நீண்ட காலமாக உடலுறவு கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் விளைவு என்ன தெரியுமா?

Sexual Health News: நீண்ட காலமாக உடல் உறவு கொள்ளாததால் ஏற்படும் விளைவு என்ன தெரியுமா? இதைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், உடலுறவு கொள்வதை நிறுத்தினால் அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி இந்த கட்டுரையில் நாம் பார்ப்போம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 4, 2021, 04:29 PM IST
  • உடல் உறவு இல்லாததால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம் அடையலாம்.
  • உடலுறவு இல்லாமல் இருந்தால் பெண்களின் பிறப்புறுப்பின் ஆரோக்கியம் குறையலாம்.
  • உடல் உறவில் ஈடுபடவில்லை என்றால், கர்ப்பம் தரிப்பது பற்றி கவலைப்பட வேண்டாம்.
நீண்ட காலமாக உடலுறவு கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் விளைவு என்ன தெரியுமா? title=

Sexual Health News: எல்லோருடைய வாழ்க்கையிலும் சில காலங்களில் உடல் உறவு கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. மனைவி/கணவன் பிரிந்து இருப்பது, உடலுறவு மீது ஆசை இல்லாமை அல்லது சில குறைபாடுகள் போன்ற பல காரணங்கள் இதற்குப் பின்னால் இருக்கலாம். ஆனால் நீண்ட காலமாக உடல் உறவு கொள்ளாததால் ஏற்படும் விளைவு என்ன தெரியுமா? இதைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், உடலுறவு கொள்வதை நிறுத்தினால் அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் (Side Effects of not sexual relation) பற்றி இந்த கட்டுரையில் நாம் பார்ப்போம்.

புளோ ஹெல்த் (Flo Health) தலைமை அறிவியல் அதிகாரி அன்னா க்ளெப்சுகோவா (Anna Klepchukova), நீண்ட காலம் பாலியல் செயல்பாடுகளில் (Sexual Activity) இருந்து விலகி இருப்பது உங்கள் உடலில் பின்வரும் மோசமான மற்றும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்.

உடலுறவு கொள்ளவில்லை என்றால் ஏற்படும் பக்க விளைவுகள்:

நோய் எதிர்ப்பு சக்தி குறைய வாய்ப்பு:
உடல் உறவு இல்லாததால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம் அடையலாம். இதன் காரணமாக விரைவாக உங்களுக்கு பல நோய்த்தொற்றுகள் மற்றும் காய்ச்சல் ஏற்படலாம். ஒரு ஆய்வில், வழக்கமான பாலியல் உறவு வைத்திருப்பவர்களுக்கு, உமிழ்நீரில் நோய்த்தொற்றை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் (Immunoglubulin A) அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

ALSO READ | Allergy: ஆணுறையும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் அதற்கான காரணம் தெரியுமா?

பெண்களின் ஆரோக்கியம்: பிறப்புறுப்புகளின் ஆரோக்கியம் குறையும்
உடல் உறவு இல்லாத காரணமாக, பெண்களின் பிறப்புறுப்பின் ஆரோக்கியம் குறையலாம். சீரான இரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்படலாம் மற்றும் அடுத்த முறை நீங்கள் உடல் உறவில் ஈடுபடும்போது அதன் மீதான நாட்டம் (decrease in women's libido) குறைவதைக் காணலாம் 

ஆண்கள் ஆரோக்கியம்: இதய ஆரோக்கியத்திற்கு ஆபத்து ஏற்படலாம்
அண்ணா க்ளெப்சுகோவாவின் (Anna Klepchukova) கருத்துப்படி, சீரான இடைவெளியில் வழக்கமான உடல் உறவு இல்லையென்றால் இதய நோய்களின் ஆபத்து அதிகரிக்கும். உடலுறவு கொள்ளும் போது உடன்பு ஒரு வகை உடற்பயிற்சி போல செயல்படுகிறது. இது உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவை சமநிலைப்படுத்துகிறது. இதனால் இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

மாதவிடாய் காலத்தில் கடுமையான வலி:
நீண்ட காலம் உடலுறவு கொள்ளாமல் இருப்பது, மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு அதிக பிரச்சினைகள் ஏற்படலாம். அதேநேரத்தில் உடலுறவு கொள்ளும் போது, ​​எண்டோர்பின் ஹார்மோன்கள் பெண்களுக்குள் அதிகரித்து கருப்பை சுருக்கம் அதிகரிக்கிறது. இந்த இரண்டு விஷயங்களும் பெண்களுக்கு மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுகின்றன.

ALSO READ | CORONA VACCINE போட்டுக்கொண்ட 3 நாட்களுக்கு உடலுறவு கூடாது – மருத்துவ வல்லுநர்கள்

நீண்ட காலமாக உடலுறவு செய்யாமலிருந்தால் லிபிடோ (Libido) அதாவது பாலியல் மீது ஆசை குறையலாம். செக்ஸின் மீது நாட்டம் அதிகரிக்க வழக்கமான உடலுறவு அவசியம் தேவை. அதேநேரத்தில் சீரான இடைவெளியில் உடல் உறவுகள் இல்லாதது உங்கள் துணையுடனான உறவையும் பாதிக்கும். இருப்பினும், இது பரஸ்பர புரிதலைப் பொறுத்தது.

நீண்ட காலமாக பாலியல் உறவில் ஈடுபடாமல் இருப்பதன் நன்மைகள்:
நீங்கள் நீண்ட காலமாக உடல் உறவில் ஈடுபடவில்லை என்றால், சில நன்மைகளையும் பெறலாம். அது கர்ப்பம் தரிப்பது பற்றி கவலைப்பட வேண்டாம் மற்றும் சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று ஏற்படும் பயமும் இருக்காது.

ALSO READ | உடலுறவின் போது உடைந்த ஆணுறுப்பு! இப்படி எல்லாம் நடக்குமா? அறிந்து கொள்ளுங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News