வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் என்னவாகும், கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்

வாழைப்பழம் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பப்படும் ஒரு பழமாகும். பெரும்பாலான மக்கள் ஆண்டு முழுவதும் வாழைப்பழங்களை சாப்பிடுகிறார்கள். அதன் பக்க விளைவுகள் என்னவென்று தெரியுமா? இதுபோன்ற சில நம்ப முடியாத விஷயங்களை இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 8, 2022, 06:40 AM IST
  • ஒற்றைத் தலைவலியின் வலியை மேலும் அதிகரிக்கும்.
  • வாழைப்பழத்தில் அதிக அளவு கலோரிகள் உள்ளன.
  • வாழைப்பழத்தில் மாவுச்சத்தின் அளவு அதிகமாக இருக்கிறது.
வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் என்னவாகும், கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள் title=

வீட்டில் உள்ள பழக்கூடையில் வாழைப்பழம் வைத்திருப்பதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். பழங்கள் என்று கூறினால் முதலில் வாழைப்பழத்தின் பெயர்தான் நினைவுக்கு வரும். வாழைப்பழம் அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையானது மற்றும் பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. சிலர் வாழைப்பழத்தை ஷேக் செய்து குடிக்கவும் விரும்புகிறார்கள். அதேபோல் ஜிம்மிற்கு செல்பவர்களும் வாழைப்பழ ஷேக்கை அடிக்கடி குடிப்பார்கள். வாழைப்பழத்தை அதிகமாக உட்கொள்வது உங்களை நோய்வாய்ப்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதை கேட்கும் போது உங்களுக்கு விசித்திரமாக இருந்தால் இந்த செய்தியை கண்டிப்பாக படியுங்கள்.

வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்
வாழைப்பழத்தில் உள்ள சத்துக்களைப் பார்த்தால், வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி மற்றும் மெக்னீசியம் தவிர, வைட்டமின்-சி, பொட்டாசியம் மற்றும் வைட்டமின்-பி6, தயாமின், ரிபோஃப்ளேவின் போன்றவை உள்ளன. வாழைப்பழத்தில் 64.3 சதவீதம் தண்ணீர், 1.3 சதவீதம் புரதம், 24.7 சதவீதம் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை நாம் உடலுக்கு மிகவும் அவசியம்.

மேலும் படிக்க | Vitamin D பற்றாக்குறை கொரோனா நோயாளிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

வாழைப்பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் 4 முக்கிய தீமைகள்

1. நீங்கள் ஒற்றைத் தலைவலி பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், வாழைப்பழத்தை குறைவாக சாப்பிட வேண்டும். உண்மையில், வாழைப்பழத்தில் டைரமைன் என்ற பொருள் உள்ளது, இது ஒற்றைத் தலைவலியின் வலியை மேலும் அதிகரிக்கும். சிலருக்கு வாழைப்பழம் என்றால் அலர்ஜியாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

2. வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இதை அதிகமாக உட்கொள்வதால், இரத்தத்தில் அதிகப்படியான பொட்டாசியம் ஏற்படலாம், இதன் காரணமாக ஹைபர்கேமியா பிரச்சனை ஏற்படலாம், சில சமயங்களில் இது மாரடைப்புக்கும் வழிவகுக்கும். வாழைப்பழத்தில் மாவுச்சத்தின் அளவு அதிகமாக இருப்பதால், வாழைப்பழத்தை உட்கொள்வதால் பல் பிரச்சனைகளும் ஏற்படும்.

Banana | Zee News

3. வாழைப்பழத்தை அதிகமாக உட்கொண்டால் உடல் எடை கூடும். நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், நீங்கள் அதை உட்கொள்ளக்கூடாது. வாழைப்பழத்தில் அதிக அளவு கலோரிகள் உள்ளன, இது உங்கள் எடையை அதிகரிக்கும். நீங்கள் வாழைப்பழம் சாப்பிடுகிறீர்கள் என்றால், உடல் ஆரோக்கியத்துடன் இருக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

4. வாழைப்பழத்தில் இயற்கையான சர்க்கரையின் அளவும் அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வாழைப்பழங்களை அதிக அளவில் உட்கொள்வது இரத்த சர்க்கரையை அதிகரிக்கும், இது உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News