு பிந்தைய சிக்கல்களை சமாளிக்கலாம். முடி உதிர்வதையும் தவிர்க்கலாம்.  

Also Read | Healthy Hair Tips: நரைமுடியை குறைத்து, தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News